வலுவான நடவடிக்கை இல்லாமல், இந்தியா அதன் காலநிலை இலக்குகளை அடைய சிரமப்படும்.
இந்தியாவின் தூய எரிசக்தி மாற்றம் வேகமாக முன்னேறி வருகிறது. 2024-ம் ஆண்டில், இந்தியா 24.5 ஜிகாவாட் (GW) சூரிய ஆற்றல் திறனைச் சேர்த்தது. இது சீனா மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு உலகளவில் மூன்றாவது பெரிய பங்களிப்பாளராக இந்தியாவை மாற்றியது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய உலகளாவிய மாற்றத்தில் இந்தியாவை ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும் இது நிலைநிறுத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரின் 2025 காலநிலை அறிக்கை, சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலை விரிவுபடுத்துவதில் முன்னணி வளரும் நாடாக பிரேசில் மற்றும் சீனாவுடன் இந்தியாவை அங்கீகரிக்கிறது. 2023-ம் ஆண்டில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையானது ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் 5% பங்களிக்கிறது. இதில், ஆஃப்-கிரிட் சோலார் (off-grid solar) மட்டும் 2021-ல் 80,000-க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கியது. சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியை (International Solar Alliance (ISA)) உருவாக்குவதில் இந்தியாவின் தலைமைத்துவமும் பாராட்டத்தக்கது.
முக்கியமான பற்றாக்குறை (critical gap)
இதுபோன்ற ஈர்க்கக்கூடிய உந்துதலுக்கு நிலையான மற்றும் தொடர்ச்சியான ஆதரவு தேவை. முதன்மை அறிவிப்புக்குப் பின்னால், ஒரு முக்கியமான பற்றாக்குறை (critical gap) உள்ளது. இந்த மாற்றத்தைத் தக்கவைத்து விரிவுபடுத்துவதற்குத் தேவையான நிதி அடித்தளம் இந்தியாவில் இல்லை. காலநிலை நிதியின் நிலை வலுவாக விரிவடையவில்லை என்றால், இந்தியா அதன் காலநிலை இலக்குகளை அடைவது கடினமாக இருக்கும்.
தூய்மையான எரிசக்திக்கான பொருளாதார நிலை உறுதியான அடிப்படையைக் கொண்டுள்ளது. சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் (International Renewable Energy Agency (IRENA)) கருத்துப்படி, இந்தியா 1.5°C-சீரமைக்கப்பட்ட பாதையைப் பின்பற்றினால், 2050-ம் ஆண்டில் சராசரியான ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியை 2.8% அடைய முடியும். இது G-20 சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். மின்கலம்-ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பரவலாக்கப்பட்ட கட்டங்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. இந்த வாய்ப்புகள் உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் வளர்ச்சியை இயக்கும். இருப்பினும், இந்த உந்துதல் இன்னும் காணாமல் போன முக்கியமான காரணியான காலநிலை நிதியைப் பொறுத்தது.
இந்தியா ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 3-வது பெரிய காற்றாலை மற்றும் சூரிய ஆற்றலை உருவாக்குகிறது.
இந்தியாவின் காலநிலை நிதிப் பற்றாகுறையின் (finance gap) அளவு அதிகமாக உள்ளது. சமீபத்திய மதிப்பீடுகள் 2030-ம் ஆண்டளவில் 1.5 டிகிரி செல்சியஸ் நிலையில் தங்குவதற்கு $1.5 டிரில்லியன் தேவை என்று குறிப்பிடுகின்றன. அதே நேரத்தில், நிதி அமைச்சகம் தேசிய இலக்குகளை அடைய 2030-ம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கையை $2.5 டிரில்லியன்களாகக் குறிப்பிடுகிறது. புதுப்பிக்கத்தக்கவைகளை விரிவுபடுத்துதல், மின்சாரக் கட்டமைப்பை வலுப்படுத்துதல், மின்கல சேமிப்பை நிலைநிறுத்துதல், பசுமை ஹைட்ரஜனை அளவிடுதல் மற்றும் நிலையான போக்குவரத்து மற்றும் விவசாயத்திற்கு மாறுதல் ஆகியவற்றுக்கான மூலதனம் இதில் அடங்கும். காலநிலை நிதியின் தற்போதைய ஓட்டம் இந்த இலக்கைவிட குறைவாகவே உள்ளது.
டிசம்பர் 2024-க்குள், இந்தியாவின் ஒட்டுமொத்த சீரமைக்கப்பட்ட பசுமை, சமூக, நிலைத்தன்மை மற்றும் நிலைத்தன்மை-இணைக்கப்பட்ட (green, social, sustainability, and sustainability-linked (GSS+)) கடன் வழங்கல் $55.9 பில்லியனை எட்டியது. இது 2021 முதல் 186% அதிகரிப்பைக் காட்டுகிறது. மொத்த சீரமைக்கப்பட்ட வெளியீட்டில் 83% பசுமைப் பத்திரங்கள் உள்ளன. இந்தியாவில் பசுமைப் பத்திர முதலீடு 2025-ல் $45 பில்லியனைத் தாண்டியது. மேலும், நிலையான நிதி இலக்குகள் 2030க்குள் $100 பில்லியன்களை இலக்காகக் கொண்டு, வலுவான தனியார் துறையின் பங்களிப்பைக் காட்டுகிறது.
