இஸ்ரோ தனது புதிய அறிவியல் திட்டங்களின் பலன் அனைவரையும் சென்றடைய உதவ வேண்டும்.
ஜனவரி 6 ஆம் தேதி மாலை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (Indian Space Research Organisation (ISRO)) விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் தொடர்ச்சியான கட்டளைகளை அனுப்பினர். ஆதித்யா-எல்1 (Aditya-L1) விண்கலத்தில் உள்ள ஒரு கணினி இந்தக் கட்டளைகளைப் பெற்று அதை இயக்கங்களாக மாற்றியது. இந்த இயக்கங்களால் விண்கலம் விண்வெளியில் அதன் சுற்று வட்டப் பாதையில் இயங்க தொடங்கியது. இதன் விளைவாக, ஆதித்யா-எல்1 அதன் இலக்கை அடைந்தது. இந்த இலக்கு L1 லக்ரேஞ்ச் (L1 Lagrange) புள்ளிக்கு அருகில் உள்ளது. இங்கிருந்து சூரியனை எந்த தடையும் இல்லாமல் பார்க்க முடியும். ஆதித்யா-எல்1 ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதித்யா-எல்1 என்பது சூரியனைக் கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது ஏழு கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை பற்றி ஆராயும். முதலாவது ’காணக்கூடிய கரோனாகிராஃப்’ (Visible Emission Line Coronagraph(VELC)). இது சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தைப் படிக்கும். இரண்டாவது ஒரு புற ’சூரிய ஊதா இமேஜிங் தொலைநோக்கி’ (Solar Ultraviolet Imaging Telescope (SUIT)). மூன்றாவது மற்றும் நான்காவது ’சூரிய குறைந்த ஆற்றல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்’ (Solar Low Energy X-ray Spectrometer (SoLEXS)) மற்றும் ’உயர் ஆற்றல் L1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்’ (High Energy L1 Orbiting X-ray Spectrometer(HEL1OS)) ஆகும். இது சூரிய சுடரொளி வீச்சுகள் (solar flares) மற்றும் கரோனல் வெளியேற்றங்களை (coronal mass ejections) ஆய்வு செய்யும்.
ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆதித்யா சூரியக் காற்றின் துகள் பரிசோதனை (Aditya Solar wind Particle Experiment(ASPEX)) மற்றும் ஆதித்யாவுக்கான பிளாஸ்மா பகுப்பாய்வு தொகுப்பு (Plasma Analyser Package For Aditya (PAPA)) ஆகும். இது சூரிய காற்று (solar wind) மற்றும் பிளாஸ்மாவை (plasma) பகுப்பாய்வு செய்யும். ஏழாவது டிஜிட்டல் காந்தமானிகளின் (digital magnetometers) தொகுப்பாகும். இவை விண்கலத்தைச் சுற்றியுள்ள காந்தப்புலத்தை அளவிடும்.
இஸ்ரோ ஆதித்யா-எல்1 திட்டத்திற்காக எல்1 லாக்ரேஞ்ச் புள்ளியைத் (L1 Lagrange point) தேர்ந்தெடுத்தது. இந்தப் புள்ளி பூமியிலிருந்து சூரியனை நோக்கி 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ளது. பூமி-சூரியன் அமைப்பில் உள்ள ஐந்து லாக்ரேஞ்ச் புள்ளிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த இடத்தில், பூமி மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் உள்ளன. அதாவது ஆதித்யா-எல்1 போன்ற சிறிய கருவிகள் பூமியையோ அல்லது சூரியனையோ நோக்கி வலுவாக இழுக்கப்படாது. இதன் விளைவாக, மிகக் குறைந்த எரிபொருளைப் பயன்படுத்தும் மேலும் ஆதித்யா-எல்1 லாக்ரேஞ்ச் புள்ளியில் நிலைத்து நிற்க்கும். அதன் அறிவியல் ஆராய்ச்சி பணி அதன் உந்துதல்களில் (thrusters) இருந்து உமிழ்வுகள் (emissions) சிதறிய பிறகு, அதாவது இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதித்யா-எல்1 சூரிய ஆராய்ச்சியில் இந்தியாவின் நீண்ட வரலாற்றுக்கு வலு சேர்க்கிறது. இந்த வரலாறு 1901 இல் தொடங்கப்பட்ட கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரியின் (Kodaikanal Solar Observatory) முன்னோடி. ஆதித்யா-எல்1 இந்த கண்காணிப்பை விண்வெளிக்கு கொண்டு செல்கிறது எக்ஸ்போசாட் (XPoSat) ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இது உலகின் இரண்டாவது எக்ஸ்ரே போலரிமெட்ரி செயற்கைக்கோளாகும் (X-ray polarimetry satellite). இது ஆஸ்ட்ரோசாட் (AstroSat) அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு. ஆஸ்ட்ரோசாட் அதன் சொந்த பல மைல்கற்களை எட்டியது. இந்த சாதனைகளின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பொதுமக்கள் அவற்றை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதுதான்.
உதாரணமாக, ஆதித்யா-எல்1 மற்றும் ஆஸ்ட்ரோசாட் ஆகியவை இந்தியாவின் முக்கிய சாதனைகள். இருப்பினும், அவற்றின் இமேஜிங் திறன்கள் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (James Webb Space Telescope) போல மேம்பட்டதாக இல்லை. இந்த தொலைநோக்கி மூன்று விண்வெளி நிறுவனங்களால் இயக்கப்படுகிறது. இருந்த போதிலும், இந்திய விண்கலங்கள் விண்வெளியில் உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடக்காதபோது ஏமாற்றத்தை ஏற்படுத்தும். இந்த எதிர்பார்ப்பு நியாயமானது அல்ல. அனைத்து விண்வெளி கருவிகளும் படங்களை எடுப்பதற்காக வடிவமைக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். இஸ்ரோவால் நிலைமையை மேம்படுத்த முடியும். எனினும் பொது வெளிப்பாட்டை அதிகரிப்பதன் மூலம் அவர்களால் இதைச் செய்ய முடியும். குறிப்பிட்ட ஆராய்ச்சி பணிகளில் கவனம் செலுத்தும் போது புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய அறிவியல் தகவல்தொடர்புகளையும் அவர்கள் தொடர்ந்து வெளியிடலாம்.
இந்த சாதனையில் அனைவரும், குறிப்பாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். இஸ்ரோ தனது பணிகளில் பொது நலனைக் கவரும் கூறுகளை இணைப்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். இந்த முயற்சிகளுக்கு பணம் செலவாகும், ஆனால் இஸ்ரோ சமீபத்தில் அரசாங்கத்திடமிருந்து நிறைய ஆதரவைப் பெறுவதால், நிதியைக் கோரலாம்.