விவசாயத்துடன் நிறுவன மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் இணைந்து செயல்பட வேண்டும் -எ ஸ்ரீனிவாஸ்

 சீர்திருத்தங்கள் தனியார் முதலீடு மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளில் (Farmer Producer Organizations (FPOs)) கவனம் செலுத்துகின்றன.


இந்திய விவசாயம் அதன் சவால்களுக்கு, குறிப்பாக சப்ளை செயின் (supply chain) மற்றும் நிதி தொழில்நுட்ப துறைகளில் (fintech sectors) புதுமையான தீர்வுகளை கண்டுபிடித்து வருகிறது.  சமீபத்தில் தலைநகரில் பிசினஸ்லைன் ஏற்பாடு செய்திருந்த விவசாய உச்சி மாநாடு (agricultural summit), விவசாயத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் நிறுவனங்களில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது. பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைத்த உச்சிமாநாடு, நிதி (finance), சந்தைப்படுத்தல் (marketing) மற்றும் விவசாயப் பொருட்களின் உற்பத்தி (production of agricultural goods) தொடர்பான தலைப்புகளில் கவனம் செலுத்தியது.

நிறுவன மற்றும் தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்கிறார்கள். தொழில்நுட்ப சீர்திருத்தங்கள், நிதி தொழில்நுட்பம் மற்றும் புதுமையான பயிர் வகைகளை உள்ளடக்கியது. அதே நேரத்தில், நிறுவன சீர்திருத்தங்கள் விளைபொருட்களை ஒருங்கிணைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் கவனம் செலுத்துகின்றன. ரத்து செய்யப்பட்ட பண்ணை சட்டங்களின் பங்கை மறுபரிசீலனை செய்வது நன்மை பயக்கும். ஒட்டுமொத்தமாக, பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சிறு விவசாயிகளை பற்றி கொள்கை வகுப்பதில் முதன்மைக் கவனம் செலுத்த வேண்டும். 

                   

வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் (Commission for Agriculture Costs and Prices) தலைவர், இந்தியாவில் பெரும்பாலான விவசாயிகள் சிறு நிலங்களை வைத்திருப்பதாகவும், அவர்கள் தங்கள் குடும்ப வருமானத்தில் 80% க்கும் அதிகமான தொகையை விவசாயத்தில் முதலீடு செய்வதாகவும் குறிப்பிட்டார். விவசாயத்தை நிலையானதாக மாற்ற, கார்ப்பரேட் முதலீடு, தற்போது 2% ஆக உள்ளது, இது 5% அல்லது 10% ஆக அதிகரிக்க வேண்டும். இருப்பினும், போதுமான மூலதனத்தைச் சேகரிக்க உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் போன்ற கூட்டுக் குழுக்கள் நிறுவப்பட்டால் மட்டுமே இந்த அதிகரிப்பு நிகழும். 


உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், முதன்மை வேளாண்மை கடன் சங்கங்கள் (primary agriculture credit societies) மற்றும் சுயஉதவி குழுக்கள் (Self Help Groups (SHGs)) தலைமையிலான கூட்டு விவசாயம் வேகம் பெற்று வருகிறது. எஸ்பிஐ (SBI) போன்ற வங்கிகள் இந்த   அமைப்பில் பல்வேறு விவசாய நடவடிக்கைகளுக்கு ஒருங்கிணைந்த கடன் வழங்குவதை பற்றி ஆராய்ந்து வருகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், நபார்டு (NABARD) வங்கியால் அடையாளம் காணப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினை என்னவென்றால், சிறு மற்றும் குறு விவசாயிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே நிறுவனக் கடன்களைப் பெறுகின்றனர், பெரிய விவசாயிகள் அதில் பெரும்பகுதியைப் பெறுகின்றனர்.  

 

தற்போதைய ஏற்றத்தாழ்வு, சிறு விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்க நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. இருப்பினும், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, முதன்மை வேளாண்மை கடன் சங்கம் (Primary Agricultural Credit Society (PACS)), மற்றும் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் போன்ற பல்வேறு விருப்பங்கள்,  நிதி தொழில்நுட்பம் (fintech) போன்ற தனிப்பட்ட தீர்வுகளுடன் இணைந்து திறம்பட செயல்பட முடியுமா என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நிதி தொழில்நுட்பம் பற்றிய கவலைகளையும் நாம் கவனிக்க வேண்டும். விவசாய விளைபொருட்களில் 35% க்கும் அதிகமான விளை பொருட்கள் வீணாகிவிடுவதால், சந்தைப்படுத்தல் மற்றும் சேமிப்பில் செயல்திறன் முக்கியமானது. அமுல் (Amul) அதன் பால் பொருள் உற்பத்தியில் கண்ட வெற்றியை கரிம உற்பத்தியில் (organic produce) பயன்படுத்த முயற்சிக்கிறது. செயலாக்கம்,  சேமிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் தனியார் முதலீடு போதுமானதாக இல்லை என்றால், கூட்டுறவு மற்றும் ஒத்த அணுகுமுறைகள் இந்த இந்தத் துறைக்கு மிகவும் பொருத்தமானதா என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.    

 

இந்த விவாதம் சிறு விவசாயிகளை மையமாகக் கொண்டிருந்தன. மேலும் சில மாநிலங்களில் குத்தகை விவசாயிகள் (tenant farmers) மொத்தத்தில் 50% என்று நபார்டு (NABARD) அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இருப்பினும், அவர்கள் கடன் பெற அடிக்கடி போராடுகிறார்கள். கூடுதலாக, விவசாயத்தில் 13% பெண்களுக்கு மட்டுமே நிலம் உள்ளது. முடிவில், விவசாய சீர்திருத்தங்கள் பல பெண்கள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்க வேண்டும்.




Original article:

Share: