இங்கிலாந்துடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவின் மற்றொரு தவறு. -பிஸ்வஜித் தார், கே.எம். கோபகுமார்

 இந்தியா இப்போது கட்டாய உரிமத்திற்கு குறைந்த ஆதரவை அளிக்கிறது, இது விலையுயர்ந்த காப்புரிமை பெற்ற மருந்துகளை மிகவும் மலிவு விலையில் வழங்குவதற்கான சிறந்த வழியாகும்.


இந்தியா-இங்கிலாந்து  விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (Comprehensive Economic and Trade Agreement (CETA)) ஒப்பந்தத்தின் அறிவுசார் சொத்துரிமைப் பிரிவில் (அத்தியாயம் 13) இந்தியாவின் வாக்குறுதிகள் குறித்து கவலைகளை எழுப்புகிறது. ஒரு தொந்தரவான பகுதி பிரிவு 13.6 ஆகும். இது "அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தக தொடர்பான அம்சங்கள் (Trade Related Aspects of Intellectual Property Rights (TRIPS)) மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான புரிதல்கள்" ("Understandings Regarding TRIPS and Public Health Measures.") என்று அழைக்கப்படுகிறது. முதல் பத்தி "மருந்துகளை ஊக்குவிப்பதற்கும் அணுகுவதை உறுதி செய்வதற்கும் விரும்பத்தக்க மற்றும் உகந்த வழி, தன்னார்வ வழிமுறைகள் மூலம் அங்கீகரிக்கின்றன என்று கூறுகிறது. இதில் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளில் தொழில்நுட்ப பரிமாற்றம் போன்றவையும்  அடங்கும்"


இந்தியா இதற்கு ஒப்புக்கொண்டால், இரண்டு முக்கியமான விஷயங்களில் அதன் கடந்தகால நிலைப்பாடுகளை பலவீனப்படுத்துகிறது. முதலாவதாக, விலையுயர்ந்த மருந்துகளை மலிவு விலையில் வழங்குவதற்காக தன்னார்வ உரிமத்திற்கு பதிலாக கட்டாய உரிமத்தை ‘இந்தியா எப்போதும் ஆதரித்துள்ளது. இரண்டாவதாக, தொழில்களை வளர்க்கவும் மாசுபாட்டைக் குறைக்கவும் உதவும் வகையில் பணக்கார நாடுகள் வளரும் நாடுகளுடன் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா வாதிட்டுள்ளது.


விலை நிர்ணயம் தொடர்பான பிரச்சினை


காப்புரிமை பெற்ற மருந்துகள் பெரும்பாலும் மிகவும் விலை உயர்ந்தவை. ஏனெனில், காப்புரிமைகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட அதிக விலைகளை வசூலிக்கின்றன. காப்புரிமை முறையில் இது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.


இதைத் தீர்க்க, கட்டாய உரிமத்தைப் பயன்படுத்தலாம். இது மற்ற நிறுவனங்கள் அதே மருந்தை குறைந்த விலையில் தயாரிக்க அனுமதிக்கிறது. இது மருந்தை மிகவும் மலிவு விலையில் தயாரிக்க உதவுகிறது. உதாரணமாக, 2012-ஆம் ஆண்டில், சோராஃபெனிப் டோசிலேட் (sorafenib tosylate) எனப்படும் புற்றுநோய் மருந்தை தயாரிக்க நாட்கோ பார்மாவுக்கு கட்டாய உரிமம் வழங்கப்பட்டது. அசல் நிறுவனமான பேயர், ஒரு மாத சிகிச்சைக்காக அதை ₹2,80,428 ரூபாய்க்கு விற்றது. உரிமம் வழங்கப்பட்ட பிறகு, விலை ₹8,800 ரூபாய்க்கும் குறைவாகக் குறைந்தது.


இவ்வளவு அதிக விலை நிர்ணயம் செய்வதைத் தடுக்க, இந்திய உறுப்பினர்கள் காப்புரிமைச் சட்டத்தில் (Indian lawmakers added compulsory licensing to the Patents Act) கட்டாய உரிமத்தைச் சேர்த்தனர். அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தக தொடர்பான அம்சங்கள் (Trade Related Aspects of Intellectual Property Rights (TRIPS)) ஒப்பந்தத்தின் கீழ் உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளுக்கு இணங்க இந்த மாற்றம் செய்யப்பட்டது. கூட்டு நாடாளுமன்றக் குழு அதை கவனமாக மதிப்பாய்வு செய்தபிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சட்டத்தை நிறைவேற்றின.


சர்வதேச விதிகளை (TRIPS) பின்பற்றும் இந்தியாவின் காப்புரிமைச் சட்டம், காப்புரிமை வழங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நபர் அல்லது நிறுவனம் இந்தியாவில் காப்புரிமை பெற்ற தயாரிப்பை உருவாக்க கட்டாய உரிமத்தைப் பெற அனுமதிக்கிறது. இந்த உரிமம் தயாரிப்புக்கான பொதுமக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் அல்லது தயாரிப்பு மலிவு விலையில் விற்கப்படாவிட்டால் அல்லது இந்தியாவில் தயாரிப்பு உற்பத்தி செய்யப்படாமலோ அல்லது விற்கப்படாமலோ இருந்தால் போன்ற காரணங்களால் உரிமம் வழங்கப்படலாம். 