இருப்பினும், பெரிய நிறுவனங்களுக்கு அப்பால் பசுமை நிதியை விரிவுபடுத்துவதற்கான சவால் இன்னும் உள்ளது. மொத்த பசுமைப் பத்திர வெளியீட்டில் (green bond issuance) 84% தனியார் துறை பொறுப்பாக இருந்தாலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உள்ளூர் உள்கட்டமைப்பு உருவாக்குநர்களுக்கான அணுகலானது சலுகை நிதி மற்றும் இடர்-பகிர்வு வழிமுறைகள் மூலம் மேம்படுத்தப்பட வேண்டும். சோலார் பூங்கா திட்டத்தின் (Solar Park Scheme) கீழ் இந்தியாவின் வெற்றிகரமான சூரிய ஆற்றல் ஏலங்கள் தனியார் நிதியுதவியை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதேபோல், இந்தியாவின் இறையாண்மையான பசுமைப் பத்திரங்கள் மற்றும் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI)-ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகப் பத்திரங்களின் சிறப்பான செயல்பாடு ஆகியவை தனியார் மூலதனத்தை காலநிலை நடவடிக்கை, கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் செலுத்தியுள்ளன.
திட்ட உத்தியில் மாற்றங்கள்
நிதியில் உள்ள இந்த பற்றக்குறையை குறைக்க, இந்தியா பொது நிதியில் தொடங்கி அதன் காலநிலை நிதி உத்தியை பல்வகைப்படுத்த வேண்டும் மற்றும் தீவிரப்படுத்த வேண்டும். தேசிய மற்றும் மாநில அரசாங்கங்கள் பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் நிதிக் கருவிகளைப் பயன்படுத்தி தனியார் மூலதனத்தை ஈர்க்கவும், பசுமை முதலீடுகளை ஆபத்திலிருந்து விலக்கவும் முடியும்.
கலப்பு நிதி (Blended finance) இந்த பிளவைக் குறைக்க உதவும். சலுகை நிதி மற்றும் இடர்-பகிர்வு வழிமுறைகள் அடிக்கடி குறிப்பிடப்பட்டாலும், துறைகள், அளவுகள் மற்றும் முதலீட்டாளர் வகைகளில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்ப்பது முக்கியம். பகுதி உத்தரவாதங்கள் அல்லது துணைக் கடன் போன்ற கடன் மேம்பாட்டுக் கருவிகள், பசுமைத் திட்டங்களின் இடர்-வருவாய் சமநிலையை மேம்படுத்தலாம். அவை, தனியார் கடன் வழங்குபவர்களுக்கு மிகவும் ஈடுபானதாக ஆக்குகிறது. இதேபோல், செயல்திறன் அல்லது கடன் உத்தரவாதங்கள் அடுக்கு-II மற்றும் அடுக்கு-III நகரங்களில் நடுத்தர அளவிலான தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பிற்கான நிதியைத் திறக்கலாம். இங்கு நிர்வாகம் மற்றும் விநியோக அபாயங்கள் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்துகிறது.
இத்தகைய மாதிரிகளை அளவிடுவதற்கு ஓய்வூதியத் திட்டங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் இறையாண்மை செல்வ நிதிகளிலிருந்து உள்நாட்டு நிறுவன மூலதனத்தைத் திறக்க வேண்டும். இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organisation (EPFO)) மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation (LIC)) போன்ற நிறுவனங்கள் தங்கள் இலாகாக்களின் ஒரு பகுதியை காலநிலைக்கு ஏற்ற திட்டங்களில் முதலீடு செய்ய உதவும். இதை செயல்படுத்த, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் அவசியம். இந்த சீர்திருத்தங்களில் தெளிவான ESG (சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுமை) முதலீட்டு விதிகள், சிறந்த இடர்-தணிப்பு கருவிகள் மற்றும் நீண்டகால (long term) எதிர்கால பசுமைத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
கார்பன் சந்தைகளைத் தட்டவும்
கொள்கை மற்றும் நிறுவன ஆதரவு முக்கியமானது. கார்பன் சந்தைகள் மற்றொரு வழியை வழங்குகின்றன. இந்தியாவின் புதிய கார்பன் கடன் வர்த்தகத் திட்டம் புதிய நிதி வளங்களைக் கொண்டு வர முடியும். ஆனால் இந்தத் திட்டம் வெளிப்படையானதாகவும், நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும், நியாயமானதாகவும் இருந்தால் மட்டுமே இது செயல்படும். அதே நேரத்தில், தழுவலுக்கு நிதியளிப்பதும், இழப்பு மற்றும் சேதத்திற்கு நிதியளிப்பதும் சமமாக அவசரமானது.
இந்தியா தூய்மையான எரிசக்தியில் மட்டுமல்ல, காலநிலை நிதி கண்டுபிடிப்புகளிலும், காணக்கூடிய, அளவிடக்கூடிய முன்னேற்றங்களுடன் வழிநடத்த வேண்டும். இது காலநிலை நிதியைக் கண்காணிப்பதற்கான பிளாக்செயின் தொழில்நுட்பம் (blockchain technology) மூலமாக இருக்கலாம். பசுமை முதலீட்டு இலாகாக்களில் அபாயங்களை மதிப்பிடுவதற்கு இது செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்தலாம். மற்றொரு விருப்பம் கலப்பு நிதி மாதிரிகள் (blended finance models) ஆகும். இது இந்தியாவின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஃபிளாவியா லோபஸ், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) இந்தியா-வின் திட்ட அலுவலர் ஆவார். பாலகிருஷ்ணா பிசுபதி, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) இந்தியா-வின் தலைவர் ஆவார்.