சமீபத்திய ஆண்டுகளில் வரி அடித்தளம் (tax base)கணிசமாக விரிவடைந்துள்ளது.
வலுவான வரி வசூல் காரணமாக, சமீபத்தில் நிதிப் பற்றாக்குறைக்கான இலக்குகளை அடைவதில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் (Central Board of Direct Taxes) தொகுக்கப்பட்ட சமீபத்திய வரி தரவுகள் மூன்று நேர்மறையான போக்குகளை வெளிப்படுத்துகின்றன.
முதலாவதாக, கடந்த இருபது ஆண்டுகளில் மத்திய அரசின் மொத்த வரி வருவாய் பத்து மடங்கு அதிகரித்து ரூ.30 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த கணிசமான வளர்ச்சி ஒன்றியத்திற்கு குறிப்பிடத்தக்க செலவின சக்தியை (spending power) வழங்குகிறது. இது பிரதமர் கரிப் கல்யாண் யோஜனா (PM Garib Kalyan Yojana) போன்ற உலகளாவிய நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) காலத்தில் நிதியாண்டு: 05-14 வரயிலான வரி வசூலில் சராசரி வளர்ச்சி 14% அதிகமாக இருந்தாலும், சமீபத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி நிதியாண்டு: 2014-2023 காலத்தில் கோவிட் பின்னடைவு (Covid setback) மற்றும் பெருநிருவன வரி (corporate tax) விகிதங்களில் குறைப்பு போன்ற சவால்களை எதிர்கொண்டது. இவை இருந்தபோதிலும், கடந்த மூன்று ஆண்டுகளில் வரி வருவாய் நிதியாண்டு 2023 வரை மீண்டும் அதிகரித்துள்ளது. இது 14% க்கும் அதிகமான வரலாற்று வளர்ச்சி விகிதத்திற்கு திரும்பியுள்ளது. இரண்டாவதாக, பொருளாதாரம் ஒரு குறுகிய வரி அடித்தளத்தை நம்பியிருப்பது குறித்து நீண்டகால கவலை உள்ளது. இருப்பினும், இந்த தரவு அம்சத்தில் கணிசமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
2014 மற்றும் 2023 நிதியாண்டுகளுக்கு இடையில் வருமானத்தை தாக்கல் செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை 3.3 கோடியிலிருந்து 7.4 கோடியாக இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பின் பெரும்பகுதி தனிநபர் தாக்கல் செய்பவர்களிடமிருந்து வருகிறது. இது 3 கோடியிலிருந்து 6.9 கோடியாக வளர்ந்துள்ளது. பெரும்பாலான வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பூஜ்ஜிய வரி பொறுப்பை (zero tax liability) அறிவிக்கின்றனர். தள்ளுபடி கோரும் தனிநபர்களுக்கு வருமானத்தை கோரும் வரிச் சட்டங்கள் மற்றும் பல புதிய பரிவர்த்தனைகளுக்கு நிரந்தர கணக்கு எண் (Permanent account number(PAN)) மற்றும் வரி வசூலை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றால் இந்த வளர்ச்சி உந்தப்பட்டிருக்கலாம். இந்த தனிநபர்களின் வருமானம் விலக்கு வரம்பை மீறுவதால் வரி வருவாய் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவதாக, மொத்த வரி வருவாயில் (total tax revenues) நேரடி வரிகளின் பங்களிப்பு நிதியாண்டு-2017 இல் 49.6% ஆக குறைந்தது. ஆனால் நிதியாண்டு-2023 இல் 54.6% ஆக மீட்கப்பட்டுள்ளது. மறைமுக வரிகளை விட நேரடி வரிகள் மிகவும் முற்போக்கானவை, அவை பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் மீது சமமான சுமையை சுமத்துகின்றன.
தனிநபர் வருமான வரியுடன் (personal income tax) ஒப்பிடும்போது பெருநிறுவன வரி (corporate tax) வருவாயில் மெதுவான வளர்ச்சி என்பது கவனிக்கத்தக்க வரி தரவுகளில் மற்றொரு அம்சமாகும். கடந்த ஒன்பது ஆண்டுகளில், தனிநபர் வரி வசூல் (personal tax collections) ஆண்டுதோறும் 14.6% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பெருநிருவன வரி (corporate tax) வருவாய் 8.6% அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சற்று முன்பு நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க வரி நிவாரணம் வழங்கப்பட்ட போதிலும், அவற்றின் அடிப்படை வரி விகிதம் 30% முதல் 22% வரை குறைக்கப்பட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளில் நிதியாண்டு: 20-23 தனிநபர் வரி வசூல் 69% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பெருநிறுவன வரி (corporate tax) வசூல் 48% அதிகரித்துள்ளது. தேசிய வருமான புள்ளிவிவரங்கள் (National income statistics) மற்றும் குடும்ப சேமிப்பு தரவு (household savings data) ஆகியவை கொரோனாவுக்குப் பிந்தைய தனிநபர் வருமானத்தில் பின்னடைவைக் காட்டுகின்றன. அதே நேரத்தில் பெருநிறுவன வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளது. தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் தனிப்பட்ட மற்றும் பெருநிருவன வரி விகிதங்களுக்கு இடையிலான முரண்பாட்டை சரிசெய்ய வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்.