காப்புரிமை விதிகளின்படி காப்புரிமைதாரர்கள் தங்கள் கண்டுபிடிப்பு இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தெரிவிக்க வேண்டும். முன்னதாக, இது ஒவ்வொரு ஆண்டும் தெரிவிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு, விதி தளர்த்தப்பட்டது. இப்போது, அறிக்கை ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த மாற்றம் CETA ஒப்பந்தத்தில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது கட்டாய உரிமங்களை வழங்குவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றை பலவீனப்படுத்துகிறது.


அதற்குப் பதிலாக தன்னார்வ உரிமங்களை ஆதரிப்பதன் மூலம், இந்தியா இனி உலக அளவில் கட்டாய உரிமங்களுக்கு வலுவாக அழுத்தம் கொடுக்கவில்லை. 2001-ஆம் ஆண்டில், பணக்கார நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, உலக வர்த்தக அமைப்பில் (WTO) தோஹா பிரகடனத்தின் மூலம் கட்டாய உரிமங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையை இந்தியாவும் பிற வளரும் நாடுகளும் வென்றன. ஒவ்வொரு நாட்டிற்கும் கட்டாய உரிமங்களை வழங்கவும், அவற்றை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் உரிமை உண்டு என்று அந்த பிரகடனம் கூறியது.


இருப்பினும், தன்னார்வ உரிமங்கள் எப்போதும் ஏழை நாடுகளுக்கு மலிவான மருந்துகளைப் பெற உதவுவதில்லை. பெரிய உலகளாவிய மருந்து நிறுவனங்களுடன் கையாளும்போது உள்ளூர் நிறுவனங்கள் பெரும்பாலும் குறைந்த அதிகாரத்தைக் கொண்டுள்ளன. மருத்துவ உதவிக் குழுவான மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் (Médecins Sans Frontières (MSF)), மருந்து நிறுவனங்கள் தன்னார்வ உரிம விதிமுறைகளைப் பயன்படுத்தி மூலப்பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும், உள்ளூர் நிறுவனங்கள் என்ன செய்யமுடியும் என்பதைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்று சுட்டிக்காட்டியது. இது மலிவு விலை மருந்துகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது.

உதாரணமாக, காப்புரிமை பெற்ற Gilead Sciences தன்னார்வ உரிமத்தின் கீழ் சிப்லா இந்தியாவில் கோவிட் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிரை (remdesivir) உருவாக்கியது. இந்தியாவில் மருந்துக்கான சிப்லாவின் விலை உண்மையில் அமெரிக்காவில் கிலியட் வசூலிக்கும் விலையைவிட அதிகமாக இருந்தது.


இந்தியாவின் தேவை பாதிக்கப்படும்.


பல சர்வதேச மன்றங்களில் சாதகமான விதிமுறைகளில் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான இந்தியாவின் கோரிக்கையை CETA பலவீனப்படுத்துகிறது. புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கு (NIEO) குறித்த 1974-ஆம் ஆண்டு வெளியான ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்தில் இந்தியா முதன்முதலில் இந்தக் கோரிக்கையை முன்வைத்தது. NIEO, முன்னேறிய நாடுகள் தங்கள் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்க வளரும் நாடுகளுடன் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. இருப்பினும், இந்த அழைப்புகள் இருந்தபோதிலும், உண்மையில் மிகக் குறைந்த தொழில்நுட்ப பரிமாற்றமே நடந்துள்ளது.


2024-ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டிற்கான இந்தியாவின் நான்காவது இருபதாண்டு புதுப்பிப்பு அறிக்கையில் இந்த விரக்தி தோன்றியது. பெரிய தேசிய முயற்சிகள் மற்றும் முதலீடுகள் இருந்தபோதிலும், மெதுவான சர்வதேச தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கடுமையான அறிவுசார் சொத்து விதிகள் காலநிலைக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதைத் தடுத்து நிறுத்துகின்றன என்று அறிக்கை குறிப்பிட்டது.


"சாதகமான விதிமுறைகளுக்கான" அதன் நீண்டகால கோரிக்கையிலிருந்து பின்வாங்குவதன்மூலம், முன்னேறிய நாடுகளிடமிருந்து காலநிலைக்கு ஏற்ற தொழில்நுட்பங்களுக்கான அதன் ஈர்ப்பை இந்தியா பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளது.


பிஸ்வஜித் தார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையின் முன்னாள் பேராசிரியர் ஆவார். கே.எம். கோபகுமார் மூன்றாம் உலக வலையமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளர் மற்றும் சட்ட ஆலோசகர் ஆவார்.



Original article:

Share: