விண்வெளித் துறைக்கான தெளிவான விதிமுறைகள் அரசுக்கு தேவை.
விண்வெளி ஆய்வு என்பது இறுதி எல்லையாக கருதப்படுகிறது. ஆனால், அதன் அதிகரித்து வரும் ஆய்வுகள், குறிப்பிடத்தக்க நிதி, சமூக மற்றும் அரசியல் விளைவுகளைக் கொண்டதாக மாறியுள்ளது. நீண்ட காலமாக, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் பணிகளின் அதிக செலவுகள் மற்றும் அபாயங்களால் அரசாங்க நிறுவனங்களால் மட்டுமே இவற்றை தாங்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், தற்போது தனியார் நிறுவனங்களும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அவர்கள் புதிய வாய்ப்புகளை தேடி விரைவான கண்டுபிடிப்புகளை மேற்க்கொள்ளுகிறார்கள்.
2020ல் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில் சில சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொண்டது. அரசாங்கம் 'புவியிட வழிகாட்டுதல்கள்' (Geospatial Guidelines) மற்றும் 'இந்திய விண்வெளிக் கொள்கை' (Indian Space Policy) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இது இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தையும் (Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe)) உருவாக்கியது. கூடுதலாக, தொலைத்தொடர்பு சட்டம் (Telecommunications Act) 2023 நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் 1885 இன் இந்திய தந்தி சட்டத்தை (Telegraph Act) புதுப்பித்தது. இது செயற்கைக்கோள் பிராட்பேண்ட் (satellite broadband) சேவைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தது.
பிப்ரவரி 21 அன்று, செயற்கைக்கோள் உதிரிபாகங்கள் தயாரிப்பில் 100% அன்னிய நேரடி முதலீடுகளை (foreign direct investments (FDI)) இந்திய அரசு அனுமதித்தது. இதில் செயற்கைக்கோள்களுக்கான பாகங்கள், தரைப் பகுதிகள் (ground segments) மற்றும் பயனர் பிரிவுகள் ஆகியவை அடங்கும். அவை அன்னிய நேரடி முதலீட்டுக்கான வரம்புகளை நிர்ணயித்துள்ளன செயற்கைக்கோள் உற்பத்தி, செயல்பாடுகள் மற்றும் தரவுத் தயாரிப்புகளில் 74% வரையும் ஏவுதல் வாகனங்கள் (launch vehicles), விண்வெளி துறைமுகங்கள் (space ports) மற்றும் அவற்றின் அமைப்புகளுக்கு, வரம்பு 49% வரை உள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக முதலீடுகளை அரசு ஊக்குவிக்கிறது. இது தனியார் விண்வெளி ஊர்தி ஆபரேட்டர்கள், தொழில்நுட்ப உருவாக்குநர்கள் மற்றும் பயன்பாட்டு வடிவமைப்பாளர்களுக்கு உதவும். அவர்களின் பணி இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும். இந்த நடவடிக்கை விண்வெளிக் கொள்கையின் இலக்குகளுடன் பொருந்துகிறது.
விண்வெளி தொழில்நுட்பத்தில் சீனாவுடனான இடைவெளியை குறைப்பதற்க்கு இந்தியா தனது சிறந்த வெளிநாட்டு முதலீடுகளை பயன்படுத்த இந்த முடிவு அனுமதிக்கிறது. சீனாவின் விண்வெளித் திட்டம் அதன் தனியார் துறையிலிருந்து குறிப்பிடத்தக்க உதவியைப் பெறுகிறது. இருப்பினும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க சீனா போராடி வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு அதன் ஆக்ரோஷமான வெளியுறவுக் கொள்கைகள் காரணமாகும். ஜின்பிங் (Xi Jinping) நிர்வாகம் இராணுவ நோக்கங்களுக்காக சிவில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த அணுகுமுறை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் சீனாவின் திறனை பாதிக்கிறது. அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளும் இதேபோன்ற உத்திகளைக் கொண்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe)) தலைவர் பவன் கே. கோயங்கா, 2021 முதல் 2023 வரை உலகளவில் விண்வெளித் துறையால் திரட்டப்பட்ட 37.1 பில்லியன் டாலர்களில் பெரும்பகுதி விண்வெளி புதிய தொழில் நிறுவனங்களுக்குச் (start-ups) சென்றதாகக் குறிப்பிட்டார். இந்தச் சூழலில் புதிய முதலீடுகள் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தை உயர்த்தும். இந்த முதலீடுகள் புதிய தொழில் நிறுவனங்களுக்கு (start-ups) திறமை மற்றும் பணத்திற்கான கூடுதல் அணுகலை வழங்க உதவும். அவை மேல்நிலை (upstream) செயற்கைக்கோள்களை உற்பத்தி செய்வது முதல் கீழ்நிலை செயற்கைக்கோள் சேவைகள் போன்றவை வரை வாய்ப்புகளுக்கு இடையே சிறந்த சமநிலையை உருவாக்க முடியும். தற்போது, மேல்நிலையில் (upstream) அதிக கவனம் செலுத்தப்படுகிறது. முதலீடுகள் உள்ளூர் உற்பத்தியை ஆதரிக்கும் மற்றும் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கும்.
இந்த நேர்மறையான வேகத்தைத் தக்கவைக்க, ஒழுங்குமுறை சூழல் தெளிவாக இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இது தேவையற்ற அதிகாரத்துவத்தை குறைக்க வேண்டும், பொதுமக்களின் ஆதரவை அதிகரிக்க வேண்டும்.மேலும், இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு சந்தைகளில் நுழைவதை எளிதாக்க வேண்டும்.