குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் (PVTGs) என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— இறுதி செய்யப்பட்டால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் (Particularly Vulnerable Tribal Groups (PVTGs)) தனித்தனியாக கணக்கிடப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்) முழுவதும் 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் உள்ளன. அவை குறைந்த கல்வியறிவு நிலைகள், புவியியல் தொலைதூரத்தன்மை, விவசாயத்திற்கு முந்தைய தொழில்நுட்ப நிலை மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டன.

— 40 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் 'ஒற்றை நுழைவு' (single entry) என திட்டமிடப்பட்டுள்ளன மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பரந்த பட்டியல் பழங்குடியினர் (STs) பிரிவின் கீழ் கணக்கிடப்படுகின்றன. உதாரணமாக, முந்தைய 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இந்த 40 குழுக்கள் அறிவிக்கப்பட்ட பட்டியலிடப்பட்ட பழங்குகுடியினர் ஒரு பகுதியாக இருந்ததால் கணக்கிடப்பட்டன.


— குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் மக்கள்தொகையில் மிகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் ஒன்றாகும். எனவே அவர்களின் மக்கள் தொகை மற்றும் சமூக-பொருளாதார குறிகாட்டிகள் குறித்த ‘ஒருங்கிணைந்த தரவுத்தளம்’ (consolidated database) இருப்பது அவசியம் என்று அமைச்சகம் கூறியது.


— ஓய்வுபெற்ற இந்திய நிர்வாக சேவை அதிகாரியும் பழங்குடி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஒடிசா மாநில பழங்குடி அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநருமான பேராசிரியர் A B Ota, 75 பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களில் 40 பேர் குடியரசுத்தலைவரின் உத்தரவின் கீழ் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, அவை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் கீழ் உள்ளன என்றார்.


— பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan (PM-JANMAN)) திட்டம் போன்ற சமீபத்திய முயற்சிகள் சில தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ள போதிலும், ‘தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் கணக்கீட்டை நிறுவனமயமாக்குவதன் அவசியம் குறித்து வளர்ந்து வரும் ஒருமித்த கருத்து உள்ளது’ என்று Ota கூறினார்.


உங்களுக்குத் தெரியுமா:


— குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு என்பது வழக்கமான பட்டியல் பழங்குடியினர்களை விட மிகவும் பாதிக்கப்படக்கூடியதாகக் கருதப்படும் பட்டியல்  பழங்குடியினர்கள் அல்லது பட்டியல் பழங்குடியினர்களின் ஒரு பிரிவின் துணை வகைப்பாடு ஆகும். அழிந்து வரும் பழங்குடி குழுக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்தும் நோக்கில், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு பட்டியல் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.


— 1960-61ஆம் ஆண்டில், தேபார் ஆணையம், பட்டியல் பழங்குடியினரிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கண்டறிந்தது. இது ‘பழமையான பழங்குடி குழுக்கள்’ (Primitive Tribal Groups (PTG)) வகையை உருவாக்க வழிவகுத்தது. 2006-ஆம் ஆண்டில், இந்தக் குழுவிற்கு புதிய பெயர் வழங்கப்பட்டது. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள்  என மறுபெயரிடப்பட்டது.


— நவம்பர் 2023-ல், பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்டில் PM-JANMAN திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் 200-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களின் (PVTGs) வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குள் அவர்களின் ஊரகப் பகுதிகள் மற்றும் வீடுகளுக்கு சாலைகள், சுகாதார மையங்கள் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை விஷயங்களை விரைவாக வழங்குவதே இதன் இலக்காகும். இது ஒன்பது அமைச்சகங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.


— திட்டம் தொடங்கப்பட்டபோது, பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களின் மதிப்பிடப்பட்ட மக்கள்தொகை 28 லட்சம் என்று ஒன்றிய அரசு கூறியது. பழங்குடியினர் விவகார அமைச்சகமும் (Ministry of Tribal Affairs (MoTA)) மாநிலங்களும் PM Gati Shakti அலைபேசி செயலியைப் பயன்படுத்தி ஊரகப் பகுதிகள் பற்றிய விரிவான தகவல்களைச் சேகரித்தன. இது அங்கு எத்தனை குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு மக்கள் வசிக்கிறார்கள், எதன் அடிப்படை சேவைகள் அல்லது வசதிகள் இல்லை என்பதைக் கண்டறிய அவர்களுக்கு உதவியது.


— அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்த மாதம் மக்களவையில் பழங்குடியினர் விவகார அமைச்சக அளித்த பதிலின்படி, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு மக்கள் தொகை 45.56 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு மக்கள்தொகை அடிப்படையில் மத்தியப் பிரதேசம் (12.28 லட்சம்), மகாராஷ்டிரா (6.2 லட்சம்) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (4.9 லட்சம்) ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.



Original article:

Share: