தலையீடு இல்லா அணுகுமுறை: ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகள் குறித்து…

 அறிவியலில் சிறந்ததைக் தீர்மானிக்க சிறந்த நீதிபதிகள் விஞ்ஞானிகளே (Scientists) ஆவார்.


24 விஞ்ஞானிகளும் ஒரு குழுவும் தங்கள் அறிவியல் சாதனைகளுக்காக இரண்டாவது ஆண்டாக வழங்கப்படும் ராஷ்ட்ரிய விஞ்ஞான புரஸ்கார் (Rashtriya Vigyan Puraskar (RVP)) விருதுகளைப் பெறுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் நான்கு முக்கிய விருது பிரிவுகள் உள்ளன. அவை விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா-சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது மற்றும் விஞ்ஞான் குழு விருது போன்ற விருதுகளாகும். விஞ்ஞான் ரத்னா மற்றும் விஞ்ஞான் ஸ்ரீ விருதுகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறப்பான பங்களிப்புகளை செய்த விஞ்ஞானிகளுக்கும், சமீபத்திய சிறப்பான பங்களிப்புகளுக்கும் வழங்கப்படுகின்றன. யுவா விருது 45 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கானது மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் குழு முயற்சிக்கான இறுதி விருதாகும்.




கோட்பாட்டில், அனைத்து பிரிவுகளின் கீழும் வழங்கப்படும் மொத்த விருதுகளின் எண்ணிக்கை 56-ஆக வரையறுக்கப்பட்டுள்ளது; இருப்பினும், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 33 விருதுகளைவிட இந்த ஆண்டு குறைவாகவே உள்ளன. விருது தொடர்பான அறிவிப்பை வெளியிட பல மாதங்களாகியுள்ளது. ஆனால், இது விருது பெறக்கூடிய வாய்ப்புள்ளவர்களை அதிக அளவில் ஆய்வு செய்வதைக் குறிக்கலாம். முந்தைய தேசிய அறிவியல் விருதுகளான சாந்தி ஸ்வரூப் பட்நாகர்  (Shanti Swarup Bhatnagar (SSB)) விருதுகளைப் போல் இல்லாமல், பத்ம விருதுகளின் உணர்வுக்கு ஏற்ப ராஷ்ட்ரிய விஞ்ஞான புரஸ்கார் (Rashtriya Vigyan Puraskar (RVP)) விருதுக்கு எந்த பண உதவியும் வழங்கப்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால், கவனமான ஆய்வு (scrutiny) இரு வழிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. கடந்த ஆண்டு, சில விஞ்ஞானிகளுக்கு முதலில் விருது வழங்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர், அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.


விருது தேர்வு செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கோரி, இந்தியா முழுவதும் உள்ள பல முக்கிய விஞ்ஞானிகள் முதன்மை அறிவியல் ஆலோசகர் (Principal Scientific Adviser (PSA)) அலுவலகத்திற்கு கடிதம் எழுதினர். அறிவியல் தகுதியைத் தவிர வேறு காரணிகள் எதுவும் இல்லை- எடுத்துக்காட்டாக, அரசாங்கக் கொள்கை மற்றும் அரசியல் சித்தாந்தத்தின் மீதான விமர்சனம் - இதில் பங்கு வகித்திருக்கலாம் என்ற கவலைகள் இருந்தன. அறிவியல் ஆலோசகர் இந்த கோரிக்கைகளுக்கு உறுதியாக  எந்த பதிலும் அளிக்கவில்லை. தவிர, முதன்மை அறிவியல் ஆலோசகர்  குழுவிற்கு தலைமை தாங்கும், அரசாங்க செயலாளர்கள் மற்றும் அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்களை உள்ளடக்கிய ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் குழு, விருது வென்றவர்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சருக்கு "பரிந்துரைத்தது" என்று மட்டுமே கூறினர். குழுவின் பரிந்துரையை அமைச்சரால் ரத்து செய்ய முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


2022ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகமும் அறிவியல் துறைத் தலைவர்களும் தனிப்பட்ட அறிவியல் துறைகளால் வழங்கப்படும் விருதுகள் அதிகமாக இருப்பதாகவும், அவற்றைக் குறைத்து அவற்றின் 'அங்கீகாரத்தை' தேசிய விருதுகளாக உயர்த்துவது அவசியம் என்றும் முடிவு செய்ததை அடுத்து ராஷ்ட்ரிய விஞ்ஞான புரஸ்கார் (Rashtriya Vigyan Puraskar (RVP)) விருதுகள் நிறுவப்பட்டன. சாந்தி ஸ்வரூப் பட்நாகர்  (Shanti Swarup Bhatnagar (SSB)) விருதுகள் போன்ற சில விருதுகளும் அறிவியல் அமைச்சர் உடன் ஆலோசனை செய்து இறுதி முடிவு செய்யப்பட்டிருந்தாலும், ராஷ்ட்ரிய விஞ்ஞான புரஸ்கார் விருதுகளை மையமாக்கி “பத்ம ஸ்ரீ விருது போன்றவை” செய்யும் தெளிவான முயற்சி, அவை தேவைக்கேற்பவையாக அல்லாமல் அரசியல் சார்ந்ததாகத் தோன்றச் செய்கிறது. ராஷ்ட்ரிய விஞ்ஞான புரஸ்கார் விருதின் நோக்கம் 'அங்கீகாரத்தை' உயர்த்துவதாக இருந்தால், அரசாங்கம் இந்த இந்த அணுகுமுறையிலிருந்து முற்றிலும் விலகி, யார் சிறந்தவர் என்பதை தீர்மானிக்க விஞ்ஞானிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்



Original article:

Share: