தமிழ்நாட்டின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு $1 டிரில்லியன் பொருளாதாரத்திற்கான தொலைநோக்கு அறிக்கையுடன் தொடங்கியது ; குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின -சங்கீதா கந்தவேல்,சஞ்சய் விஜயகுமார்

 வியட்நாம் மின்வாகன (Electric Vehicle (EV)) தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast) தூத்துக்குடியில் ₹16,000 கோடி முதலீட்டில் தனது ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது; டாடா எலக்ட்ரானிக்ஸ் (Tata Electronics), ஃபர்ஸ்ட் சோலார் (First Solar), ஹூண்டாய் (Hyundai), குவால்காம் (Qualcomm), பெகாட்ரான் (Pegatron), ஜேஎஸ்டபிள்யூ (JSW) மற்றும் கோத்ரெஜ் (Godrej) உள்ளிட்ட பல நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களையும் தமிழ்நாடு ஈர்க்கிறது.

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு (Tamil Nadu Global Investors Meet (GIM)) 2024 திமுக அரசாங்கத்தால் சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப்படுகிறது. தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தை $1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் திட்டத்தை வெளியிட்டார். குறிப்பிடத்தக்க முதலீடுகளுக்கான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட நாளில், அரசாங்கம் அதன் செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட எலக்ட்ரானிக்ஸ் கொள்கை, 2024 (Semiconductor and Advanced Electronics Policy, 2024) ஐ வெளியிட்டது.


இந்த அறிக்கை  இலட்சிய இலக்கை அடைவதற்கான "வளர்ச்சி கட்டமைப்பை" கோடிட்டுக் காட்டுகிறது.  தங்கள் இலக்கை அடைய, மூலதனம் மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த முதலீடுகளை ஈர்ப்பதே இலக்கு என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


உலக முதலீட்டாளர்கள் மாநாடானது, பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சியை உயர்த்தி, தமிழகத்திற்கு பெருமையையும் முதலீட்டையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைவருக்கும் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் பல்வேறு கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதற்கு முன்பு 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு பதிப்புகள் நடைபெற்றன.


மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கையும், 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அவர்களின் இலக்கையும் எடுத்துரைத்து, உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்காக இந்திய அரசு மாநில அரசுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது என்று  கூறினார். 


வியட்நாமிய மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast) உடன் தூத்துக்குடியில் தனது ஆலையை ₹16,000 கோடி முதலீட்டில் அமைக்க மாநில அரசு மேற்கொண்ட கையெழுத்திட்ட ஒப்பந்தம் அவற்றில் முக்கியமானது. இதற்க்கு வின்ஃபாஸ்ட் இந்தியாவின் துணை தலைமை நிர்வாக அதிகாரி நுயென் டாங் குவாங், தமிழக முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

 டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (Tata Electronics) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொபைல் போன் உற்பத்தி மற்றும் அசெம்பிளி யூனிட்டிற்காக ₹12,082 கோடி முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால் 40,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிரது.  


ஸ்ரீபெரும்புதூரில் ஃபர்ஸ்ட் சோலார் (First Solar) நிறுவனத்தின் முழு ஒருங்கிணைந்த சோலார் உற்பத்தி ஆலையை (integrated solar manufacturing plant) திரு.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில் நிறுவனம் கையெழுத்திட்டது, இதனால் 350 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும். 

 

ஹூண்டாய் மோட்டார் இந்தியா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளக எரிப்பு இயந்திரம் ( internal combustion engine (ICE)) மற்றும் மின்சார கார்கள் மற்றும் மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் IIT-Madras உடன் இணைந்து "Hydrogen Valley Innovation" இல் ஓர் அலகை அமைக்க ₹6,180 கோடி கூடுதல் முதலீடுகளைச் செய்துள்ளது.


குவால்காம் (Qualcomm) சென்னையில் ஒரு புதிய வடிவமைப்பு மையத்தை ₹177.27 கோடி முதலீட்டில், நிறுவ உள்ளது இதனால் 1,600 நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும். 

         

ஆப்பிளின் விநியோகஸ்தர்  பெகாட்ரான் (Pegatron), செங்கல்பட்டில் கம்ப்யூட்டிங், தகவல் தொடர்பு மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்காக ₹1,000 கோடி முதலீடு செய்து, 8,000க்கும் மேற்பட்ட வேலை வய்ப்புகளை உருவாக்கும். 


JSW எனர்ஜி (JSW Energy) தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காக சுமார் ₹10,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 6,600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.


கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட் (Godrej Consumer Products Ltd.) சுமார் ₹515 கோடி முதலீடு செய்கிறது மற்றும் டி.வி.எஸ் (TVS) குழுமம் ₹5,000 கோடி முதலீடு செய்து சுமார் 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும். சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் ஒரு திட்டத்திற்காக மிட்சுபிஷி (Mitsubishi) ₹200 கோடி முதலீடு செய்யவுள்ளது.


ஏபி மோலர் மார்ஸ்க் (AP Moller Maersk) தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து, தளவாட தீர்வுகள் மற்றும் உலகளாவிய திறன் மையங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited) நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் துறைகளில் முதலீடு செய்வதற்கான உறுதிப்பாட்டை வீடியோ செய்தியில் பகிர்ந்து கொண்டார். ரிலையன்ஸின் ஒரு அங்கமான ஜியோ, ஏற்கனவே மாநிலத்தில் ₹35,000 கோடி முதலீடு செய்துள்ளது. ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமம் முழுவதும் 35 மில்லியன் சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் சேவைகளை வழங்குகிறது. டிசம்பரில், ஜியோ உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் 5ஜியை வேகமாக வெளியிட்டது. 


கோத்ரேஜ் கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (Godrej Consumer Products Limited) நிர்வாகத் தலைவர் நிசாபா கோத்ரெஜ் கூறுகையில், செங்கல்பட்டு வசதியை முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலையாக உருவாக்க நிறுவனம் விரும்புகிறது, அங்கு "நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது" எனத் தெரிவித்தார்.   ’அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கும் வகையில்,  குறைந்தபட்சம் 50% பெண்கள் மற்றும் 5% பாலின புதுமையினர் சமூகத்தைச் (LGBTQI community) சேர்ந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் அடிப்படையில் அரசாங்கம் தாராளமாக எங்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கியுள்ளது. இது எங்களுக்கு விதிவிலக்காக அல்ல, ஆனால் அனைத்து விருப்பமுள்ள நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்படும் ஒரு விதிமுறையாகவே செய்யப்பட்டது. என்னைப் பொறுத்தவரை, இது மாநிலத்தின் மிகவும் முற்போக்கான மனநிலையைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான பார்வையை வழங்கியது.” என்று அவர் கூறினார்.


டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் பேசுகையில், “தமிழ்நாட்டில் சாதகமான சூழல் நிலவுவதற்குக் காரணம் மிகச் சிறந்த அரசியல் தலைமை, சிறந்த அதிகாரவர்க்கம் மற்றும் அமைதியான சட்டம் ஒழுங்கு சூழ்நிலை. இது மிகவும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் கிடைப்பதன் மூலம் ஆதரிக்கப்படுகிறது. அதனால்தான் முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தை தங்கள் இலக்காக மாற்றியுள்ளன” எனக் கூறினார்.


இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)) தலைவர் ஆர்.தினேஷ், எங்கள் தரவுகளின்படி, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எங்கள் உறுப்பினர்களின் பங்களிப்பு சுமார் 25% ஆகும், மேலும் இது தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். 


தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பல்வேறு துறைகளில் மாநிலம் எவ்வாறு முதலிடத்தில் உள்ளது என்பதை எடுத்துரைத்தார், மேலும் மாநில அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு எவ்வாறு உதவியுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார். "எங்களிடம் ஒவ்வொரு 250 பேருக்கும் ஒரு மருத்துவர் இருக்கிறார், இது ஸ்காண்டிநேவிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது. நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் 1,50,000 க்கும் மேற்பட்ட பொறியாளர்களை உருவாக்குகிறோம்.”என்று அவர் கூறினார்.




Original article:

Share: