எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது: இந்தியா உணவுப் பாதுகாப்பை அடைய வேளாண் விஞ்ஞானி எவ்வாறு உதவினார்? -ஹரிஷ் தாமோதரன்

 98 வயதான மொன்கொம்ப் சாம்பசிவன் சுவாமிநாதன் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமானார். 'பசுமைப் புரட்சியின் தந்தை' (Father of the Green Revolution) என்று அழைக்கப்படும் இவர், 1960 மற்றும் 1970 களில் விவசாயத்தை மாற்றியமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். 


மறைந்த இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பிப்ரவரி 9இல் அறிவித்தார்.


"நமது நாட்டின் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சவாலான காலங்களில் விவசாயத்தில் இந்தியா தன்னிறைவை அடைய உதவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் மற்றும் இந்திய விவசாயத்தை நவீனமயமாக்க குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டார். பல மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கு ஊக்கமளிக்கும் ஒரு கண்டுபிடிப்பாளராகவும் வழிகாட்டியாகவும் அவரது விலைமதிப்பற்ற பணியையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம். டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்கு தலைமை இந்திய விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் செழிப்பை உறுதி செய்தது. ”அவர் எனக்கு நெருக்கமாக தெரிந்த ஒருவர், அவரது நுண்ணறிவுகளையும் ஆலோசனைகளையும் நான் எப்போதும் மதிக்கிறேன்”, என்று பிரதமர் எக்ஸ்  பதிவில் எழுதினார்.


98 வயதான மொன்கொம்ப் சாம்பசிவன் சுவாமிநாதன் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி காலமானார். 'பசுமைப் புரட்சியின் தந்தை' என்று அழைக்கப்படும் அவர், 1960 மற்றும் 70 களில் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை அடைய உதவிய விவசாய மாற்றங்களில் முக்கிய பங்கு வகித்தார்.


தனது ஆரம்ப காலத்தில் சுவாமிநாதன் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், அவரது உண்மையான ஆர்வம் விவசாயமாக இருந்தது. இது, அவரை துறையில் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வழிவகுத்தது.


தனது தொழில் வாழ்க்கை முழுவதும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விவசாயம் தொடர்பான பல்வேறு பதவிகளை வகித்தார். உணவு மற்றும் வேளாண் அமைப்பு கவுன்சிலின் (Food and Agricultural Organisation Council) சுயாதீன தலைவர் (1981-85), இயற்கை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியத்தின் (International Union for the Conservation of Nature and Natural Resources) தலைவர் (1984-90), 1989-96 முதல் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் (World Wide Fund for Nature (India)) இந்தியத் தலைவர், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (Indian Council of Agricultural Research (ICAR)) இயக்குநர் ஜெனரல் போன்ற பதவிகள் இதில் அடங்கும்.


எம்.எஸ்.சுவாமிநாதன் யார்?


எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு அளித்த பேட்டியில், சுவாமிநாதன் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மருத்துவத்தில் ஈடுபடாமல் விவசாயத்தில் ஆர்வம் காட்டியது பற்றி பேசினார்.


1942 ஆம் ஆண்டில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் வங்காள பஞ்சத்தின் போது, நானும் பல மாணவர்களும் சுதந்திர இந்தியாவுக்கு பங்களிக்க வலுவான விருப்பத்தை உணர்ந்தோம். அதனால், மருத்துவம் படிக்காமல், கோவை வேளாண் கல்லுாரியில் விவசாயம் படிக்க முடிவு செய்தேன்.


2-3 மில்லியன் மக்கள் இறந்ததற்கு காரணமான வங்காள பஞ்சம், இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் கொள்கைகளால் ஏற்பட்டது. ஏனெனில் அவர்கள் தங்கள் காலனிகளில் உள்ள மக்களின் நலனை விட தங்கள் வீரர்களுக்கு தானியங்களை வழங்குவதற்கு முன்னுரிமை அளித்தனர், "நான் விவசாய ஆராய்ச்சியைத் தேர்ந்தெடுத்தேன், மரபியல் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினேன், ஏனென்றால் பயிர் வகைகளை மேம்படுத்துவது சிறிய மற்றும் பெரிய விவசாயிகளுக்கு பயனளிக்கும்" என்று சுவாமிநாதன் விளக்கினார்.


பசுமைப் புரட்சி ஒரு அறிவியல் திருப்புமுனையாகவும், உயிர்வாழ்வதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகவும் இருந்தது. சுவாமிநாதன் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆராய்ச்சி மேற்கொண்டார். 1954 ஆம் ஆண்டில், கட்டாக்கில் உள்ள மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Rice Research Institute) பணியாற்றத் தொடங்கினார். ஜபோனிகா (Japonica) வகைகளிலிருந்து இண்டிகா வகைகளுக்கு உர பதிலுக்கான மரபணுக்களை மாற்றுவதே அவரது குறிக்கோளாக இருந்தது.


இந்த வேலையை "சரியான மண் வளம் மற்றும் நீர் மேலாண்மையுடன் செழித்து வளரக்கூடிய உயர் விளைச்சல் வகைகளை உருவாக்குவதற்கான முதல் முயற்சி" என்று அவர் விவரித்தார்.


சுதந்திரத்திற்குப் பிறகு, காலனித்துவ ஆட்சியின் தாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்கான வரையறுக்கப்பட்ட வளங்கள் இந்தியாவில் இல்லை இதன்  காரணமாக இந்திய விவசாயம் போராடியது. தனக்கு தேவையான அத்தியாவசிய பயிர்களை அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.


பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரும் பல்வேறு விதைகள், போதுமான நீர்ப்பாசன வசதிகள் மற்றும் உரங்கள் ஆகியவற்றை முதன்மையாக வழங்கிய பசுமைப் புரட்சி இதை எப்படி மாற்றியது என்பதை சுவாமிநாதன் நினைவு கூர்ந்தார்.


“1947 இல், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாம் ஆண்டுக்கு 6 மில்லியன் டன் கோதுமையை உற்பத்தி செய்தோம். 1962 வாக்கில், கோதுமை உற்பத்தி ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் டன்கள் ஆனது. ஆனால் 1964 மற்றும் 1968க்கு இடையில், கோதுமையின் வருடாந்திர உற்பத்தி சுமார் 10 மில்லியன் டன்னிலிருந்து சுமார் 17 மில்லியன் டன்னாக அதிகரித்தது. இது, உற்பத்தியில் ஒரு குவாண்டம் வளர்ச்சியாக இருந்தது. அதனால்தான் இது ஒரு புரட்சிகர நடவடிக்கை என்று அழைக்கப்பட்டது. இந்திய விவசாயிகள் முன்பு நிபுணர்களால் நிராகரிக்கப்பட்டதால் இது நம்பிக்கையை அதிகரித்தது. வெளிநாட்டு வல்லுநர்கள், இந்தியா “கப்பலுக்கு வாய்க்கு” (ship-to-mouth existence) முன்னணியில் இருப்பதாகக் கூறினார்கள். இதன் பொருள் இந்தியா அமெரிக்காவிலிருந்து வரும் PL480 கோதுமையை நம்பியிருந்தது. 1966 ஆம் ஆண்டில், கடுமையான வறட்சியின் ஆண்டாக, இந்தியா 10 மில்லியன் டன்கள் PL480 கோதுமையை இறக்குமதி செய்தது.


பசுமைப் புரட்சிக்கு சுவாமிநாதன் எவ்வாறு பங்களித்தார்


அரிசி குறித்த சுவாமிநாதனின் பணிக்குப் பிறகு, அவரும் பிற விஞ்ஞானிகளும் கோதுமை பயிரின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினர்.


"கோதுமை ஒரு வித்தியாசமான கதை, ஏனென்றால் மெக்ஸிகோவில் உள்ள நார்மன் போர்லாக்கிடமிருந்து (Norman Borlaug) நோரின் குட்டை மரபணுக்களை நாங்கள் பெற வேண்டியிருந்தது" என்று சுவாமிநாதன் விளக்கினார். போர்லாக் என்ற அமெரிக்க விஞ்ஞானி, அதிக உற்பத்தித்திறன் கொண்ட பயிர் வகைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார். பின்னர் பசுமைப் புரட்சிக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக 1970 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.


தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சிக்கு பங்களித்தனர். இருப்பினும், அதிகரித்த உரம் மற்றும் நீர் பயன்பாட்டிற்கு பதிலளிக்கக்கூடிய புதிய மரபணு விகாரங்களை அறிமுகப்படுத்தும் சுவாமிநாதனின் ராஜதந்திர பார்வை முக்கியமானது.


பாரம்பரிய கோதுமை மற்றும் அரிசி வகைகள் உயரமானவை மற்றும் மெல்லியதாகவும் இருந்தன. அதாவது அவற்றின் கதிர்கள் தானியங்களால் கனமாக இருக்கும்போது அவை கனமான தானியங்களை கொண்டிருந்ததால் தரையில் தட்டையாக விழுந்தன. சுவாமிநாதன் தனது நெல் ஆராய்ச்சி மூலம் தாவரங்களின் உயரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார், ஆனால் இது பெரும் சவாலாக இருந்தது.


மியூட்டாஜெனீசிஸைப் (mutagenesis) பயன்படுத்தி அரை-குள்ள கோதுமை வகைகளை உருவாக்கும் அவரது உத்தி - தாவரங்களை இரசாயனங்கள் அல்லது கதிர்வீச்சுக்கு அவற்றின் டிஎன்ஏவில் விரும்பத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்துதல் - வேலை செய்யவில்லை: தாவர உயரங்களைக் குறைப்பது தானியத்தின் அளவை ஒரே நேரத்தில் குறைக்க வழிவகுத்தது. -கோளப் பந்து அமைப்பு (bearing panicles) அல்லது இயர்ஹெட்ஸ்” (earheads) என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது..


ஒரு சிறந்த வகைக்கான தனது தேடலில், சுவாமிநாதன் அமெரிக்க விஞ்ஞானி ஆர்வில் வோகலை அணுகினார், அவர் கெய்ன்ஸ் என்று அழைக்கப்படும் அதிக மகசூல் தரும் 'குள்ள கோதுமையை' உருவாக்க உதவினார், இதில் நோரின் -10 என்ற வகையிலிருந்து குள்ளமான மரபணுக்கள் உள்ளன. மெக்ஸிகோவில் தனது வசந்தகால கோதுமை வகைகளில் இதே போன்ற மரபணுக்களை இணைத்த நார்மன் போர்லாக்கை சுவாமிநாதனைத் தொடர்பு கொள்ளுமாறு வோகல் பரிந்துரைத்தார். அரசு கோதுமை இனப்பெருக்கத் திட்டத்தைத் தொடங்க அனுமதித்து. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சுவாமிநாதன் முன்மொழிந்த முன்மொழிவைத் தொடர்ந்து, போர்லாக் பின்னர் இந்தியாவுக்கு வருகை தந்தார்.


சுவாமிநாதன் கூறுகையில், "நாங்கள் 1963 இல் குள்ள கோதுமை இனப்பெருக்கத் திட்டத்தைத் தொடங்கினோம், ஐந்து ஆண்டுகளுக்குள், அது 'கோதுமை புரட்சிக்கு' வழிவகுத்தது. இந்த சாதனையை நினைவு கூறும் வகையில் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி சிறப்பு தபால் தலையையும் வெளியிட்டார்.


பசுமைப் புரட்சியின் பக்க விளைவுகள்


பசுமைப் புரட்சி, இந்தியாவில் உணவு தன்னிறைவுக்கு முக்கியமானது என்றாலும், ஏற்கனவே வளமான விவசாயிகளுக்கு ஆதரவாக விமர்சனங்களை எதிர்கொண்டது, குறிப்பாக அதிக உற்பத்தித்திறன் கொண்ட மாநிலங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.


ஜனவரி 1968 ஜனவரியில் வாரணாசியில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரஸில் பேசிய சுவாமிநாதன் இந்தப் பிரச்சனைகளை கவனித்தார். பல்வேறு உள்ளூர் பயிர் வகைகளை பெரிய பகுதிகளில் ஒரு சில உயர் விளைச்சல் விகாரங்களுடன் மாற்றுவதன் அபாயங்கள், மண் பாதுகாப்பு இல்லாமல் போகும் மேலும்  தீவிர நில சாகுபடி பாலைவனமாதலுக்கு வழிவகுக்கும் மற்றும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் நிலத்தடி நீரின் அதிகப்படியான பயன்பாடு குறித்தும் அவர் எச்சரித்தார்.


விவசாயிகளுக்கும் தனது ஆதரவை வழங்கினார். 2004-06ல் தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவராக இருந்த அவர், விவசாயிகள் தங்கள் பயிர்களை அரசுக்கு விற்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையானது எடையிடப்பட்ட சராசரி உற்பத்தி செலவை விட குறைந்தபட்சம் 50 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.


சுவாமிநாதன் தனது பங்களிப்புகளுக்காக 1987 ஆம் ஆண்டில் முதலாவது உலக உணவு பரிசை (World Food Prize) பெற்றார். 1960களில் இந்தியாவில் அதிக மகசூல் தரும் கோதுமை மற்றும் அரிசி வகைகளை அறிமுகப்படுத்தியதற்காகவும், பரவலான பஞ்சத்தைத் தடுத்ததற்காகவும் அவர் கௌரவிக்கப்பட்டார். சில ஆண்டுகளில், கோதுமை உற்பத்தியை இரட்டிப்பாகி, இந்தியா தன்னிறைவு அடைந்து, மில்லியன் கணக்கானவர்களை பட்டினியிலிருந்து காப்பாற்றியது என்று பாராட்டுப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது 2023இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட கட்டுரையின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும்.




Original article:

Share: