மிருகத்தனமான இன மோதல் -கோதாஸ்ரீ எஸ்., விக்னேஷ் ராதாகிருஷ்ணன்

 மே 3 வன்முறைக்குப் பிறகு, மணிப்பூர் அடுத்த 90 நாட்களில் மோதல்கள் இல்லாமல் 16 நாட்களை மட்டுமே அனுபவித்தது.


மே 3, 2023 அன்று இன வன்முறை வெடித்த பின்னர் மூன்று மாதங்களுக்கு மணிப்பூரில், கிட்டத்தட்ட தினமும் மோதல்கள் நடந்ததாக உள்ளூர் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட செய்திகளைப் பயன்படுத்தி தொகுக்கப்பட்ட தரவுத்தளம் வெளிப்படுத்துகிறது. ஆரம்பத்தில் குக்கி-சோ சமூகம் (Kuki-Zo community) ஆதிக்கம் செலுத்தும் மலைகளில் உள்ள சூரசந்த்பூர் மாவட்டத்தில் குவிந்திருந்த இந்த சம்பவங்கள் பின்னர் நகர்ப்புற பள்ளத்தாக்கு மாவட்டங்களான இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு மற்றும் கிராமப்புற பள்ளத்தாக்கு மாவட்டமான பிஷ்ணுபூருக்கும் பரவியது. குறிப்பாக, நாகாக்கள் ஆதிக்கம் செலுத்தும் மலை மாவட்டங்களில் ஒப்பீட்டளவில் குறைவான சம்பவங்கள் நடந்தன.


இன்றும் ஆங்காங்கே, நடந்து கொண்டிருக்கும் வன்முறை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோரை இடம்பெயர்த்துள்ளது. மே மாதத்தில், மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற நூற்றுக்கணக்கான டிரக்குகள் (hundreds of trucks) சிக்கித் தவித்தன அல்லது தாக்கப்பட்டன. இது பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்தது என்பதையும் உள்ளூர் ஊடகங்களின் செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன.


ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் (Jindal Global University) புதிய பொருளாதார ஆய்வுகள் மையத்தின் வரைபட மனிதாபிமான முன்முயற்சி (Mapping Humanitarianism Initiative) சேகரித்த தரவுகளின் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன. இந்த வன்முறையைக் கண்காணிக்க இவர்கள் உள்ளூர் ஊடக செய்திகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் அமைப்புகளின் தரவுகளைப் பயன்படுத்தினர். பாதிக்கப்பட்டோருக்கான உதவித் திட்டங்களின் (victim assistance scheme) கீழ் உரிமைகளுக்காக வாதிடும் குழுக்களின் தகவல்களும் சேர்க்கப்பட்டன. ஒரு ஆதாரத்தால், பதிவு செய்யப்பட்ட வன்முறைச் சம்பவமானது, குறுக்கு சோதனை செய்யப்பட்டன. அதே நிகழ்வைப் பற்றி தெரிந்துகொள்ள இரண்டு அல்லது மூன்று பிற ஆதாரங்களும் தெரிவிக்கின்றன.



மே 3, 2023 அன்று இன வன்முறை தொடங்கிய பின்னர் மணிப்பூரில் நடந்த அனைத்து மோதல்கள் மற்றும் ஆயுத வன்முறை சம்பவங்கள், அவை ஆபத்தானவை மற்றும் மரணம் விளைவிக்காதவை என்பதை விளக்கப்படம் 1 விளக்குகிறது. இதில், பதிவு செய்யப்பட்ட 90 நாட்களில், 16 நாட்களில் மட்டுமே வன்முறை பதிவாகவில்லை. மற்ற எல்லா நாட்களிலும், வீடுகள் மற்றும் கார்களை எரிப்பதில் இருந்து குண்டுகளை வெடிக்கச் செய்வது மற்றும் குழுக்களுக்கு இடையே ஆயுதமேந்திய மோதல்கள் வரை குறைந்தது ஒரு சம்பவமாவது நடந்தது. இந்த சம்பவங்களால் பொதுமக்களிடையே காயங்கள் மற்றும் இறப்புகளை ஏற்படுத்தியது. மேலும், இதில் வீரர்கள், வனத்துறையினர், தீயணைப்பு படையினரும் பாதிக்கப்பட்டனர்.


விளக்கப்படம் 2 வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட மாவட்டங்களைக் காட்டுகிறது. ஒவ்வொரு வட்டமும் ஒரு வன்முறை சம்பவத்தைக் குறிக்கிறது. வட்டத்தின் அளவு வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. மே 3 ஆம் தேதி சூரசந்த்பூர் மிகவும் பாதிக்கப்பட்டு மே மாதம் முழுவதும் ஒரு முக்கிய கலவர மையமாக இருந்தது. மே மாத இறுதியில், பிஷ்ணுபூர், இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு ஆகியவை மோதலின் மைய புள்ளிகளாக மாறின. காங்போக்பி, கக்சிங், சேனாபதி மற்றும் தௌபல் ஆகிய இடங்களில் மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியான வன்முறை காணப்பட்டது.


வரைபடம் 3 மணிப்பூரின் பகுதிகளை விளக்குகிறது. அவை பள்ளத்தாக்கு நகர்ப்புறம், பள்ளத்தாக்கு கிராமப்புறம், மலைகள்-குக்கி மற்றும் மலைகள்-நாகா என வகைப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளத்தாக்கு நகர்ப்புறம் என்பது 75% அல்லது அதற்கு மேற்பட்ட நகர்ப்புற மக்கள்தொகை கொண்ட பள்ளத்தாக்கில் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது. மலைகள்-நாகா பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மலைப்பகுதிகளை உள்ளடக்கியது. மீதமுள்ள மலைப்பகுதிகளில் குக்கி-சோ (Kuki-Zo) ஆதிக்கம் செலுத்துகின்றன.


வடகிழக்கு மற்றும் வடமேற்கில் நாகாக்கள் ஆதிக்கம் செலுத்தும் உக்ருல் மற்றும் தெமங்லாங் மாவட்டங்கள் பெரும்பாலும் வன்முறையிலிருந்து தப்பியுள்ளன என்பதை விளக்கப்படம் 2 மற்றும் வரைபடம் 3 ஐ ஒன்றாக பார்க்கும்போது வெளிப்படுத்துகிறது. சில வன்முறைகள் நாகாக்கள் ஆதிக்கம் செலுத்தும் தெற்கு மாவட்டங்களை அடைந்தாலும், வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. பெரும்பாலான மோதல்கள் மெய்டேய் (Meitei) ஆதிக்கம் செலுத்தும் பள்ளத்தாக்கு பகுதிகள் மற்றும் குக்கி (Kuki) ஆதிக்கம் செலுத்தும் மலைப்பகுதிகளில் நடந்தன.



இந்த வன்முறையின் மற்றொரு அம்சம் மனிதாபிமான உதவிகள் மீதான தாக்குதல்கள். மே மாதத்தில் மட்டும், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ஏராளமான லாரிகள் ஊரடங்கு உத்தரவு / முற்றுகைகள் காரணமாக சிக்கித் தவித்தன அல்லது தொந்தரவு செய்பவர்களால் தாக்கப்பட்டன என்பதை விளக்கப்படம் 4 குறிக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள், 300 க்கும் மேற்பட்ட பாலூட்டும் தாய்மார்கள், சுமார் 100 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 2,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்தனர் என்பதையும் தரவு சுட்டிக்காட்டுகிறது.




Original article:

Share: