தேர்வில் மோசடியைத் தடுக்கும் நோக்கில் புதிய பொதுத்தேர்வு மசோதாவில் என்ன இருக்கிறது? -ஹரிகிஷன் சர்மா

 வேலைவாய்ப்பு தேர்வுகளில் நியாயமற்ற வழிமுறைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நியாயமற்ற வழிமுறைகள் என்ன, அத்தகைய சட்டத்திற்கு அரசாங்கத்தின் நியாயம் என்ன?


பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுப்பது) மசோதா (Public Examinations (Prevention of Unfair Means) Bill), 2024, பிப்ரவரி 5ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு பிப்ரவரி 6 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. இந்த மசோதா “நியாயம், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக தேர்வுகளில் நியாயமற்ற வழிமுறைகளை" நிறுத்துவதே இதன் நோக்கமாகக் கொண்டுள்ளது.


தேர்வில் "நியாயமற்ற வழிமுறைகளை" பயன்படுத்துவதன் அர்த்தம் என்ன?


இந்த மசோதாவின் பிரிவு-3 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளைக் குறிக்கிறது. இதில் பண அல்லது தவறான ஆதாயத்திற்காக செய்யப்படும் பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற வழிமுறைகளாகக் கருதப்படும் குறைந்தது 15 செயல்களைக் கோடிட்டுக் காட்டுகிறது. 


இந்தச் செயல்களில் பின்வருவன அடங்கும்: தேர்வுத் தாள்கள் அல்லது விடைக்குறிப்புகளை கசியவிடுதல், அனுமதியின்றி வினாத்தாள்களை அணுகுதல், தேர்வுகளில் மோசடி செய்வதைத் தடுப்பதற்கான புதிய பொதுத் தேர்வுகள் மசோதாவின் (new Public Examinations Bill) முக்கிய விதிகள் விடைத்தாள்களை சேதப்படுத்துதல், அங்கீகரிக்கப்படாத நபர்களின் கேள்விகளுக்குத் தீர்வு வழங்குதல் மற்றும் தேர்வின் போது விண்ணப்பதாரர்களுக்கு உதவுதல் ஆகியவை அடங்கும்.


புதிய பொதுத் தேர்வுகள் மசோதாவின் கீழ், தேர்வுகளில் மோசடி செய்வதைத் தடுக்கும் வகையில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆவணங்களைச் சிதைப்பது, கணினி நெட்வொர்க்குகள் மற்றும் போலியான இணையதளங்களை உருவாக்குவது அல்லது மோசடி அல்லது பண ஆதாயத்திற்காக போலித் தேர்வுகளை நடத்துவது ஆகியவை இதில் அடங்கும்.


மசோதாவில் வரையறுக்கப்பட்டுள்ளபடி எந்தெந்த தேர்வுகள் "பொதுத் தேர்வுகள்" ஆகும்?


பிரிவு 2(k) இன் கீழ், "பொதுத் தேர்வு" (public examination) என்பது மசோதாவின் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள "பொதுத் தேர்வு ஆணையம்" (public examination authority) அல்லது மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட வேறு எந்த அதிகாரியாலும் நடத்தப்படும் எந்தவொரு தேர்வையும் பொதுத் தேர்வை (public examination) குறிக்கிறது.


அட்டவணையில் ஐந்து பொதுத் தேர்வு அதிகாரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன:


1. குடிமை பணியாளர் தேர்வு, ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுகள், ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு, பொறியியல் சேவைகள் தேர்வு போன்ற தேர்வுகளை நடத்தும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்  (Union Public Service Commission (UPSC)).


2. மத்திய அரசாங்கத்தில் குரூப் சி (தொழில்நுட்பம் அல்லாதது) மற்றும் குரூப் பி (அரசுப்பத்திரிகை அல்லாத) பணிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission (SSC)).


3. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (Railway Recruitment Boards (RRBs)), இந்திய ரயில்வேயில் குரூப் சி மற்றும் டி பணியாளர்களை நியமிக்கின்றன.


4. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு (regional rural banks (RRBs)) அனைத்து நிலைகளிலும் பணியமர்த்தப்படும் வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் தேர்வு செய்ய்ப்படுகிறது.


5. தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)), கூட்டு நுழைவுத் தேர்வு (Joint Entrance Examination (JEE)) (மெயின்) மற்றும் நீட்-யுஜி (NEET-UG) போன்ற தேர்வுகளை நடத்துகிறது.


கூடுதலாக, அனைத்து மத்திய அரசு அமைச்சகங்கள் அல்லது துறைகள், ஊழியர்கள் வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கான துணை அலுவலகங்கள் இந்த புதிய சட்டத்தின் கீழ் வரும். இதனால், மத்திய அரசின் அறிவிப்பின் மூலம் புதிய அதிகாரிகளை சேர்க்கலாம்.


முன்மொழியப்பட்ட சட்டம், மீறல்களுக்கு என்ன தண்டனையை வழங்குகிறது?


