முதல்படியாக, நியாயமான நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு அடிப்படை விலை நிர்ணயத்தை இந்தியா ஏற்றுக்கொள்வதை உறுதி செய்வது முக்கியம்.
கார்பன் நீக்கத்தில் கவனம் செலுத்தும் இந்தியா, குறிப்பாக மின்சார வாகன (electric vehicle (EV)) ஏற்றுக்கொள்ளும் துறையில் விரைவான மின்மயமாக்கலைக் கண்டுள்ளது. இந்தியாவின் மின்சார வாகன லித்தியம் மின்கல தேவை 2023-ல் 4 கிகாவாட்லிருந்து 2035-ஆம் ஆண்டுக்குள் 139 கிகாவாட்-மணிநேரங்களுக்கு வேகமாக உயரலாம் என்ற கணிப்புகள் உள்ளன. இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக, 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய மின்கல சேமிப்பு அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் லித்தியம் மின்கலன்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்பது ஒரு நல்ல விஷயம் என்றாலும், பழைய மின்கலன்கள் முறையாக மறுசுழற்சி செய்யப்படாவிட்டால் அது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். லித்தியம் மின்கலன்களை தவறான வழியில் தூக்கி எறிவது மண்ணிலும் நீரிலும் ஆபத்தான இரசாயனங்கள் கசிவை ஏற்படுத்தும். மின்கல கழிவுகளின் அளவு அதிகரித்து வருகிறது. மேலும் 2022-ஆம் ஆண்டில், 1.6 மில்லியன் மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகளில் லித்தியம் மின்கலன்கள் மட்டும் 7,00,000 ஆக இருந்தன. இந்த சிக்கலைச் சமாளிக்க, மின்கலன்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கையாளப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் 2022-ஆம் ஆண்டில் மின்கல கழிவு மேலாண்மை விதிகளை (Battery Waste Management Rules (BWMR)) அறிமுகப்படுத்தியது.
முதல் பிரச்சனை அடிப்படை விலை
விதிகளின் முக்கிய அம்சமாக நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) உள்ளது, இது உற்பத்தியாளர்களை மின்கலம் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சிக்கு நிதியளிக்க கட்டாயப்படுத்துகிறது, மேலும் மின்கல மதிப்பு சங்கிலியை மூடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உற்பத்தியாளர்கள் தங்கள் மறுசுழற்சி இலக்குகளை அடைய மறுசுழற்சியாளர்களை நம்பியிருக்கின்றனர், ஏனெனில் அவர்களிடம் மின்கல கழிவு சேகரிப்புக்கான தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு இல்லை. நடைமுறையில், மறுசுழற்சியாளர்கள், உற்பத்தியாளர்கள் தங்கள் மறுசுழற்சி கடமைகளை நிறைவேற்றியதை உறுதிப்படுத்தும் EPR சான்றிதழ்களுக்கு ஈடாக, அடிப்படை விலையான EPR அடிப்படை விலையைப் பெற வேண்டும். EPR அடிப்படை விலை, மறுசுழற்சியாளர்களுக்கு உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழிலாளர், தொழில்நுட்பம் மற்றும் மறுசுழற்சி முறைகளுக்கான அவர்களின் முன்கூட்டிய முதலீட்டிற்கு போதுமான இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, சில தடைகள் உள்ளன. முதலாவது, நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (Extended Producer Responsibility (EPR)) அடிப்படை விலை மிகவும் குறைவாக இருப்பதால் உற்பத்தியாளர்களால் உருவாக்கப்படும் மின்கல கழிவுகளின் வலுவான மறுசுழற்சியைத் தக்கவைக்க முடியாது. லித்தியம் மின்கல கழிவுகளை சரியான முறையில் அகற்றுவதற்கு அதிக செலவு ஆகும். ஏனெனில், அதற்கு சிறப்பு தொழில்நுட்பம், பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் இயற்கையை மாசுபடுத்தும் தீங்கு விளைவிக்கும் பொருட்களைத் தடுக்க திறமையான தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள்.
லித்தியம்-அயன் மின்கலன்களில் கோபால்ட், லித்தியம் மற்றும் நிக்கல் போன்ற மதிப்புமிக்க மற்றும் அரிய தாதுக்கள் உள்ளன. அவற்றின் திறமையான மீட்பு இந்தியாவின் இறக்குமதி சார்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும். EPR அடிப்படை விலை சரியான மறுசுழற்சி செலவுகளை போதுமான அளவில் ஈடுகட்டவில்லை என்றால், சட்டபூர்வமான மறுசுழற்சியாளர்கள் நிலையான முறையில் செயல்படுவது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றதாகிவிடும். இதன் விளைவாக, முறைசாரா மற்றும் மோசடியான மறுசுழற்சியாளர்கள் செழித்து வளர்கிறார்கள். சந்தை சிதைவுகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு தவறான ஊக்கத்தொழில்களை உருவாக்குகிறது. அவர்கள் சில நேரங்களில் போலி மறுசுழற்சி சான்றிதழ்களை வழங்குகிறார்கள் அல்லது ஆபத்தான கழிவுகளை கொட்டுகிறார்கள். இது இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் முன்பு நடந்தது. இது நிறுத்தப்படாவிட்டால், மறுசுழற்சி சார்ந்த பொருளாதாரம் என்ற இந்தியாவின் இலக்கு பாதிக்கப்படலாம். நியாயமான EPR அடிப்படை விலை இல்லாமல், முறையற்ற மின்கல மறுசுழற்சி அல்லது கொட்டுதலால் இந்தியா கடுமையான சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்கொள்கிறது. இதற்கும் நிறைய பணம் செலவாகும். 2030-ஆம் ஆண்டுக்குள், மோசமான மின்கல மறுசுழற்சியால் இந்தியா $1 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பணத்தை இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இணக்கத்திற்கான எதிர்ப்பு
பெரிய நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இணக்கத்தை எதிர்ப்பதன் மூலம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளனர். வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு பெரிய உற்பத்தியாளர்களின் கொள்கைகள் மாறுபட்டதாக உள்ளது. இதனால், நிறுவனங்களால் வளரும் சந்தைகளில் சுற்றுச்சூழல் பொறுப்புகளைத் தவிர்க்க முடிகிறது. இந்தப் போக்கு உலகளாவிய தெற்கு முழுவதும் மீள்தன்மை மற்றும் நிலையான மின்கல சுற்றுச்சூழல் அமைப்புகளை நிறுவுவதைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
சுவாரஸ்யமாக, நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (Extended Producer Responsibility (EPR)) அடிப்படை விலையை சரிசெய்வது நுகர்வோருக்கான செலவுகளை அதிகரிக்கக் கூடாது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகளாவிய உலோக விலைகள் குறைந்துள்ள நிலையில், உற்பத்தியாளர்கள் இந்த சேமிப்புகளை நுகர்வோர்களுக்கு அனுப்பவில்லை. இது மூல உபகரண உற்பத்தியாளர்கள் (Original Equipment Manufacturers) விலைகளை உயர்த்தாமல் அதிக மறுசுழற்சி செலவுகளை உள்வாங்க முடியும் என்பதைக் குறிக்கிறது. நியாயமான EPR அடிப்படை விலை இறுதி பயனர்களுக்கு சுமை ஏற்படுத்தாமல் நிலையான மறுசுழற்சியை உறுதி செய்யும். அதே, நேரத்தில் தொழில் மற்றும் நுகர்வோர்களுக்கு பயனளிக்கும் சுழற்சிப் பொருளாதாரத்தை (circular economy) வளர்க்கும்.
