உணவு இழப்பு மற்றும் வீணாக்கம் பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம் உணவு மற்றும் காலநிலை பாதுகாப்பைப் பாதிக்கும் கடுமையான பிரச்சனையான அதிக அளவு உணவு வீணாக்கப்படுவது மீது கவனம் செலுத்த வேண்டும்.
உணவு மற்றும் காலநிலை பாதுகாப்பு இரண்டையும் பாதிக்கும் ஒரு அமைதியான நெருக்கடியை முன்னிலைப்படுத்த செப்டம்பர் 29 அன்று, உலகம் முழுவதும் உணவு இழப்பு மற்றும் வீணாக்கம் பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம் (International Day of Awareness of Food Loss and Waste (IDAFLW)) அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு இழக்கப்படுகிறது அல்லது வீணாக்கப்படுகிறது.
மிகப்பெரிய உணவு உற்பத்தியாளர்களில் ஒருவரான இந்தியா, பல துறைகளில் குறிப்பிடத்தக்க இழப்புகளை எதிர்கொள்கிறது. உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தால் (MoFPI) நியமிக்கப்பட்ட நபார்டு ஆலோசனை சேவைகள் (NABCONS) 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், வேளாண் துறையில் இந்த இழப்புகள் மிக அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பொருளாதார தாக்கம் மிகப்பெரியது. இந்தியாவில் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ₹1.5 டிரில்லியன் என கண்டறியப்பட்டுள்ளது. இது வேளாண் சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3.7% ஆகும். பழங்கள் மற்றும் காய்கறிகள் 10%-15% என்ற அளவில் வீணாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் நெல் (4.8%) மற்றும் கோதுமை (4.2%) போன்ற முக்கிய உணவுகளும் குறிப்பிடத்தக்க வீணாக்கத்தை எதிர்கொள்கின்றன. சுற்றுச்சூழல் அமைப்புகள் அழுத்தப்பட்டு, காலநிலை மாற்றம் மோசமடைந்து வரும் நேரத்தில், ஒவ்வொரு டன் உணவும் ஊட்டச்சத்து இழப்பை மட்டுமல்ல, நீர், ஆற்றல் மற்றும் உழைப்பையும் வீணாக்குகிறது. இந்தியாவின் பெரிய உற்பத்தி அளவுகளில், இது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டன் உணவை இழக்கச் செய்கிறது. இது விவசாயிகளின் வருமானம், தேசிய உணவு வழங்கல், சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மற்றும் காலநிலை நிலைத்தன்மையை பாதிக்கிறது.
உணவு இழப்பு பயிர், விநியோகச் சங்கிலி நிலை மற்றும் பிராந்தியத்தைப் பொறுத்து வேறுபடுகிறது. இழப்புகள் எங்கு நிகழ்கின்றன மற்றும் அவற்றின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை அறிவது பயனுள்ள தீர்வுகளுக்கு அவசியம். இந்த இழப்புகளைக் குறைப்பது உணவுப் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் காலநிலை இலக்குகளை அடைவதற்கும் முக்கியமானது.
காலநிலை இணைப்பு
இந்தச் சவாலை எதிர்கொள்ள, இந்திய அரசு 50-க்கும் மேற்பட்ட பயிர்களை உள்ளடக்கிய மூன்று நாடு தழுவிய அறுவடைக்குப் பிந்தைய கணக்கெடுப்புகளை மேற்கொண்டது. இந்த கணக்கெடுப்புகள் உலக அளவில் மதிப்புச் சங்கிலியில் ஏற்படும் இழப்புகள் குறித்த முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கின. தேசிய குறிகாட்டி கட்டமைப்பில் நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) காட்டி 12.3.1 (உலகளாவிய உணவு இழப்பு மற்றும் கழிவு) உட்பட, வழக்கமான கண்காணிப்பை அனுமதித்தல், சர்வதேச இலக்குகளுடன் சீரமைத்தல் மற்றும் உணவு முறைகளை மாற்றுவதற்கான அறிவை விரிவுபடுத்துதல் மூலம் பொறுப்புணர்வை மேம்படுத்துகிறது.
இதன் அடிப்படையில், பசுமை காலநிலை நிதியத்தால் (Green Climate Fund (GCF)) ஆதரிக்கப்படும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization (FAO)) மற்றும் தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (National Institute of Food Technology Entrepreneurship and Management (NIFTEM)) ஆகியவற்றின் சமீபத்திய ஆய்வு, இந்தியாவில் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் மற்றும் சில்லறை கழிவுகளிலிருந்து பசுமை இல்ல வாயு (greenhouse gas (GHG)) வெளியேற்றத்தின் முதல் விரிவான மதிப்பீடுகளை வழங்குகிறது. இந்த ஆய்வு 30 பயிர்கள் மற்றும் கால்நடை தயாரிப்புகளை பகுப்பாய்வு செய்து, துறை, மாநிலம் மற்றும் செயல்பாட்டு வகை வாரியாக தரவை வழங்குகிறது.
கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்கவை. தானியங்களில், குறிப்பாக அரிசியில் ஏற்படும் சிறிய இழப்புகள்கூட, ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் டன்களுக்கு மேல் கார்பன்-டை-ஆக்சைடு (CO2)-க்கு சமமான உமிழ்வை ஏற்படுத்துகின்றன. ஏனெனில், அரிசி அதிக மீத்தேன் உற்பத்தி செய்கிறது. கால்நடைப் பொருட்களின் இழப்புகளும் அவற்றின் அதிக வள பயன்பாடு காரணமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த 30 பொருட்களிலிருந்து வரும் உணவு இழப்புகள் ஆண்டுதோறும் 33 மில்லியன் டன்களுக்கு மேல் CO2-க்கு சமமான உமிழ்வை உருவாக்குகின்றன. இது தடுக்கக்கூடிய நடவடிக்கை ஆகும். இது சிறந்த மற்றும் திறமையான உணவு அமைப்புகளால் குறைக்கப்படலாம்.
இந்தியாவில், பெரும்பாலான இழப்புகள் விநியோகச் சங்கிலியின் ஆரம்பத்தில் நிகழ்கின்றன. அவை கையாளுதல், பதப்படுத்துதல் மற்றும் விநியோகத்தின்போது அதிக வருமானம் கொண்ட நாடுகளைப் போலல்லாமல், நுகர்வோர் மட்டத்தில் பெரும்பாலும் இழப்புகள் ஏற்படுகின்றன என்று ஆய்வு காட்டுகிறது. பலவீனமான உள்கட்டமைப்பு, வரையறுக்கப்பட்ட தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் சிதறிய விநியோகச் சங்கிலிகள் போன்ற இந்தியாவின் முக்கிய சவால்களை சுட்டிக்காட்டுகிறது.
நடைமுறை தீர்வுகள்
உணவு இழப்புடன் இந்தியா மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. ஆனால், தீர்வுகள் அடையக்கூடிய அளவில் உள்ளது. தொழில்நுட்பம், கூட்டாண்மைகள், தனியார் துறை ஈடுபாடு மற்றும் வட்டப் பொருளாதாரத்தை நோக்கி நகர்வது ஆகியவற்றின் கலவையானது உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும்.
பெரும்பாலான உணவு இழப்பு பலவீனமான உள்கட்டமைப்பு காரணமாகவே நிகழ்கிறது. பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் இறைச்சி போன்ற அழுகும் பொருட்களுக்கு முன் குளிர்விப்பு முதல் குளிர்பதன போக்குவரத்து மற்றும் நவீன சேமிப்பு வரை குளிர்பதன சங்கிலிகளை வலுப்படுத்துவது அவசியம். பிரதான் மந்திரி கிசான் சம்பாத யோஜனா (Pradhan Mantri Kisan SAMPADA Yojana (PMKSY)) போன்ற திட்டங்கள் ஏற்கனவே உணவு தளவாடங்களை நவீனமயமாக்க உதவுகின்றன.
மலிவு விலை தொழில்நுட்பங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சூரிய ஆற்றல் குளிர் சேமிப்பு, குறைந்த விலை குளிரூட்டும் அறைகள், அழுகும் பொருட்களுக்கான பெட்டிகள் மற்றும் தானியங்களுக்கான ஈரப்பதம்-தடுப்பு குழிகள் கெட்டுப்போவதைக் குறைக்க சிறு விவசாயிகளுக்கு உதவும்.
IoT சென்சார்கள் மற்றும் AI- இயக்கப்படும் முன்னறிவிப்பு போன்ற டிஜிட்டல் கருவிகள் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விநியோகத்தை மேம்படுத்தலாம், தடைகள் மற்றும் இழப்புகளைக் குறைக்கலாம். 2023இல் தொடங்கப்பட்ட FAO உணவு இழப்பு செயலி (FAO Food Loss App (FLAPP)), விவசாயிகள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் மதிப்புச் சங்கிலி முழுவதும் இழப்புகளைக் கண்காணிக்க உதவுகிறது. இது 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
சில்லறை விற்பனை மட்டத்தில், உபரி உணவை உணவு வங்கிகள் மற்றும் சமூக சமையலறைகளுக்கு அனுப்பலாம். அதே நேரத்தில், தவிர்க்க முடியாத கழிவுகளை உரம், கால்நடை தீவனம் அல்லது உயிரி ஆற்றலாக மாற்றலாம். இந்த வட்ட தீர்வுகளை விரிவுபடுத்துவதற்கு மானியங்கள், கடன் உத்தரவாதங்கள் மற்றும் குறைந்த வட்டி கடன்கள் உள்ளிட்ட வலுவான கொள்கை ஆதரவு தேவை.
பகிரப்பட்ட பொறுப்பு
உணவு இழப்பு முழு விநியோகச் சங்கிலியிலும் நிகழ்கிறது. எனவே அனைவருக்கும் பங்கு உண்டு. அரசாங்கங்கள் காலநிலைத் திட்டங்களில் இழப்புக் குறைப்பைச் சேர்க்க வேண்டும் மற்றும் வலுவான உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய வேண்டும். வணிகங்கள் வட்ட நடைமுறைகளைக் கடைப்பிடித்து புதுமைகளை விரிவுபடுத்த வேண்டும். சமூகமும் ஆராய்ச்சியாளர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் மற்றும் தீர்வுகளைப் உருவாக்கலாம். அதே நேரத்தில் நுகர்வோர் கவனமாகத் தேர்வுகளைச் செய்து உணவு மறுபகிர்வை ஆதரிப்பதன் மூலம் கழிவுகளைக் குறைக்கலாம்.
உணவு இழப்பு மற்றும் வீணாக்கம் பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம் (International Day of Awareness of Food Loss and Waste (IDAFLW)) கடைபிடிப்பது என்பது வெறும் அடையாளச் சின்னம் மட்டுமே. இது நடவடிக்கை எடுப்பதற்கான அழைப்பு. இதில் உள்ள சவால் பெரியது. ஆனால், நன்மைகள் அதிகம். உணவைச் சேமிப்பது காலநிலையைப் பாதுகாக்கவும், வளங்களைப் பாதுகாக்கவும், வாழ்வாதாரத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. ஒரு காலியான தட்டு வீணான உணவைக் குறிக்காமல், நுகர்வுக்கு எடுத்துக்கொண்ட உணவைக் குறிக்க வேண்டும்.
தகாயுகி ஹகிவாரா ஐக்கிய நாடுகள் சபையின் (FAO) இந்தியாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி ஆவார்.