இந்திய அரசியலமைப்பின் பகுதி XVII, 343 முதல் 351 பிரிவு வரை அலுவல் மொழிகளைப் (official languages) பற்றி கூறுகிறது.
பிரிவு 343-ன் ("ஒன்றிய அரசின் அலுவல் மொழியின்") உப பிரிவு 1 "ஒன்றிய அரசின் அலுவல் மொழி தேவநாகரி எழுத்துருவில் உள்ள இந்தி மொழியாக இருக்கும்" மற்றும் "அலுவல் அரசின் அரசு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் எண்களின் வடிவம் இந்திய எண்களின் சர்வதேச வடிவமாக இருக்கும்." என்று கூறுகிறது.
அரசியலமைப்புச் சட்டம் தொடங்கிய 15 ஆண்டுகளுக்கு, ஒன்றியத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ பணிகளுக்கும் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று பிரிவு 343(2) கூறுகிறது. இந்திய அரசியலமைப்பு ஜனவரி 26, 1950 அன்று நடைமுறை அல்லது அமலுக்கு வந்தது.
“15-ஆண்டுகளுக்குப் பிறகு, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக (அ) ஆங்கில மொழி அல்லது (ஆ) தேவநாகரி எண் வடிவத்தைப் பயன்படுத்துவதற்கு நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என்று பிரிவு 343(3) கூறுகிறது.
ஜனவரி 26, 1965 அன்று, 1963-ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டத்தின் பிரிவு 3 நடைமுறைக்கு வந்தது. இது அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்ட 15 ஆண்டு காலம் காலாவதியான பிறகும், "ஒன்றியத்தின் அலுவல் நோக்கங்களுக்காகவும், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தவும் ஆங்கில மொழியைத் தொடர" வழிவகுத்தது.
உங்களுக்குத் தெரியுமா:
நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மொழிகளும் 270 தாய்மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன. இருப்பினும், அரசியலமைப்புச் சட்டம் எந்த ஒரு மொழியையும் இந்தியாவின் "தேசிய மொழி" (national language) என்று பட்டியலிடவில்லை.
அரசியலமைப்புச் சட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 5 ஆண்டுகள் முடிந்த பிறகும், அதன் பின்னர் 10 ஆண்டுகள் முடிந்த பிறகும், குடியரசுத்தலைவரால் ஒரு ஆணையத்தை அமைக்க பிரிவு 344 (1) அதிகாரம் வழங்குகிறது. ஆணையம் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளப்படி பல்வேறு மொழிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
மாநிலத்தின் அலுவல் மொழியைப் பற்றி 345-வது பிரிவு பேசுகிறது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், அந்த மாநிலத்தில் பயன்பாட்டில் உள்ள ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை அல்லது இந்தி மொழியை அந்த மாநிலத்தின் அனைத்து அல்லது எந்தவொரு அலுவல் நோக்கங்களுக்கும் பயன்படுத்தப்படும் மொழியாகவோ அல்லது மொழிகளாகவோ சட்டப்படி ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மாநில சட்டமன்றம் வேறுவிதமாக சட்டப்படி வழங்கும் வரை, இந்த அரசியலமைப்பு தொடங்குவதற்கு முன்பு உடனடியாகப் பயன்படுத்தப்பட்ட மாநிலத்திற்குள் அலுவல் நோக்கங்களுக்காக ஆங்கில மொழி விதிகளுக்கு உட்பட்டு தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று 346 மற்றும் 347 பிரிவுகள் கூறுகின்றன.
குறைகளைத் தீர்ப்பதற்கான பிரதிநிதித்துவங்களில் பயன்படுத்த வேண்டிய மொழி
“ஒவ்வொரு நபரும் குறையை நிவர்த்தி செய்வதற்காக, ஒன்றியத்திலோ அல்லது மாநிலத்திலோ பயன்படுத்தப்படும் எந்தவொரு மொழியிலும், எந்தவொரு அரசு அலுவலரிடமும் புகார் அல்லது கோரிக்கையை வைக்கலாம் என்று பிரிவு 350 கூறுகிறது.
தொடக்கக் கல்வி நிலையில் தாய்மொழியில் கற்பிப்பதற்கான வசதிகள்
மொழியியல் சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியில் தாய்மொழியில் கற்பிப்பதற்கான போதுமான வசதிகளை (adequate facilities) வழங்க மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு பிரிவு 350A சிறப்பு அதிகாரத்தை வழங்குகிறது. மேலும், அத்தகைய வசதிகளை வழங்குவதற்குத் தேவையான அல்லது சரியானதாகக் கருதும் எந்தவொரு மாநிலத்திற்கும் குடியரசுத் தலைவர் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கலாம்.
அழிந்து வரும் மொழிகள் (endangered languages) யாவை?
உலகம் அதன் மொழிகளை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறது. அவற்றில் பலமொழிகள் அழிந்து வரும் மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், மொழிகளின் இழப்பு கலாச்சார இழப்புக்கு சமமானதாகும். என்று டாக்டர் கே ஸ்ரீனிவாசராவ் சாகித்ய அகாடமியின் செயலாளர் தெரிவித்துள்ளர்.
நிபுணர்களின் கூற்றுப்படி, உலகின் 7,000 மொழிகளில் ஏறக்குறைய 40 சதவீத பழங்குடி மக்கள் குழுக்கள் பேசும் பேச்சு வழக்குகள் மொழிகள் உட்பட பல மொழிகள், ஏற்கனவே மறைந்துவிட்டன. மேலும், பல மொழிகள் அழிந்துபோகும் விளிம்பில் உள்ளன.
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி, “ஒரு மொழியின் பேச்சாளர்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தும்போது, தகவல் தொடர்பு களங்களில் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தும்போது, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு அதைக் கற்பிப்பதை நிறுத்தும்போது அந்த மொழி ஆபத்தில் இருக்கும். இதனால், புதிய பேச்சாளர்கள், பெரியவர்கள் அல்லது குழந்தைகள் அந்த மொழியை பயன்படுத்த வாய்ப்பில்லாத சூழல் உருவாகும்.
UNESCO மொழிகளை ஆபத்தின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளது அதன் படி: (i) பாதிக்கப்படக்கூடியது (ii) நிச்சயமாக அழிந்து வருவது (iii) கடுமையாக அழிந்து வருவது (iv) மிகவும் ஆபத்தில் உள்ளது என்று வகைப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அழிந்து வரும் மொழிகள்
இந்தியாவில் பல மொழிகள் எழுதப்படுகிறது. மேலும் பல குரல்களில் பேசப்படுகிறது. ஆனால், அனைத்து மொழிகளும் இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் பட்டியலிடப்படவில்லை அல்லது பாரம்பரிய மொழிகள் (classical languages) என்ற அடையாளம் பெறவில்லை இத்தகைய மொழிகள் பெரும்பாலும் அழிந்து போவதற்கான சவால்களை எதிர்கொள்கின்றன மற்றும் அச்சுறுத்தலுக்குள்ளான (endangered) மொழிகளாக மாறுகின்றன.
இலக்கிய விமர்சகரும் ஆர்வலருமான கணேஷ் நாராயண் தேவி, 2020-ஆம் ஆண்டு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அட்ரிஜா ராய்சௌத்ரிக்கு அளித்த பேட்டியில், 10,000-க்கும் குறைவான மக்களால் பேசப்படும் மொழி அழிந்து வரும் நிலையில் உள்ளது. இந்தியாவில், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, 10,000-க்கும் குறைவான மக்களால் பேசப்படும் எந்த மொழியையும் அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் சேர்க்க வேண்டியதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்தது. எனவே, இந்தியாவில், 10,000-க்கும் குறைவான மக்களால் பேசப்படும் அனைத்து மொழிகளையும் அரசு குறிப்பிடத் தகுதியற்றதாகக் கருதி, UNESCO-வால் அழிந்து வரும் நிலையில் உள்ள மொழிகளாகக் கருதுகிறது. எனது கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஏறக்குறைய 780 மொழிகள் உள்ளன. அவற்றில் சுமார் 600 மொழிகள் அழிந்து வரும் நிலையில் உள்ளன. 1991 மற்றும் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 122 மொழிகளுக்கு மேல் இல்லை என்று தெரிவிக்கின்றன. னவே, மற்ற மொழிகளை ஆபத்தில் உள்ளவை (potentially endangered) என்று அழைக்க வேண்டும்.
அத்தகைய மொழிகளின் எடுத்துக்காட்டுகள் வடரி, கோலாட்டி, கோலா, கிசாரி மொழிகளாகும். இவை நாடோடி மக்களின் மொழிகள். மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பேசப்படுகின்றன. பின்னர் பவுரி, கோர்கு, ஹால்டி, மவ்ச்சி போன்ற பல பழங்குடி மொழிகளும் உள்ளன. அசாமில், மோரன், டாங்சா, ஐடன் உள்ளன. கடந்த 60 ஆண்டுகளில் 250 மொழிகள் மறைந்ததாகத் தெரிகிறது. அதூனி, டிச்சி, கல்லு, ஹெல்கோ, கட்டகி என்று அழைக்கப்படும் மொழிகள் இருந்தன. அந்தமானில் உள்ள போ மொழி 2010இல் மறைந்துவிட்டது. சிக்கிமில் உள்ள மாஜ்ஹி மொழி 2015-ல் மறைந்துவிட்டது. ஆனால், ஒரு மொழி கடைசி நேரத்தில் மறைந்து போவதைக் காட்டுவது சாத்தியமற்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு மொழி என்பது ஒரு தனி வாழ்க்கை முறை அல்ல. அது மிகப் பெரிய குறியீட்டு அமைப்பு. குறியீடுகள் முறிந்துவிடும் போது அது ஒரு நொடியிலல்ல, ஒரு நீண்ட காலத்தில் நிகழ்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
சர் ஜார்ஜ் ஆபிரகாம் கிரியர்சன் 1901 மற்றும் 1928-க்கு இடையில் இந்திய மொழியியல் கணக்கெடுப்பை நடத்தினார். 2011 மொழியியல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 121 தாய்மொழிகள் உள்ளன. அவற்றில் 8வது அரசியலமைப்பு அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகள் அடங்கும். இந்தி மிகவும் பரவலாகப் பேசப்படுகிறது. 52.8 கோடி தனிநபர்கள் அல்லது மக்கள் தொகையில் 43.6% பேர் இதை தங்கள் தாய்மொழியாக அறிவிக்கின்றனர். அடுத்த மிக உயர்ந்த மொழி பெங்காலி, 9.7 கோடி (8%) பேருக்கு தாய்மொழியாகும். இது இந்தியின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானது. தாய்மொழியைப் பொறுத்தவரை, இந்தியாவில் 2011-ல் 2.6 லட்சம் மக்கள் மட்டுமே ஆங்கிலம் பேசுபவர்களாக இருந்தனர். அந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கணக்கிடப்பட்ட 121 கோடி மக்களில் ஒரு சிறிய பகுதியாகும்.
அழிந்து வரும் மொழிகளைக் காப்பாற்ற முடியுமா? அத்தகைய மொழிகளைப் பாதுகாக்க என்ன முயற்சிகள் உள்ளன?
ஒவ்வொரு மொழியின் அழிவும் தனித்துவமான சுற்றுச்சூழல், வரலாற்று மற்றும் கலாச்சார அறிவை நிரந்தரமாக இழக்கச் செய்கிறது. ஒவ்வொரு மொழியும் உலகின் மனித அனுபவத்தின் தனித்துவமான வெளிப்பாடாகும். கூடுதலாக, இந்திய அரசியலமைப்பில் குறைந்தபட்சமான மொழிகளைக் காக்கும் உரிமை (fundamental right) வழங்கப்பட்டுள்ளது. “இந்திய நிலத்தில் அல்லது அதில் உள்ள எந்த பகுதியிலும் வாழும் குடிமக்களின் எந்த ஒரு பிரிவு தங்களுடைய தனித்துவமான மொழி, எழுத்து அல்லது பண்பாட்டைக் கொண்டிருந்தால், அதனை பாதுகாக்க உரிமை உண்டு”என்று பிரிவு 29 கூறுகிறது.
அழிந்து வரும் மொழிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (Scheme for Protection and Preservation of Endangered Languages (SPPEL))
இந்திய அரசு, அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாத்தல் திட்டத்தை (SPPEL) செயல்படுத்தி வருகிறது. இது 2013-ஆம் ஆண்டு கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.
இந்தியாவின் அழிந்து வரும் அல்லது எதிர்காலத்தில் அழிந்து போகும் வாய்ப்புள்ள மொழிகளை ஆவணப்படுத்தி காப்பகப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டம் கர்நாடகாவின் மைசூரில் அமைந்துள்ள இந்திய மொழிகளுக்கான ஒன்றிய நிறுவனம் (Central Institute of Indian Languages (CIIL)) மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த பணிக்காக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் CIIL ஒண்றிணைந்து செயல்படுகிறது.
போதுமான ஆவணங்கள் இல்லாமல், அழிந்துபோன ஒரு மொழியை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்று UNESCO கூறுகிறது.
10,000-க்கும் குறைவான பேச்சாளர்களால் பேசப்படும் மொழிகள் அல்லது முன்னர் மொழியியல் ரீதியாக ஆய்வு செய்யப்படாத மொழிகள் இந்த திட்டத்தில் முக்கியமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, 117 மொழிகள் ஆவணப்படுத்தலுக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) முயற்சிகள்
அழிந்துவரும் மொழிகளின் பாதுகாப்பிற்காக பல்கலைக்கழக மானியக் குழு அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாப்பதற்காக, ‘இந்தியாவில் உள்ள பூர்வீக மற்றும் அழிந்துவரும் மொழிகளில் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி’ மற்றும் ‘மத்தியப் பல்கலைக்கழகங்களில் அழிந்துவரும் மொழிகளுக்கான மையங்களை நிறுவுதல்’ ஆகிய இரண்டு திட்டங்களை தொடங்கியுள்ளது.
2022 முதல் 2032 வரையிலான பத்தாண்டு காலத்தை பூர்வீக மொழிகளின் பாதுகாப்பு மற்றும் பரப்புதலுக்காக யுனெஸ்கோ சர்வதேச பழங்குடி மொழிகளின் காலமாக அறிவித்துள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
உலகளவில் எட்டு பில்லியன் மக்கள் சுமார் 7,000 மொழிகளைப் பேசுகிறார்கள். இந்த மொழிகள் சுமார் 140 குடும்பங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பெரும்பாலான பேச்சுவழக்குகள் ஆகிய இந்தோ-ஐரோப்பிய, சீன-திபெத்திய, நைஜர்-காங்கோ, ஆஃப்ரோ-ஆசிய மற்றும் ஆஸ்ட்ரோனேசியன் மொழிகள் ஐந்து முக்கிய குழுக்களைச் சேர்ந்தவை. இருப்பினும், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், பழைய நோர்ஸ் மற்றும் ஆங்கிலம் அனைத்தும் அவற்றின் வேர்களை மிகவும் பழமையான மொழியில் கொண்டுள்ளன. புரோட்டோ-இந்தோ-ஐரோப்பிய, 'முதல்' என்று பொருள்படும் புரோட்டோவை, அது உருவாக்கிய மொழி குடும்பத்தின் பெயரான இந்தோ-ஐரோப்பியத்துடன் இணைக்கிறது.
UNESCO உலக மொழிகளின் வரைபடம்
UNESCO உலக மொழிகளின் அட்லஸ் என்பது ஒரு மாறும் மற்றும் ஊடாடும் ஆன்லைன் கருவியாகும். இது பயனர்களால் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. இது மொழி நிலை, உயிர்ச்சக்தி, ஆபத்து மற்றும் நிலைத்தன்மையின் பல்வேறு அம்சங்களையும் ஆவணப்படுத்துகிறது. இது மொழிகளின் விரிவான பதிவாகும். இது மொழிப் பாதுகாப்பு, கண்காணிப்பு, ஊக்குவிப்பு மற்றும் மொழி தொடர்பான பிரச்சினைகள் குறித்த அறிவுப் பகிர்வுக்கான ஒரு தனித்துவமான வளமாகும். அத்துடன் மொழி கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான ஒரு கலந்துரையாடும் கருவியாகும்.