சட்டபூர்வமான மறுசுழற்சி செய்பவர்களைப் பாதுகாக்கவும் இணக்கத்தை ஊக்குவிக்கவும், மறுசுழற்சி மற்றும் தொழில் உருவாக்கத்தின் உண்மையான செலவுகளை பிரதிபலிக்கும் நியாயமான மற்றும் உலகளாவிய ஒப்பிடக்கூடிய EPR அடிப்படை விலையை இந்தியா ஏற்றுக்கொள்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், சூழல் அமைப்பு முதிர்ச்சியடைந்து தரநிர்ணயம் நடைமுறையில் இருக்கும்போது சந்தை சார்ந்த விலைகளை எளிதாக்கும்.
இதற்கு, உலகளாவிய விலை கட்டமைப்புகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகுப்பாய்வு செய்தபின் சாத்தியமான விலை கட்டமைப்பை உருவாக்க கொள்கை வகுப்பாளர்கள், தொழில் மற்றும் மறுசுழற்சியாளர்கள் மத்தியில் உடனடி ஆக்கபூர்வமான உரையாடல் தேவைப்படுகிறது. உதாரணமாக, ஐக்கிய இராச்சியம் (United Kingdom) உற்பத்தியாளர்கள் EV மின்கல மறுசுழற்சி செய்ய ஒரு கிலோவிற்கு சுமார் ₹600 செலுத்துகிறார்கள். அதேசமயம் இந்தியா அதில் கால் பங்கிற்கும் குறைவாகவே வசூலிக்க யோசித்து வருகிறது. இந்தியாவிற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே வாங்கும் சக்தியை சரிசெய்த பிறகும் இது ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசமாக உள்ளது.
மின்கல கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான அடிப்படை விலை, மின்கலன்களை சேகரிப்பதில் இருந்து பொருட்களை திரும்பப் பெறுவது வரை அனைத்து செலவுகளையும் ஈடுகட்ட வேண்டும். இது மறுசுழற்சி செய்பவர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்ய உதவும். நியாயமான EPR அமைப்பு, மின்கல தயாரிப்பாளர்கள் மறுசுழற்சி செய்பவர்கள் தங்கள் வேலையை தணிக்கைகள் மூலம் சரிபார்த்து, தங்கள் வேலையைச் சரியாகச் செய்வதை உறுதிசெய்ய ஊக்குவிக்கிறது.
முறைசாரா மறுசுழற்சியாளர்களை ஒருங்கிணைத்தல்
இந்தியாவில் அமலாக்க பொறிமுறைகளுக்கு அவசர வலுப்படுத்தல் தேவைப்படுகிறது. இதில் வலுவான தணிக்கை அமைப்புகளை செயல்படுத்துதல், நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (Extended Producer Responsibility (EPR)) சான்றிதழ்களின் வழங்கல் மற்றும் கண்காணிப்பை டிஜிட்டல்மயமாக்குதல் மற்றும் மோசடி மற்றும் இணக்கமின்மைக்கு கடுமையான தண்டனைகளை விதித்தல் ஆகியவை அடங்கும். கூடுதலாக, பயிற்சி மற்றும் ஒழுங்குமுறை ஆதரவின் மூலம் முறைசாரா மறுசுழற்சியாளர்களை முறையான துறையில் ஒருங்கிணைப்பது அபாயகரமான நடைமுறைகளை அகற்றுவதற்கும் இந்தியாவின் மறுசுழற்சி திறனை விரிவுபடுத்துவதற்கும் உதவும். இது வெறும் சுற்றுச்சூழல் சவால் அல்ல. இது பொருளாதார மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானது. EPR அடிப்படை விலையை மறுசீரமைத்தல், அமலாக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் முறைசாரா துறையை முறைப்படுத்துதல் மூலம், வரவிருக்கும் நெருக்கடியிலிருந்து மின்கல கழிவுகளை பசுமை வளர்ச்சி மற்றும் வட்ட பொருளாதாரத்திற்கான ஊக்கியாக மாற்ற முடியும்.
அருண் கோயல் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. அவர் இந்திய அரசின் முன்னாள் செயலாளர் மற்றும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (Central Electricity Regulatory Commission) முன்னாள் உறுப்பினர்.