படித்த பெண்கள் ஏன் இன்னும் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்? கல்விக்கான பண ஊக்குவிப்பு வேலை செய்யவில்லையா? குழந்தை திருமணம் தாயின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
இந்தியாவில் குழந்தை திருமணம் குறித்த ஆய்வறிக்கை, லான்செட் (Lancet) இதழில் வெளியாகியுள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவில் குழந்தை திருமணம் குறைந்துள்ளது. இருப்பினும், இந்த நான்கு மாநிலங்களில் மட்டும் - பீகார் (16.7%), மேற்கு வங்காளம் (15.2%), உத்தரப் பிரதேசம் (12.5%), மற்றும் மகாராஷ்டிரம் (8.2%) - குழந்தைத் திருமணம் குறையவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
முக்கிய கண்டுபிடிப்புகள் என்ன?
'இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண் மற்றும் ஆண் குழந்தை திருமணங்களின் பரவல், 1993-2021: பல்வேறு வகுப்பினருக்கிடையே ஒரு மீளாய்வு’ (Prevalence of girl and boy child marriage across States and Union Territories in India, 1993–2021: a repeated cross-sectional study) என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை, இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண் சட்டப்பூர்வ வயதுக்குக் குறைவாகவே திருமணம் செய்துகொள்வதாக குறிப்பிடுகிறது.
சில மாநிலங்கள், குழந்தை திருமண விகிதங்களை வெற்றிகரமாக குறைத்துள்ளன, ஆனால் மேற்கு வங்கம் இதில் போராடி வருகிறது. மேற்கு வங்காளத்தில் குழந்தைத் திருமணங்கள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது, மேலும் 500,000 க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளாக இருக்கும் போதே திருமணம் செய்து கொள்கிறார்கள். இது 32.3% குழந்தை திருமண அதிகரிப்பைக் குறிக்கிறது.
மேற்கு வங்காளத்தில் குழந்தை திருமணம், குறிப்பாக பெண் குழந்தைகளின் திருமணம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. 2019-20 முதல் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (National Family Health Survey-5)இன் படி, மேற்கு வங்காளத்தில் 20-24 வயதுடைய பெண்களில் 41.6% பேர் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர், இது நாட்டின் மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4 (National Family Health Survey-4)இல் இந்த விகிதம் இருந்தது. இதற்கு நேர்மாறாக, 20-24 வயதுடைய பெண்கள் 18 வயதுக்கு முன் திருமணம் செய்துகொள்வதற்கான தேசிய சராசரி 23.3% ஆகும்.
பாதிப்பு என்ன?
குழந்தை திருமணம் என்பது மனித உரிமை மீறல் மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையின் ஒரு வடிவமாகும். மேலும், இது மாநிலத்தில் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும்.
சமீபத்தில், முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 10 குழந்தைகள் இறந்தன. இந்த குழந்தைகளில் பெரும்பாலானவை மிகவும் குறைந்த எடையுடன் பிறந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஒரு குழந்தை பிறக்கும் போது 480 கிராம் எடையுடன் இருந்தது, எவ்வளவு முயற்சி செய்தும், குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. நாம் கையாள்வது ஒரு சமூக பிரச்சனை. குழந்தை திருமணம் மற்றும் வறுமை காரணமாக, குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றன, சில சமயங்களில் மருத்துவர்களால் அவர்களைக் காப்பாற்ற முடியாது, என்று டாக்டர் டான் கூறினார்.
மேற்குவங்க மாநிலத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமான முர்ஷிதாபாத் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 கணக்கெடுப்பின்படி, அந்த மாவட்டத்தில் 20-24 வயதுடைய பெண்களில் 55.4% பேர் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டனர். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4 கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 53.5% ஆக இருந்தது.
கொள்கை தலையீடுகள் என்ன?
மேற்கு வங்க அரசு குழந்தை திருமணத்தை தடுக்கவும், பெண் கல்வியை ஊக்குவிக்கவும் கன்யாஸ்ரீ பிரகல்பா (Kanyashree Prakalpa) திட்டத்தை அக்டோபர் 2013 இல் செயல்படுத்தியது. 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொது சேவை விருதால் (United Nations Public Service Award 2017) சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டம், 10 வருட காலம் நிறைவடைந்துள்ளது 2023-24 ஆம் ஆண்டிற்கான மேற்கு வங்க பட்ஜெட்டில் இத்திட்டம் 81 லட்சம் சிறுமிகளை உள்ளடக்கியதாகக் கூறப்பட்டது.
மாநிலத்தில் பெண்களின் பள்ளி சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், தேசிய குடும்ப நல ஆய்வின் தரவு மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்கும் வாக்குறுதியை இத்திட்டம் அடைந்துள்ளதா என்ற லான்செட் (Lancet) ஆய்வின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டில், மேற்கு வங்க உயர்நிலைத் தேர்வில் பன்னிரண்டாம் வகுப்பு வாரியத் தேர்வு பெண் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 14.84% அதிகரித்துள்ளது, ஆண்களை விட 1.27 லட்சம் பெண்கள் அதிகமாக உள்ளனர். மொத்த விண்ணப்பதாரர்களில் 57.43% உள்ளனர். 2020-21 ஆம் ஆண்டிற்கான உயர்கல்விக்கான அகில இந்திய கணக்கெடுப்பு மேற்கு வங்கத்தில் 9.29 லட்சம் ஆண்களுடன் ஒப்பிடும்போது 8.63 லட்சம் பெண்களின் சேர்க்கை அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
அமர்த்தியாசென்னின் பிரதிச்சி அறக்கட்டளையின் (Pratichi Trust) தேசிய ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் சபீர் அகமது, பெண்களின் பள்ளி சேர்க்கை அதிகரித்துள்ளது, ஆனால் மேற்கு வங்கத்தில் குழந்தை திருமணம் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
"கொள்கை திட்டமிடுபவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது புதிராக உள்ளது" என்று திரு. அகமது கூறுகிறார். அதிகரித்த கல்வி நிலைகள் அதிக பெண்களை பணிபுரிபவர்களாக மாற்றவில்லை. கல்வியறிவு விகிதத்திற்கும் குழந்தை திருமணத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை என்று திரு. அகமது போன்ற ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். உயர் கல்வியறிவு இருந்தபோதிலும், சில மாவட்டங்களில் குழந்தைத் திருமண நிகழ்வுகள் விகிதாச்சாரத்தில் அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, 88% கல்வியறிவு விகிதத்திற்கு மேல் உள்ள பூர்பா மேதினிபூர் மாவட்டத்தில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு- 5 இன் படி 57.6%க்கும் அதிகமான குழந்தை திருமண நிகழ்வுகள் அதிகமாக உள்ளது.
நிபுணர்களும், மாநிலத்தின் கணிசமான மக்கள் மற்ற மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்வதால், குழந்தைத் திருமணத்தையும் இடம்பெயர்வதையும் இணைக்கின்றனர். ”வேலைக்காக பிற மாநிலங்களுக்குச் செல்லும் குறிப்பிடத்தக்க புலம்பெயர்ந்த மக்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகாத மகள்களை வீட்டில் விட விரும்பவில்லை. மேலும், இந்தப் பெண்களை மணந்த ஆண்கள், வேலைக்குச் செல்லும் போது, தங்களின் மனைவி குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்”என்று டாக்டர் டான் (Dr. Dan) இதன் சீர்கேடான சுழற்சியை விளக்கினார்.
கன்யாஸ்ரீ தவிர, மாநில அரசு பெண் குழந்தைகளின் திருமணங்களுக்கு 'ரூபஸ்ரீ பிரகல்பா' (Rupashree Prakalpa) என்ற பண ஊக்கத் திட்டத்தைக் கொண்டுள்ளது. சில குடும்பங்கள் இரண்டு திட்டங்களிலிருந்தும் பயனடைகின்றன. தங்கள் மகள்களின் திருமணத்திற்காக பணத்தைப் பயன்படுத்துகின்றன. சில சமயங்களில் பள்ளித் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
சட்டங்கள் அமல்படுத்தப்படவில்லையா?
சமூகப் பிரச்சினைகளுடன் குழந்தைத் திருமணச் சட்டங்களை அமல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. ஆகஸ்ட் 2023 இல் எம்பி சந்திராணி முர்முவின் (Chandrani Murmu) கேள்விக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குழந்தை திருமணத் தடைச் சட்டம் (Prohibition of Child Marriage Act (PCMA)), 2006 இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை அளித்தது. 2021 இல், மேற்கு வங்கம் குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006 இன் கீழ் 105 வழக்குகளைப் பதிவு செய்தது. இருப்பினும், குறைந்த மக்கள்தொகை மற்றும் குறைவான குழந்தைத் திருமண வழக்குகள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 169 வழக்குகள், கர்நாடகா 273 வழக்குகள், மற்றும் அசாம் 155 வழக்குகள் பதிவாகியுள்ளன.
2021 டிசம்பரில் குழந்தைத் திருமணத் தடை திருத்த மசோதா, 2021 (Prohibition of Child Marriage (Amendment) Bill, 2021) ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் குழந்தைத் திருமணத்தை எதிர்த்துப் போராடுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டது. இந்த மசோதா, ஆண்களின் வயதிற்கு ஏற்ப பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 21ஆக உயர்த்த முன்மொழிகிறது. இந்த மசோதா தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் (Parliamentary Standing Committee) பரிசீலனையில் உள்ளது.
அடுத்து என்ன நடக்கும் ?
குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதில் பண உதவிகளும் (cash incentives) தற்போதைய சட்டங்களும் வெற்றிபெறவில்லை என்பதற்கு மேற்கு வங்கம் ஒரு எடுத்துக்காட்டு என்பதை நிபுணர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். 2022 ஆம் ஆண்டில், மேற்கு வங்க அரசு குழந்தை திருமணத்தைத் தடுக்க மாவட்ட அளவிலான செயல் திட்டத்திற்கு அழைப்பு விடுத்தது மற்றும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியது. எவ்வாறாயினும், பஞ்சாயத்துகள், பள்ளிகள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் உட்பட அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூக பிரச்சாரம் இல்லாமல், தற்போதுள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் விருப்பம் இல்லாமல், நாட்டின் பிற பகுதிகளில் உள்ளதைப் போல அடித்தளத்தில் உள்ள நிலைமை வேகமாக முன்னேறாது.