பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சுனிதா யாதவ், வீட்டுப்பாடம் எழுதுவதற்கான குறிப்பேடுகள் இல்லாமல் வளர்ந்தார். மேலும், தனது படிப்பைப் பற்றி ஒருபோதும் கேட்காத பெற்றோர்கள். இன்று, அவரது மகள் ரிஷிகா மிகச் சிறந்த பள்ளிச் சூழலில் படிக்கிறார். அரசுப் பள்ளி இப்போது கற்றுக்கொள்வதற்கு தேவையான பொருட்களை வழங்குகிறது. ஆசிரியர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து பெற்றோருக்கு வழிகாட்டுகிறார்கள். மேலும், கிராம பஞ்சாயத்து கல்வியை ஆதரிக்கிறது. பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் சுனிதாவை வீட்டுப்பாடத்தில் எவ்வாறு உதவுவது என்பதைக் காட்டிய பிறகு, அந்தப் பெண் தனது அன்றாட வாழக்கை முறையை மாற்றினாள். "நான் சமைக்கும்போது, ரிஷிகாவை என் அருகில் உட்கார வைத்து வீட்டுப்பாடம் செய்ய வைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.
மத்தியப் பிரதேசத்தில், பால் சௌபால் அமர்வுகள் குடும்பங்களுக்கு விளையாட்டு அடிப்படையிலான கற்றலை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் பீகாரில், ஒலிபெருக்கிகள் "அபன் பீகார், நிபுன் பீகார்" போன்ற செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இது ஆரம்பகால கற்றலை ஒரு சமூக முயற்சியாக மாற்றுகிறது. ஆரம்ப வகுப்புகளில் உள்ள ஐந்து கோடி இளம் குழந்தைகளுக்கு நாம் தேவையான ஆதரவை வழங்கினால், புரிதல் மற்றும் எண்ணறிவுடன் கூடிய வாசிப்புத் திறனுக்கான தேசிய முயற்சி (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy ((NIPUN BHARAT)) ஒரு நோக்கத்திலிருந்து ஒரு இயக்கமாக மாறும். இதைச் சாத்தியமாக்குவதற்கான சிறந்தவழி சமூகத்தில் இருந்து தொடங்குவதாகும்.
சமூக அணிதிரட்டலின் (Community Mobilisation) ஆற்றல்
நமது அரசால் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission), மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவது எவ்வாறு பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதைக் காட்டியது. 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த
சுகாதார இயக்கத்தில் இணைந்தனர். மேலும், 650,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கிராமங்களில் வீடுகளுக்குச் சென்று மக்கள் கழிப்பறைகள் இல்லாத இடங்களைக் கண்டறிந்தனர். கழிப்பறைகள் கட்ட உதவினார்கள், அவை பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் சரிபார்த்தனர். இந்த முயற்சி ஒவ்வொரு ஆண்டும் 60,000 முதல் 70,000 குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றியதாக ஒரு அறிவியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இப்போது, கல்வியை மேம்படுத்த அதே அளவிலான ஒரு சமூக முயற்சி நமக்குத் தேவைப்படுகிறது.
உலகம் முழுவதும், சமூக அணிதிரட்டல் அதன் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. 1977ஆம் ஆண்டில், பேராசிரியர் Wangari Maathai, சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்துப் போராடவும், இயற்கை வளங்கள் இழப்பால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் கென்யாவில் பசுமைப் பட்டை இயக்கத்தைத் (Green Belt Movement) தொடங்கினார். பத்தாண்டுகளுக்குள், 30,000 பெண்கள் வனவியல் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் பயிற்சி பெற்றனர். 5.1 கோடிக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு 4,000-க்கும் மேற்பட்ட சமூகங்களை மாற்றினர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ரியோ டி ஜெனிரோவின் ஃபவேலா-பைரோ இயக்கம் (Favela-Bairro Program) உள்ளூர்
சமூகங்களுடன் இணைந்து 105 முறைசாரா குடியிருப்புகளை மேம்படுத்தியது. இது சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக இடங்களை மேம்படுத்தி, 4.5 லட்சம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியது.
உலகளாவிய ஆய்வுகள் சமூகப் பங்கேற்பு (community participation) கற்றல் விளைவுகளையும் மாற்றும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. வியட்நாமில், 2012-ஆம் ஆண்டு மற்றும் 2015-ஆம் ஆண்டிற்கு இடையில் மாணவர்களின் சர்வதேச மாணவர் மதிப்பீட்டிற்கான திட்ட (Programme for International Student Assessment (PISA)) மதிப்பெண்களில் ஏறக்குறைய பாதி வித்தியாசத்தை பெற்றோரின் எதிர்பார்ப்புகளும் சமூக ஈடுபாடும் விளக்கியதாக உலகவங்கி ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற சமூக ஈடுபாட்டை எவ்வாறு மேற்கொள்ள முடியும்? 2020ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020, துடிப்பான பொதுக் கல்வி முறையில் கணிசமான முதலீட்டை மேற்கொள்வதோடு, உண்மையான தனியார் மற்றும் சமூகப் பங்களிப்பை ஊக்குவித்து எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2021-ல் தொடங்கப்பட்ட புரிதல் மற்றும் எண்ணறிவுடன் கூடிய வாசிப்புத் திறனுக்கான தேசிய முயற்சி (National
Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy ((NIPUN BHARAT)), அடிப்படைக் கற்றலை மேம்படுத்துவதற்கான முழு சமூக அணுகுமுறையையும் ஊக்குவிப்பதன் மூலம் அடிப்படைக் கொள்கையை மேம்படுத்த முயற்சிக்கிறது.
புரிதல் மற்றும் எண்ணறிவுடன் கூடிய வாசிப்புத் திறனுக்கான தேசிய முன்னெடுப்பு (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy (NIPUN BHARAT)) இயக்கத்தை நோக்கி
ரூ. 2,500 கோடி ஆண்டு பட்ஜெட்டில், புரிதல் மற்றும் எண்ணறிவுடன் கூடிய வாசிப்புத் திறனுக்கான தேசிய முன்னெடுப்பு நன்கு தயாரிக்கப்பட்ட கற்பித்தல்-கற்றல் பொருட்கள் (teaching-learning materials (TLMs)), ஆசிரியர் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல், கண்காணிப்பு மற்றும் மாணவர்களுக்கு வழக்கமான தேர்வுகள் போன்றவற்றை ஆதரிக்கிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, முடிவுகள் நன்றாகத் தெரிகின்றன. 2024ஆம் ஆண்டு PARAKH Rashtriya Sarvekshan, தரம் 3 மாணவர்கள் மொழியில் 64% (தரம் 6-ல் 57% மற்றும் தரம் 9-ல் 54% உடன் ஒப்பிடும்போது) மற்றும் கணிதத்தில் 60% (தரம் 6-ல் 56% மற்றும் தரம் 9-ல் 37% உடன் ஒப்பிடும்போது) மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. 2024 வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (Annual Status of Education Report (ASER)), கோவிட் காரணமாக ஏற்பட்ட கற்றல் இழப்புக்குப் பிறகும்கூட, 2014ஆம் ஆண்டைவிட அதிகமான தரம் 3 குழந்தைகள் 2-ஆம் வகுப்பு பாடத்தைப் படித்து அடிப்படைக் கழித்தல்களைச் (simple subtraction) செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறது - வாசிப்பு ஆறு சதவீத புள்ளிகளாலும் கழித்தல் பத்து சதவீத புள்ளிகளாலும் அதிகரித்துள்ளன.
இருப்பினும், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் தர-நிலை திறன்களை அடைய உதவ, NIPUN BHARAT இயக்கம் ஒரு பெரிய இயக்கமாக மாற வேண்டும். அரசாங்கம் அடிப்படைக் கற்றலின் முக்கியத்துவம் மற்றும் எதிர்காலக் கற்றலில் மட்டுமல்ல, ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சித்திறனை அதிகரிப்பதிலும் அதன் தாக்கம் குறித்த புரிதலை மேம்படுத்த, அரசாங்கம் முதலில் அடிப்படைக் கற்றலிற்கான விழிப்புணர்வு மற்றும் தகவல் பிரச்சாரங்களில் முதலீடு செய்யலாம்.
தூய்மை இந்தியா இயக்கத்தில் (Swachh Bharat Mission) விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்காக தங்கள் பட்ஜெட்டுகளில் 5-15% ஒதுக்குவதன் மூலம் அதையே செய்தது. NIPUN BHARAT இயக்கமும் இதே போன்ற முதலீடுகளைப் பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்த இயக்கத்திற்கு பட்ஜெட்டில் 10% (ரூ. 250 கோடி) பரப்புரை, பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்துவது பெற்றோருக்கும் சமூகங்களுக்கும் தேவையான அறிவையும் கருவிகளையும் அளித்து, உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர உதவும்.
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் நகராட்சிகள் போன்ற உள்ளூர் தலைவர்கள் NIPUN சபைகள், வாய்மொழியாக சரளமாக வாசிக்கும் போட்டிகள், தெரு நாடகங்கள் மற்றும் சுவர் ஓவியங்கள் போன்ற சமூக நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம். பீகாரின், NIPUN கிராம சபை மாதிரியை வேறு இடங்களில் செய்து பார்க்கலாம். தலைவர்கள் (Mukhiyas) மூலம், பெற்றோர்கள் இந்த இயக்கத்தின் குறிக்கோள்களைப் பற்றியும், அவர்களின் ஈடுபாடு ஏன் முக்கியமானது என்பதையும் அறிந்து கொண்டனர். இதன் விளைவாக, பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளில் பெற்றோர் வருகை 20–30%-லிருந்து 60%-ஆகவும், மாணவர் வருகை 58–65%-லிருந்து 70–76%ஆகவும் ஒரு வருடத்தில் அதிகரித்தது.
ஆசிரியர்களின் பங்கு
ஆசிரியர்களின் பார்வையை மாறலாம். மேலும், அவர்களின் விருமபங்களும் அதிகரிக்கலாம். திறமையான ஆசிரியர்கள் மாணவர்களின் சாதனையை 1.5 தரநிலை அளவுகளால் அதிகரிப்பதாகக் காட்டப்படுகிறது. அதே நேரத்தில் பலவீனமானவர்கள் அரைவருட வளர்ச்சியை மட்டுமே வழங்குகிறார்கள். இருப்பினும், இந்தியாவிலும் பிற வளரும் நாடுகளிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள்,
பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருந்தால், ஒரு மாணவருக்கு அதிகம் உதவ முடியாது என்று பல ஆசிரியர்கள் நினைப்பதைக் காட்டுகின்றன.
மேலும், ஆசிரியர்கள் பெரும்பாலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை மிகைப்படுத்தி மதிப்பிடுகிறார்கள். போராடும் மாணவர்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள், இது திறன் இடைவெளியை அதிகரிக்கிறது. அனைத்து குழந்தைகளும் வெற்றிபெற உதவ, இந்த மனநிலையை மாற்ற வேண்டும். சிறப்பு பிரச்சாரங்கள் ஆசிரியர்களுக்கு அடிப்படை கற்றல் (FLN) ஏன் முக்கியமானது
என்பதைக் கற்பிக்க முடியும். மேலும், அவர்களுக்கு வழக்கமான மாணவர் செயல்திறன் தரவை வழங்குவது அவர்களின் பங்கு பற்றிய தவறான கருத்துக்களை சரிசெய்யும்.
மாவட்ட அளவில் வெகுமதிகள் மற்றும் அங்கீகாரத் திட்டங்களைச் சேர்ப்பது ஆசிரியர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும். உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்கள் இத்தகைய அமைப்புகளை கொண்டுள்ளன. இதன் விளைவாக ஆசிரியர்களின் ஈடுபாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பெற்றோரை ஈடுபடுத்துதல்
சிறந்த பலன்களைப் பெற பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கற்றல் பயணத்தில் பங்கேற்கலாம். உலகளாவிய ஆய்வுகள், 6-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் விளைவுகளில் 61% மாறுபாட்டிற்கு பெற்றோரின் ஈடுபாடுதான் காரணம் என்பதைக் காட்டுகிறது. மேலும், வலுவான பெற்றோரின் ஈடுபாட்டைக் கொண்ட பள்ளிகள் கற்றல் விளைவுகளை மேம்படுத்தவும், குழந்தைகள் ஒரு வருடத்தில் நான்கு கூடுதல் மாத முன்னேற்றத்தை அடையவும் 10 மடங்கு அதிக வாய்ப்புள்ளது.
வழக்கமான பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள் வலுவான தொடர்புகளை உருவாக்கி, சிறந்த கல்வித் தரத்தை வலியுறுத்துகின்றன. உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில், மாதாந்திர பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள் பெற்றோர் வருகையை 28% அதிகரித்துள்ளது. 2010-ல் 5-ஆம் வகுப்புக்கு மேல் கல்வி கற்ற 35%-ஆக இருந்த படித்த தாய்மார்கள் 2022-ல் 60%-ஆக உயர்ந்துள்ளனர் - வீட்டில், படித்த தாய்மார்களின் அதிகரிப்பு ஆதரவுக்கான புதிய வாய்ப்பை வழங்குகிறது. இருப்பினும், பலருக்கு அடிப்படை கற்றலுக்கு எவ்வாறு உதவுவது என்று இன்னும் தெரியவில்லை. வீட்டுப் பணிப்புத்தகங்கள் அல்லது வாட்சாப் நினைவூட்டல்கள் போன்ற எளிய கருவிகள் நன்றாக வேலை செய்கின்றன. CSF மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, இது போன்ற பயனுள்ள அதிகரிப்புகளைப் ஈடுபட்ட பெற்றோர்கள், பயனுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி தங்கள் குழந்தையின் கற்றலில் முதலீடு செய்ய 1.16 மடங்கு அதிக வாய்ப்புள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு, பொது ஆலோசனையின் சக்தியை தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உருவாக்கம் நிரூபித்தது. இந்த உணர்வுதான் இப்போது NIPUN Bharat இயக்கத்தை வழிநடத்த வேண்டும். அரசாங்கங்கள் விழிப்புணர்வில் முதலீடு செய்யவேண்டும், சமூகங்கள் ஈடுபட வேண்டும், ஆசிரியர்கள் வழிநடத்த வேண்டும், பெற்றோர்கள் பள்ளிகளுடன் இணைந்து செயல்பட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் "மக்கள் பங்களிப்பு (Janbhagidari) மூலம் மட்டுமே, ஒவ்வொரு குழந்தையும் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவை அடைவதை உறுதிசெய்ய முடியும், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும், இந்தியாவிற்கான அடித்தளத்தை அமைக்க முடியும். NIPUN Bharat ஒரு குறிக்கோளைத் தாண்டி நகர வேண்டும்; அது மக்களாலும், வளர்ந்த இந்தியாயவை உருவாக்கும் மக்களாலும் இயக்கப்படும் ஒரு இயக்கமாக மாற வேண்டும்.
(ஷவேதா சர்மா-குக்ரேஜா, சென்ட்ரல் ஸ்கொயர் ஃபவுண்டேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆவார். ஜெயஸ்ரீ ஓசா, சென்ட்ரல் ஸ்கொயர் ஃபவுண்டேஷனின் கல்வி நிபுணர் மற்றும் மூத்த ஆலோசகர் ஆவார்.)