ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஏன் பல மாநிலங்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும்? -அமால் ஷேக்

 அரசியலமைப்பின் பிரிவு 21A வழங்கிய உரிமைகளின் அடிப்படையில், தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அல்லது அவர்களின் நீண்ட பணி அனுபவத்தை ஒரு தகுதியாகக் கணக்கிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


1 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வை (Teaching Eligibility Test (TET)) கட்டாய தகுதியாக்கிய உச்ச நீதிமன்றத்தின் செப்டம்பர் 1 தீர்ப்புக்கு எதிராக பல மாநிலங்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.


நீதிபதி திபங்கர் தத்தா மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வின் சட்ட நிலையை தெளிவுபடுத்தியது. இதிலிருந்து வெளிப்படும் சட்ட நிலைமை தெளிவானது: ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது வெறும் நடைமுறைத் தேவையல்ல. மாறாக குறைந்தபட்ச தகுதி அளவுகோல்களின் அத்தியாவசிய பகுதியாகும் என்று நீதிமன்றம் அறிவித்தது.


நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கடந்த காலத்திற்குப் பயன்படுத்துவதற்கான முடிவு, ஏற்கனவே பணிபுரியும் பல ஆசிரியர்களின் வேலைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆசிரியர் குழுக்கள் மாநில அரசாங்கங்களுக்கு அனுப்பிய செய்திகளில் தெரிவிக்கின்றன. இந்த ஆசிரியர்களில் பலர் கல்வி உரிமைச் சட்டம் (Right to Education (RTE)) தொடங்குவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே பணியில் சேர்ந்துள்ளனர். தற்போது கேரளா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வதை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளன.


இந்த நவடிக்கை, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21A-ன் கீழ், பணியில் உள்ள ஆசிரியர்களை தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் அல்லது நீண்டகால சேவையை மாற்று தகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற ஆசிரியர் அமைப்புகளின் பல ஆண்டுகால கோரிக்கைகளின் பின்னணியில் வருகிறது.


ஆசிரியர் தகுதித் தேர்வு  (Teaching Eligibility Test) என்றால் என்ன?


ஆசிரியர் தகுதித் தேர்வு (Teaching Eligibility Test) கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ன் மூலம் செயல்படுத்தப்பட்டது. இது ஆசிரியர்களை நியமிப்பதற்கான ‘குறைந்தபட்ச தகுதிகளை’ (minimum qualifications) நிர்ணயிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. 2010ஆம் ஆண்டில், தேசிய ஆசிரியர் கல்வி குழு  (National Council for Teacher Education (NCTE)) இந்த தரங்களை வகுக்கும் கல்வி மையமாக அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டே வெளியிடப்பட்ட தேசிய ஆசிரியர் கல்வி குழுவின் வழிகாட்டுதலின்ப்படி, 1 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை ஆசிரியராக நியமனம் பெற விரும்பும் அனைவரும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டாயமாக்கியது.


கல்வி உரிமைச்சட்டத்தின் 2017 திருத்தம், மார்ச் 31, 2015 நிலவரப்படி குறைந்தபட்ச தகுதிகள் இல்லாத அனைத்து ஆசிரியர்களும் நான்கு ஆண்டுகளுக்குள் அந்த தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரியது. தேசிய ஆசிரியர் கல்வி குழுவின் 2010ஆம் ஆண்டு  அறிவிப்பு ஏற்கனவே 1 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வை முக்கியமான  தகுதியாக அறிமுகப்படுத்தியிருந்தது.


பிரிவு 21A-ல் குறிப்பிட்டுள்ளபடி, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு உதவுகிறது என்பதால், அரசியலமைப்பின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆசிரியரின் தரத்தில் சமரசம் செய்வது அவசியமாக கல்வியின் தரத்தில் சமரசத்தை ஏற்படுத்தும். மேலும், இது அரசியலமைப்புச் சட்டம் 21A-ஆல் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமையுடன் அவசியமான ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.


இந்த வழக்கு எதைப் பற்றியது?


நீதிமன்றம் இரண்டு ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சினைகள் பற்றிய மனுக்களை விசாரித்துக் கொண்டிருந்தது: சிறுபான்மை பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா, மற்றும் கல்வி உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்துவதற்கு (Right to Education (RTE)) முன்பு ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் வேலையைத் தக்கவைக்க அல்லது பதவி உயர்வு பெற தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா .


சிறுபான்மை பள்ளிகள் பற்றிய கேள்விக்கு, முந்தைய ஒரு முக்கியமான வழக்கு காரணமாக, அதை மறுபரிசீலனை செய்ய நீதிபதிகள் குழுவை அழைக்க நீதிமன்றம் முடிவு செய்தது. ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்கள் உட்பட பதவி உயர்வு விரும்பும் அனைவருக்கும் இது பொருந்தும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


உச்சநீதிமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 23, ஆசிரியர்கள் முதல் நியமனத்திற்கு மட்டுமன்றி பதவி உயர்வுகளுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில்  தேர்ச்சி பெற வேண்டும் என்று கோருகிறது என்று தீர்ப்பளித்தது. இதன் பொருள், ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற விரும்பினால், இந்த விதிக்கு முன்பு எவ்வளவு காலம் பணியாற்றியிருந்தாலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


‘ஆட்சேர்ப்பு’ (recruitment) மற்றும் ‘நியமனம்’ (appointment) ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைக் குறிப்பிட்ட நீதிமன்றம், ஆட்சேர்ப்பு என்பது உள் மற்றும் வெளிப்புற ஆதாரங்களிலிருந்து தேர்வு செய்வதை உள்ளடக்கிய ஒரு பரந்த செயல்முறை என்றும், நியமனம் என்பது இறுதி தேர்வு செயல்முறையை குறிக்கிறது என்றும் கூறியது. தேவையான தகுதி மற்றும் தகுதி ஒன்றே என்பதன் அடிப்படையில் அவை ஒரே மாதிரியானவை என்றும், தேவையான தகுதியை பெற்றிருப்பது ஒரு ஆசிரியரை நியமனத்திற்கு தகுதியுடையவராக ஆக்குகிறது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


கல்வி உரிமைச் சட்டம் (Right to Education (RTE)) அமலுக்கு வருவதற்கு முன் நியமிக்கப்பட்ட நீண்டகால சேவை ஆசிரியர்களுக்கு இந்த தீர்ப்பு ஏற்படுத்தும் சவால்களை ஒப்புக்கொண்ட நீதிமன்றம், சட்டபூர்வ செயல்பாட்டை அநீதியாக பார்க்க முடியாது என்று வலியுறுத்தியது. ஓய்வுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் தொடர்ந்து பணியாற்ற அல்லது பதவி உயர்வு பெற விரும்பினால் இந்த ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில்  தேர்ச்சி பெற வேண்டும்.


நீதிமன்றம் ஏன் இந்த தேர்வை கட்டாயமாக்கியது?


நீதிமன்றம் பணியில் உள்ள ஆசிரியர்களை இரண்டு வகைகளாக பிரித்தது. ஓய்வுக்கு ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலம் உள்ளவர்கள் பதவி உயர்வு தேடாத வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஓய்வு வரை தொடரலாம். ஆனால், ‘ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியை தொடர உள்ளவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற வேண்டும். இவ்வாறான ஆசிரியர்களில் யாராவது நாங்கள் அனுமதித்த நேரத்திற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறத் தவறினால், அவர்கள் பணியிலிருந்து விலக வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைக்கலாம் என்றும், அவர்களுக்கு உரிய இறுதி ஊதியம் வழங்கப்பட வேண்டும்’ என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


நீதிமன்றம் ஒரு பாதுகாப்பு விதியைச் சேர்த்தது: ஆசிரியர்கள் தங்கள் இறுதி ஊதியத்தைப் பெற, விதிகளின்படி, தேவையான நேரம் வேலை செய்திருக்க வேண்டும் என்ற விதியைச் சேர்க்கிறோம் என்றும் எந்தவொரு ஆசிரியரும் தகுதிவாய்ந்த சேவையில் சேர்க்கப்படாமல், ஏதேனும் குறைபாடு இருந்தால், அவர்/அவள் அளிக்கும் பிரதிநிதித்துவத்தின் பேரில், அவரது வழக்கை அரசுத் துறை பரிசீலிக்கலாம்.


மார்ச் 2015 முதல் நான்கு ஆண்டு காலக்கெடுவுக்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (Central Teacher Eligibility Test (CTET)) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குறித்த வழக்கை செப்டம்பர் 11 அன்று பம்பாய் உயர் நீதிமன்றம் விசாரித்தது. செப்டம்பர் 1, 2025-ஆம் தேதிக்கு முன்னர் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தங்களது பணியைத் தொடரலாம் என்று நீதிமன்றம் கூறியது. தேர்ச்சி பெறாதவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதிபெற வேண்டும். இதன் காரணமாக, சில ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு ஆதரவு பெற்ற பள்ளிகளுக்கு மாற நீதிமன்றம் அனுமதித்தது. மேலும், புதிய உத்தரவுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.


இந்தத் தீர்ப்பு ஏன் விமர்சிக்கப்பட்டது?


உச்ச நீதிமன்றத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வு  (Teaching Eligibility Test)  தீர்ப்பு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து எதிர்வினைகளை அதிகரிக்க செய்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவதையும், தகுதி பெற்றவர்கள் தொடர்ந்து முன்னேறுவதையும் சுட்டிக்காட்டி, சங்கங்கள் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளன.


செப்டம்பர் 8 ஆம் தேதி, கேரள கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி ஒன்றிய அரசு தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஒரு செய்திக்குறிப்பில், இந்தத் தேவையை ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்குப் பின்னோக்கிப் பயன்படுத்துவது கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியது. அத்தகைய நடவடிக்கை ‘பள்ளி அமைப்பில் உறுதியற்ற தன்மையை உருவாக்கும்’ என்றும், ஆசிரியர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் தமிழ்நாடு வலியுறுத்தியது.


உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நீண்ட கால சேவை ஆசிரியர்களின் அனுபவத்தை கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மாநில கல்வித்துறையை மறுஆய்வு மனு தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளார்.


டெல்லியில், அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கம் செப்டம்பர் 18 அன்று முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதியது, ஆசிரியர்களின் திறன் ஏற்கனவே முடிவுகள், ஆய்வுகள் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது, மேலும் அவர்களை மீண்டும் தகுதி பெற வேண்டும் என்பது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டது.


“கற்பித்தல் என்பது மாணவர்களுக்கு முழு அர்ப்பணிப்புடன் செய்யப்பட வேண்டிய ஒரு தொழில். ஒவ்வொரு ஆசிரியரின் திறனும் ஏற்கனவே கல்வி முடிவுகள், ஆய்வுகள் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகள் மூலம் மதிப்பிடப்படுகிறது. இப்போது ஆசிரியர்களை மத்திய TET மூலம் மீண்டும் தகுதி பெற வற்புறுத்துவது தன்னிச்சையானது மற்றும் ஏற்கனவே தங்கள் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்யும் பணியாளர்களுக்கு தேவையற்ற உளவியல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது,” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



Original article:
Share: