2024-25 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நிலையை அடைய தற்போதைய திட்டத்தில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் கண்டறிந்து தீர்க்க வேண்டும்.
கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் சுகாதாரத்தை மேம்படுத்துவது குறிப்பிடத்தக்க சாதனையாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் நீர் மற்றும் சுகாதாரத்திற்கான அணுகல் இலக்கு 6 ஆகும். 1986 ஆம் ஆண்டில் மத்திய கிராமப்புற துப்புரவு திட்டத்தில் (Central Rural Sanitation Programme (CRSP)) தொடங்கி பொது துப்புரவு திட்டங்களின் வரலாற்றை இந்தியா கொண்டுள்ளது. 1999 ஆம் ஆண்டில், முழு துப்புரவு இயக்கம் குறைந்த மானியம், தேவை சார்ந்த அணுகுமுறைக்கு மாறியது. 2014 ஆம் ஆண்டில், ஸ்வச் பாரத் மிஷன்-ஊரகம் (Swachh Bharat Mission-Grameen (SBM-G)) பொது சுகாதாரத் திட்டத்தை அக்டோபர் 2019 க்குள் இந்தியாவில் திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாத (Open Defecation Free (ODF)) நிலையை அடைவதற்கான இயக்கமாக மாற்றியது.
தரவு மற்றும் நடத்தை முறைகள்
நாட்டில் துப்புரவு பாதுகாப்பு 2014 ல் 39% ஆக இருந்து 2019 ல் 100% ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் (Swachh Bharat Mission) வெற்றியின் காரணமாக, அரசு இரண்டாம் கட்டத்தைத் தொடங்கியது, கழிவுகளை நிர்வகிப்பதன் மூலமும், முன்பு தவறவிட்ட வீடுகளை இனைப்பதன் மூலமும் தூய்மையைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தியது. 2024-25-க்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையிலிருந்து தூய்மையான திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத இடமாக (ODF to ODF Plus) மாறுவதே இலக்கு. இந்தியாவில் சுமார் 85% கிராமங்கள் ஏற்கனவே திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையில் உள்ளன.
கழிப்பறைகள் கட்டுவதால் அவை பயன்படுத்தப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. 2012 தேசிய மாதிரி ஆய்வு அலுவலக கணக்கெடுப்பில் (National Sample Survey Office (NSSO)) 69வது சுற்று, 59% கிராமப்புற வீடுகளில் கழிப்பறைகள் இல்லாதபோது, கழிப்பறைகள் இருந்தும் 4% பேர் அவற்றைப் பயன்படுத்தவில்லை. மேற்கட்டமைப்பு இல்லாமை (21%), செயலிழப்பு (22%), தூய்மையின்மை (20%) மற்றும் தனிப்பட்ட காரணங்கள் (23%) ஆகியவை காரணங்களாக கூறப்படுகிறது.
பீகார், குஜராத் மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளில் 2018 இல் நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு. பீகாரில் 59%, குஜராத்தில் 66%, தெலுங்கானாவில் 76% வீடுகளில் கழிப்பறைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அணுகல் உள்ளவர்களில், பீகாரில் 38%, குஜராத்தில் 50% மற்றும் தெலுங்கானாவில் 14% பேர் குறைந்தபட்சம் ஒரு உறுப்பினராவது கழிப்பறையை பயன்படுத்தவில்லை. குஜராத்தில், ஆய்வு செய்யப்பட்ட இரண்டு மாவட்டங்களில் ஒன்றான தாஹோத் மாவட்டத்தில் தண்ணீர் கிடைக்காததால்,அதிக அளவு பயன்படுத்தப்படவில்லை .
எங்கள் 2020 ஆய்வில், குஜராத்தில் 27% வீடுகளிலும், மேற்கு வங்கத்தில் 61% வீடுகளிலும் சொந்த கழிப்பறைகள் இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். கூடுதலாக, இரு மாநிலங்களிலும் சுமார் 3% வீடுகளில் கழிப்பறைகள் இருந்தன, ஆனால் அவற்றைப் பயன்படுத்தவில்லை. குஜராத்தில், 25% கழிப்பறைகளை பயன்படுத்தாத குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்தை கூட வழங்கவில்லை, இது சமூக விதிமுறைகள் காரணமாக இருக்கலாம். குஜராத்தில் கழிப்பறையை பயன்படுத்தாதவர்களில் 17% பேர் கழிப்பறை கட்டமைப்பு உடைந்துள்ளதாகவும், 50% பேர் குழிகள் நிரம்பியுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேற்கு வங்கத்தில், பயன்படுத்தாதவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இடிந்து விழுந்த மேற்கட்டுமானங்களையும், மூன்றில் ஒரு பகுதியினர் குழிகள் நிரம்பியுள்ளதாகவும் கூறியுள்ளனர். சிலர் கழிப்பறைகளை குளிப்பதற்கும், துணிகளைத் துவைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
வெவ்வேறு மாவட்டத் தேர்வுகள் காரணமாக கழிப்பறை அணுகல் மற்றும் பயன்பாடு உள்ள குடும்பங்களின் மாறுபட்ட சதவீதத்தை வெவ்வேறு கணக்கெடுப்புகள் காட்டுகின்றன.
தேசிய வருடாந்திர கிராமப்புற சுகாதார ஆய்வு (National Annual Rural Sanitation Survey (NARSS))- சுற்று-3 2019-20 அமைச்சகத்தின்படி, இந்தியாவில் 95% கிராமப்புற குடியிருப்பாளர்கள் கழிப்பறை வசதியைக் கொண்டுள்ளனர் என்பதைக் குறிக்கிறது. இவர்களில் 79% பேர் சொந்தக் கழிப்பறைகளையும், 14% பேர் பகிரப்பட்டும், 1% பேர் பொதுக் கழிப்பறைகளையும் பயன்படுத்தினர். 96% கழிப்பறைகள் வேலை செய்வதாகவும், கிட்டத்தட்ட அனைத்திற்கும் தண்ணீர் வசதி இருப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், 85% கிராமப்புற மக்கள் மட்டுமே பாதுகாப்பான, செயல்பாட்டு மற்றும் சுகாதாரமான கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றனர். வீடுகளில் இருக்கும் அதே சதவீத மக்கள் கழிப்பறை அணுகலைக் கொண்டிருப்பதாகக் கருதினால், அணுகலுக்கும் பயன்பாட்டிற்கும் இடையே 10% இடைவெளி உள்ளது.
கணக்கெடுப்புகள் இரண்டு குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை எடுத்துக்காட்டுகின்றன: கழிப்பறைகள் இல்லாத குடும்பங்கள் மற்றும் கழிப்பறைகள் மலம் கழிக்க பயன்படுத்தப்படாமல் உள்ளவை. 2-ஆம் கட்டத்தில் விடுபட்ட குடும்பங்களைச் சேர்ப்பதன் மூலமும், முந்தைய கட்டத்தில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து தற்போதைய நிலையில் சரிசெய்வதன் மூலமும் அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.
வீட்டு அளவு, சமூக விதிமுறைகள்
கழிவறை பயன்பாடு பொருளாதார நிலைமைகள், கல்வி மற்றும் வீட்டு அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது என்பதை எங்கள் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. அதிக மக்கள் தொகை மற்றும் சமூக விதிமுறைகள் காரணமாக பெரிய குடும்பங்கள் ஒரே கழிப்பறையைப் பயன்படுத்துவது குறைவு. எங்கள் 2020 கணக்கெடுப்பில், 3%-4% வீடுகளில் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட கழிவறைகள் இருப்பதைக் கண்டறிந்தோம். கூடுதலாக, தண்ணீரை அணுகுவது சவாலானதாக இருந்தால், கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறைகிறது. தொலைதூர மற்றும் வளர்ச்சியடையாத கிராமங்களில், வீடுகளுக்கு எளிதாக தண்ணீர் கிடைக்கும் போது கழிப்பறை பயன்பாடு அதிகமாக உள்ளது. ஒரு தனி குளியலறை இருப்பது கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.
திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், பெரிய வீடுகளில் பல கழிப்பறைகள் அல்லது இணைக்கப்பட்ட குளியலறைகள் கட்டுவதற்கான தேவைகள் எதுவும் இல்லை. ஜல் ஜீவன் மிஷன் (Jal Jeevan Mission (JJM)) 2024 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், ஜல் ஜீவன் மிஷன் மீதான தனிநபர் மத்திய செலவினங்களுக்கும் வெவ்வேறு மாநிலங்களில் (ODF பிளஸ்) என அறிவிக்கப்பட்ட கிராமங்களின் சதவீதத்திற்கும் இடையே தெளிவான தொடர்பு இல்லை. இதேபோல், ஒரு மாநிலத்தில் (ODF பிளஸ்) கிராமங்களின் சதவீதத்திற்கும் குழாய் இணைப்புகள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
சமூக வலைப்பின்னல்களால் பாதிக்கப்படும் சமூக விதிமுறைகள், கழிப்பறை கட்டுமானம் மற்றும் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. இந்த நெட்வொர்க்குகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அளவு மற்றும் பண்புகளில் வேறுபடலாம் என்பதைக் கண்டறிந்தோம். சில உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் கிராமங்களில், தாழ்த்தப்பட்ட சாதியினர் சமூக நெறிமுறைகளை ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் செயல்படுத்தக்கூடியதாகவும் மாற்றுவதற்கு மற்றவர்களை இணைக்கும் உயர் திறனைக் கொண்டிருந்தனர். இந்தக் கிராமங்களில் உள்ள பல நெட்வொர்க்குகள் அதிக இணைப்புடன் கூடிய தனிநபர்கள் வழியாகச் சென்றன, அதாவது துப்புரவு முடிவுகள் தன்னிச்சையாக எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதற்கு நேர்மாறாக, உயர் சாதி கிராமங்களில் உள்ள நெட்வொர்க்குகள் மிகவும் ஒருங்கிணைந்ததாகவும், சிறியதாகவும், வேறுபட்டதாகவும் இருந்தன.
பல்வேறு சமூக-பொருளாதார குழுக்களிடையே சுகாதார நடத்தை வேறுபடுகிறது. தேசிய வருடாந்திர கிராமப்புற சுகாதார ஆய்வின் (National Annual Rural Sanitation Survey (NARSS)-3)படி, கழிவறைக்கான அணுகல் உயர் சாதியினரிடையே அதிகமாக இருந்தது (97%) மற்றும் பட்டியல் சாதியினர் (95%) குறைவாக இருந்தது. பல மாநிலங்களில் நாங்கள் நடத்திய ஆய்வில், பிற்படுத்தப்பட்ட சாதியினருடன் ஒப்பிடும்போது, உயர் சாதியினரிடையே பயன்படுத்தாதவர்களின் சதவீதம் அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது. எனவே, சுகாதார நடத்தை மாற்றத்திற்கான பிரச்சாரங்கள் இரண்டு படிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்: கழிப்பறை கட்டுமானம் மற்றும் உண்மையான பயன்பாடு. கூடுதலாக, பிரச்சார வடிவமைப்பு கிராமங்களுக்கு இடையே சமூக வலைப்பின்னல்களில் உள்ள வேறுபாடுகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சில கிராமங்களில், குடும்பங்கள் தன்னிச்சையாக நடத்தையை மாற்றிக்கொள்ளலாம், மற்றவற்றில், கூட்டு முயற்சி தேவைப்படலாம். ஸ்வச் பாரத் மிஷன்-ஊரகம் (Swachh Bharat Mission-Grameen (SBM-G)) திட்டத்தின் இரண்டாம் கட்டம், பிற்போக்கு நெறிமுறைகள் மற்றும் சாதிய படிநிலைகளைக் கொண்ட சமூகத்தில் சமூக வலைப்பின்னல்களின் பங்கை போதுமான அளவு கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை
ஒத்துழைப்பு இல்லாதது
2014 மற்றும் 2019 க்கு இடையில், தூய்மை இந்தியா இயக்கம்-ஊரக திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் சுமார் 10 கோடி கழிப்பறைகளை கட்டியது. இது பாதுகாப்பான சுகாதார நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தது, ஆனால் நாங்கள் இன்னும் பரவலான நடத்தை மாற்றத்தைக் காணவில்லை. கழிவு நீக்க ஏற்பாட்டில் நடத்தை மாற்றம் சமூக வலைப்பின்னல்கள் மற்றும் சிறந்த வீட்டுவசதி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான அணுகல் உள்ளிட்ட வாழ்க்கைத் தரங்களில் ஒட்டுமொத்த மேம்பாடுகளைச் சார்ந்துள்ளது என்பதை எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த அடிப்படைத் தேவைகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி திட்டங்கள் உள்ளன, ஆனால் அவை நன்கு ஒருங்கிணைக்கப்படவில்லை. இந்தியாவில் ஒட்டுமொத்த திட்டமிடல் இல்லாததால், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கணிசமான செலவு இருந்தபோதிலும், இந்தத் திட்டங்களிடையே ஒத்திசைவு இல்லாத நிலை ஏற்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பு இல்லாமை பொது நிதிகளை திறமையற்ற முறையில் பயன்படுத்த வழிவகுக்கும்.
இந்திரனில் டே, பேராசிரியர், இன்ஸ்டிடியூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மென்ட் ஆனந்த், குஜராத்.