நமது செழிப்பான பொருளாதாரம் தேசிய முன்னேற்றத்தின் அடையாளம் மட்டுமல்ல, உலகளாவிய ஒத்துழைப்புக்கான வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் உள்ளது. இது உலகிற்கு பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தை வடிவமைப்பதில் நமது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. மேலும் நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலகை உருவாக்க வலுவான மற்றும் நம்பகமான இந்தியா பங்களிக்கிறது.
கடந்த உலகப் பொருளாதார மன்றத்திற்கும் (World Economic Forum) தற்போதைய மாநாட்டிற்கும் இடையில், புவிசார் அரசியல் அவசரநிலைகள், காலநிலை மாற்றம், பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப தவறான பயன்பாட்டு அச்சுறுத்தல்கள் போன்ற சவால்களை உலகம் எதிர்கொண்டது. இருந்தபோதிலும், இந்தியாவின் ஈர்க்கக்கூடிய வளர்ச்சிப் பாதை டாவோஸ் 2024 (Davos 2024) இல் கவனத்தை ஈர்த்தது. வரவிருக்கும் வாய்ப்புகளை வணிக பார்வையாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டதால், இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)) இந்தியா பிசினஸ் ஹப் செயல்பாட்டில் சலசலத்தது.
உலகப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், புவிசார் அரசியல் சம்பவங்களால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நம்பகமான நட்பு நாடாக இருப்பதற்கான பொறுப்பை சேர்க்கிறது. வணிக நம்பகத்தன்மை மற்றும் புவிசார் அரசியல் இராஜதந்திரம் இரண்டிலும் நம்பிக்கையை உறுதி செய்கிறது. இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)) இடங்களிலிருந்து சில முக்கிய விவாதங்கள் இங்கே.
முதலாவதாக, அரசாங்கத்தின் நிலையான மற்றும் செயலூக்கமான சீர்திருத்த அறிவிப்புகளுடன், நிர்வாகத் தீர்வுகளை தீவிர அளவில் உருவாக்குவதற்கும், வழங்குவதற்கும் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்திய நாடாக இந்தியா நிலைநிறுத்தப்பட்டுள்ளது. டாவோஸில் (Davos) நடந்த விவாதங்கள் செயற்கை நுண்ணறிவு மீது கவனம் செலுத்தின. இதில், அனைவருக்கும் அதன் நன்மைகளை வலியுறுத்தியது மற்றும் அபாயங்களைக் குறைத்தது. இந்தியாவின் மிண்ணனு தலைமைத்துவம் செயற்கை நுண்ணறிவின் சிறந்த மற்றும் திறமையான பயன்பாட்டை செயல்படுத்துகிறது. இது மிண்ணனு தொழில்நுட்பங்கள் நியாயமான விலையிலும், ஏற்றுக்கொள்வதில் இவர்களின் வெற்றியைப் போலவே, செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை அடையாளம் காண்பதில் இந்திய நிறுவனங்களுக்கு முன்னணியில் இருப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
இரண்டாவதாக, டாவோஸில் முக்கிய உலகளாவிய பிரச்சினைகள், குறிப்பாக சமூக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த விவாதங்களில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பெண்கள் சிறப்பு ஓய்வறையில், பங்கேற்பாளர்கள் வளர்ச்சியில் இந்திய பெண்களின் பங்கை எடுத்துரைத்தனர். தற்போது, தொண்ணூறு மில்லியன் பெண்கள் சுயதொழில் செய்கிறார்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடனுடன் ஆண்டுதோறும் 37 பில்லியன் டாலர் மதிப்புள்ள அடிமட்ட வணிகங்களை நிர்வகிக்கிறார்கள். அவர்களின் செயல்படாத சொத்துக்கள் (non-performing assets (NPAs)) 2.5% க்கும் குறைவாக உள்ளன. இது நிதி நிறுவனங்களால் பெண்களுக்கு சொந்தமான வணிகங்களில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.
மூன்றாவதாக, எரிசக்தி குறித்த விவாதங்கள் முக்கியமானவை, உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum (WEF)) 2024 இல் காலநிலை மாற்றத்தின் முக்கியத்துவத்துடன் ஒத்துப்போகின்றன. பொருளாதார வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி சார்பு அதிகரித்து வரும் நிலையில் எரிசக்தி மாற்றத்தில் மூன்று சவால்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. அவை, கிடைக்கும் தன்மை, மலிவு மற்றும் நிலைத்தன்மை. இந்தியா பல ஆண்டுகளாக புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருக்கும் அதே வேளையில், பசுமை ஹைட்ரஜன் போன்ற புதிய ஆதாரங்கள் போன்ற தீர்வுகளை வழங்க முடியும். இந்தியாவிற்கான எந்தவொரு மாற்றமும் இடையூறு இல்லாத செயல்முறைகள் மூலம் நடத்தப்பட வேண்டும், அதற்கு விலை நிர்ணயம் தொடர்பான கொள்கை உத்திகள் தேவைப்படும்.
பல்வேறு விவாதங்களில், 2024 ஆம் ஆண்டில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தொடரும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த வளர்ச்சி மூன்று வழிகளில் சமமாக பார்க்கப்படுகிறது. முதலாவதாக, நாட்டின் ஒவ்வொரு பகுதியும் உள்கட்டமைப்பு உருவாக்கத்துடன் வளர்ச்சியை அனுபவிக்கிறது. இரண்டாவதாக, பெண்களின் வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் தொழில்முனைவோர் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பாலின உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. மூன்றாவதாக, சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மிண்ணனு தலையீடுகளுடன் ஒருங்கிணைக்க வசதி செய்வதன் மூலம் பின்தங்கிய பிரிவினரின் தேவைகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது.
மூடிஸ் முதலீட்டாளர் சேவையின் (Moody’s Investors Service) கூற்றுப்படி, உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் தொடர்ச்சியான பணவீக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்தியா நிற்கிறது. ஒரு காலத்தில் ஓரங்கட்டப்பட்ட இந்தியா, இப்போது அதன் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இவை பல்வேறு களங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. நாடு தொடர்ந்து பல பெரிய பொருளாதாரங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது, இது ஒரு வலுவான வளர்ச்சிப் பாதையைக் காட்டுகிறது. மேலும், 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா, இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகளுடன் கணிசமான உள்நாட்டு சந்தையை வழங்குகிறது. வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் (expanding middle class) மற்றும் அதிகரித்த நுகர்வோர் வாங்கும் சக்தி (rising consumer purchasing power) ஆகியவற்றுடன் இணைந்து இளைஞர்கள் மற்றும் ஆற்றல் மிக்க பணியாளர்கள், இந்தியாவின் நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் நாட்டின் பின்னடைவை வலுப்படுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான மாநாடு (United Nations Conference on Trade and Development (UNCTAD)) சபையின் உலக முதலீட்டு அறிக்கையின்படி, உலகளாவிய முதலீடுகளுக்கு உகந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நிலையை அடைய வேண்டும் என்ற அரசின் இலக்கை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். டாவோஸில் (Davos) இந்தியத் தொழில்துறையின் பங்கேற்பு, நம்பகமான உலகளாவிய கூட்டாளி மற்றும் நெகிழ்திறன் கொண்ட பொருளாதாரம் என்ற தனது நிலையை வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது.
ஒரு செழிப்பான பொருளாதாரத்துடன், இந்தியாவின் முன்னேற்றம் தேசிய எல்லைகளைத் தாண்டி, கூட்டு உலகளாவிய முன்னேற்றத்திற்கான கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது. உலகிற்கு பிரகாசமான, நீடித்த எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. மிகவும் சமமான மற்றும் அனைவரும் உள்ளடங்கிய உலகத்தை உருவாக்குவதில் நம்பகமான இந்தியா பங்கு வகிக்கிறது.
கட்டுரையாளர் இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர்.