மசோதாவின் பிரிவு 9 அனைத்து குற்றங்களும் கைது செய்யக்கூடியவை. ஜாமீனில் வெளிவர முடியாதவை மற்றும் சமரசம் செய்ய முடியாதவை என்று கூறுகிறது. அதாவது, இதன் பொருள் வாரண்ட் இல்லாமல் கைது செய்யப்படலாம், ஜாமீன் தானாக அமையாது. அதில், ஜாமீன் வழங்கப்பட வேண்டுமா என்பதை ஒரு மாஜிஸ்திரேட் முடிவு செய்வார். மேலும், இதில் அவர்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் சமரசம் செய்து கொண்டாலும் கூட சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றத்தை புகார்தாரர் திரும்பப் பெற முடியாது. மேலும் விசாரணை அவசியம் தொடர வேண்டும்.


நியாயமற்ற வழிகளில் ஈடுபடும் எவருக்கும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம். குற்றவாளி அபராதத்தைச் செலுத்தத் தவறினால், பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita), 2023 இன் படி கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


பிரிவு 10(2) இன் படி, கணினி ஆதாரங்கள் அல்லது தேர்வு நிர்வாகத்திற்கான பொருட்கள் போன்ற உதவிகளை வழங்கும் சேவை வழங்குநர் மற்ற அபராதங்களுடன் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கலாம்.


திட்டமிட்ட வினா / விடைத் தாள் கசிவுகளுக்கு கடுமையான அபராதங்களை இந்த மசோதா வழங்குகிறது. "திட்டமிடப்பட்ட குற்றம்" என்பது பொதுத் தேர்வுகளில் தவறான ஆதாயத்திற்காக ஒரு சதியில் ஒரு குழு கூட்டு சேருவதன் மூலம் சட்டவிரோத நடவடிக்கை என்று வரையறுக்கப்படுகிறது.


பிரிவு 11 (1)ல் திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கான தண்டனை ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தது ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறுகிறது.


அரசு எதற்காக இந்த மசோதாவை கொண்டு வந்தது?


சமீபத்திய ஆண்டுகளில், நாடு முழுவதும் ஆட்சேர்ப்பு தேர்வுகளின் போது வினாத்தாள் கசிந்த ஏராளமான வழக்குகள் உள்ளன. ஐந்து ஆண்டுகளில் 16 மாநிலங்களில் 48 காகிதக் கசிவுகள் நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது அரசாங்க வேலைகளுக்கான பணியமர்த்தல் செயல்முறையை பாதித்தது. இந்த காகிதக் கசிவுகள் சுமார் 1.2 லட்சம் பதவிகளுக்கு சுமார் 1.51 கோடி விண்ணப்பதாரர்களின் வாழ்க்கையைப் பாதித்தது.


இந்த மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்களின் அறிக்கை கூறுகிறது: "பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் தேர்வுகளை தாமதப்படுத்துவதற்கும் ரத்து செய்வதற்கும் வழிவகுக்கும். இது லட்சக்கணக்கான இளைஞர்களை வாய்ப்புகளை மோசமாக பாதிக்கிறது. தற்போது, நியாயமற்ற நடைமுறைகள் அல்லது செய்யப்பட்ட குற்றங்களை நிவர்த்தி செய்ய குறிப்பிட்ட சட்டம் எதுவும் இல்லை. விரிவான மத்திய சட்டத்தின் மூலம் தேர்வு அமைப்பில் உள்ள ஓட்டைகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்வது மிக முக்கியம்.

இந்த அறிக்கையானது மேலும், பொதுத் தேர்வுகளை மிகவும் வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதையும், இளைஞர்களின் நேர்மையான முயற்சிகள் முறையாக அங்கீகரிக்கப்படுவதையும், அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அறிக்கை விளக்குகிறது.


"பல்வேறு நியாயமற்ற வழிகளில் ஈடுபடும் நபர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் அல்லது நிறுவனங்களை திறம்பட மற்றும் சட்டப்பூர்வமாக தடுப்பதை நோக்கமாகக் கொண்டது மற்றும் பண அல்லது தவறான ஆதாயங்களுக்காக பொது தேர்வு முறைகளை மோசமாக பாதிக்கிறது."


மசோதாவில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தேர்வர்கள் அதன் விதிகளின் கீழ் எந்த விளைவுகளையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என்றும், சம்பந்தப்பட்ட தேர்வு ஆணையத்தின் தற்போதுள்ள நிர்வாக விதிகளால் நிர்வகிக்கப்படுவார்கள் என்றும் மசோதா தெளிவுபடுத்துகிறது.


இந்த மசோதா, சட்டமாக மாறியதும், "மாநிலங்கள் தங்கள் விருப்பப்படி ஏற்றுக்கொள்வதற்கு ஒரு மாதிரி வரைவு" என்ற முக்கியமான செயல்பாட்டிற்கும் உதவும். இது, மாநில அளவிலான பொதுத் தேர்வுகளுக்கு இடையூறு விளைவிப்பதில் இருந்து குற்றக் கூறுகளைத் தடுப்பதில் மாநிலங்களுக்கு உதவியாக இருக்கும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.




Original article:

Share: