பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை (female labour force participation rate) மேம்படுத்துவதில் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா (Deen Dayal Antyodaya Yojana(DAY)) மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்று களத்தில் இருந்து கிடைக்கும் சான்றுகள் தெரிவிக்கின்றன
2024 ஆம் ஆண்டிற்கான பொருளாதார விவகாரங்கள் துறையின் (Department of Economic Affairs) அறிக்கை, இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. கிராமப்புறங்களில், பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (female labour force participation rate (FLFPR)) 2017-18 ஆம் ஆண்டில் 24.6% ஆக இருந்து 2022-23 ஆம் ஆண்டில் 41.5% ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் இது 20.4% முதல் 25.4% வரை அதிகரித்துள்ளது. எரிவாயு இணைப்புகள் மற்றும் விவசாயத்தின் வளர்ச்சி போன்ற காரணிகளை அறிக்கை ஒப்புக்கொள்கிறது. ஆனால் முழுமையான விளக்கத்தை வழங்கவில்லை. கிராமப்புற வளர்ச்சியில் நெருக்கமாக ஈடுபட்டுள்ளவன் என்ற முறையில், தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (Deendayal Antyodaya Yojana National Rural Livelihood Mission (DAY-NRLM)) கீழ் மகளிர் குழுக்கள் மூலம் பல்வேறு வாழ்வாதாரங்களுக்கான கடன் அணுகல் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS)) மூலம் அதிகரித்த பெண் வேலைவாய்ப்பு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
2014 முதல் தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) விரிவாக்கத்தைப் புரிந்துகொள்வது அவசியம். ஆரம்பத்தில், 2011-2014 வரை தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமாக (National Rural Livelihood Mission(NRLM)) மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் 2.5 கோடி பெண்களை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போது, இந்த திட்டம் இந்தியா முழுவதும் 9.96 கோடி பெண்களை உள்ளடக்கியுள்ளது. தீன்தயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (Deendayal Antyodaya Yojana National Rural Livelihood Mission (DAY-NRLM)) கீழ் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் ரூ.38,892 கோடி மூலதன ஆதரவைப் பெற்றுள்ளன. 2011 முதல் வங்கிகளில் இருந்து ரூ.8.06 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் சமூக வளப் பணியாளர்களுடன், பின்தங்கிய குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டு மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு வெற்றிகரமாக உயர்த்தியுள்ளது. மேம்பாட்டு நடவடிக்கைக்கான நிபுணத்துவ உதவி (Professional Assistance for Development Action (PRADAN)), தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய சேவைகள் (National Dairy Development Board services), குடும்பஸ்ரீ (Kudumbsre) மற்றும் பிற போன்ற தேசிய வள அமைப்புகளுடன் பல்வேறு மட்டங்களில் உள்ள திறமையான வல்லுநர்கள், மேம்பட்ட வாழ்க்கை மற்றும் இவர்களின் வாழ்வாதாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலமும், மதிப்புமிக்க சமூக மற்றும் தனிப்பட்ட சொத்துக்களை உருவாக்குவதன் மூலமும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) ஊதியம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், பெண்களுக்கு பெரியளவில் ஊதியம் பெற இந்த இயக்கம் உதவியுள்ளது. இதன் விளைவாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) தொழிலாளர்களில் 54% க்கும் அதிகமானோர் பெண்கள், அதே நேரத்தில் ஆண்கள் வெளிச்சந்தையில் அதிக ஊதியம் பெறும் வேலைகளைத் தொடர முனைகிறார்கள். தீன்தயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM) 3.55 கோடிக்கும் மேற்பட்ட பெண் விவசாயிகளுக்கு வேளாண் சுற்றுச்சூழல் நடைமுறைகளில் உதவியுள்ளது. கூடுதலாக, தீன்தயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தைச் (DAY-NRLM) சேர்ந்த 1.19 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி தொடர்பாளர்கள் தொலைதூர பகுதிகள் மற்றும் வீடுகளில் மிண்ணனு முறையில் பணம் செலுத்துவதை சாத்தியமாக்குகின்றனர். தீன்தயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) ஒரு பகுதியான தீன்தயாள் உபாத்யாய் கிராமின் கௌசல்யா யோஜனா (Deendayal Upadhyay Grameen Kaushalya Yojana (DDU-GKY)), விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத வாழ்வாதாரங்களுக்கான திறன்களுடன் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.
பிரமோத் குமார் சிங்கின் கீழ் உள்ள கிராமப்புற மேலண்மை நிறுவனம் (Institute of Rural Management), ஆனந்த் (2018) மற்றும் அஞ்சினி கோச்சாரின் (2020) கீழ் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகக் குழுவின் (Stanford University team) மதிப்பீட்டு ஆய்வுகள், பணியின் கீழ் உள்ள குடும்பங்களின் வருமானம் மற்றும் முதிர்ச்சியடைந்த காலப்பகுதியில் கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகரிப்பை உறுதிப்படுத்தியுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட சுய உதவிக் குழுக்கள் (Self-help Groups (SHGs)) 6-8 ஆண்டுகளில் முதிர்ச்சியைக் காட்டுகின்றன. மேலும் சமூக மூலதனத்தில் கவனம் குறைந்த செயல்படாத சொத்துக்களை (nonperforming asset (NPA)) விளைவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) ஒரு விதியை அறிமுகப்படுத்தியது. அதில் 60% வேலைகள் திறமையற்ற தொழிலாளர்களாகவும், 40% மாவட்ட அளவில் விலங்குகளின் கொட்டகைகள், பண்ணைக் குளங்கள் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் போன்ற மக்கள் அதிகம் சம்பாதிக்க உதவும் திட்டங்களையும் ஊக்குவித்தனர். பிரதான் மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Gramin Awas Yojana) 90 நாட்கள் வேலை, பெரும்பாலும் பெண்ணின் பெயரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGS) பெண்களுக்கு அதிக வேலைகளுக்கு வழிவகுத்தது. ஒவ்வொரு ஆண்டும், அவை 260 கோடி நாட்களுக்கு மேல் வேலை நாட்களை உருவாக்கப்பட்டு, அதில் பாதிக்கு மேல் பெண்களுக்கான வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
விவசாயத்தில், பெரும்பாலான நிலம் ஆண்களுக்கு சொந்தமானது. ஆனால் பெண்கள் இன்னும் அதில் பாதிக்கும் மேல் பயிரிடுகிறார்கள். மகிளா கிசான் சசக்திகரன் பரியோஜனா (Mahila Kisan Sashaktikaran Pariyojana (MKSP)) 2011 இல் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) கீழ் கிருஷி சகி (Krishi Sakhi) மற்றும் பசு சகி (Pashu Sakhi) போன்ற பெண்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தொடங்கப்பட்டது. இதில், வாழ்வாதாரத்தை பன்முகப்படுத்தி வருமானத்தை அதிகரிக்கிறார்கள். பல மகளிர் குழுக்களுக்கு காய்கறிகள் மற்றும் பயிர்களை வளர்க்க நிலம் வழங்கப்பட்டது. 2017-18 முதல், ஸ்டார்ட்-அப் கிராம தொழில்முனைவோர் திட்டம் (Start-Up Village Entrepreneurship Programme (SVEP)) தொடங்கியதில், இந்த திட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் வங்கிகளின் உதவி மற்றும் அதிக சமூக முதலீட்டு நிதிகளைப் பெற அனுமதிக்கிறது. 2019 ஆம் ஆண்டில், ஸ்டார்ட்-அப் கிராம தொழில்முனைவோர் திட்டத்தின் (SVEP) இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளில் கிட்டத்தட்ட 99% பேர் தங்கள் வருமானத்தை கணிசமாக மேம்படுத்தியதாக இந்திய தர கவுன்சில் கண்டறிந்தது. ஸ்டார்ட்-அப் கிராம தொழில்முனைவோர் திட்டத்தின் (SVEP) ஏழை குடும்பங்களைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கிறது. மேலும் இவர்கள் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு உதவ நிறுவனத்திற்கான சமூக வள பணியாளர்களுக்கும் பயிற்சி அளித்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGS) ஊதிய விகிதங்கள் விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை (Consumer Price Index for Agricultural Labourers (CPI-AL)) சார்ந்துள்ளது. இருப்பினும், விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index for Agricultural Labourers (CPI-AL)) காலாவதியானது. கரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் (Garib Kalyan Anna Yojana) கீழ் இலவசமாகக் கிடைக்கும் உணவு தானியங்களுக்கு அதிக முக்கியத்துவத்துடன் குறைந்த ஊதியத்திற்கு வழிவகுத்தது. இதனால்தான் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிகமான பெண்கள் பங்கேற்கின்றனர். தேசிய அளவில், பெண்களின் பங்களிப்பு 50% க்கும் அதிகமாக உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGS) ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியத்தை வழங்குகிறது. மேலும், அதன் ஊதிய விகிதங்கள் பல மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை கொண்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (MGNREGS) ஊதியத்தை அதிகரிப்பது, உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன், ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், திறன் மேம்பாட்டை நோக்கி நகர்த்தவும் உதவும். அதிக எண்ணிக்கையிலான திறமையற்ற தொழிலாளர்களைக் குறைக்க திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை (female labour force participation rate) அதிகரிப்பதில் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) ஆகியவை முக்கியமானவை என்பதை சான்றுகள் காட்டுகின்றன.
இது பெண்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நீடித்த சொத்துக்களை உருவாக்க உதவுகிறது. பெண்கள் கூட்டமைப்புகள் கிராமப்புறங்களிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களுடன் பணிபுரியும் போது அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்படுகிறார்கள், அவர்களில் 43 சதவீதம் பேர் பெண்களும் உள்ளனர். உள்ளூர் அரசாங்கங்களும், மகளிர் கூட்டுக்களும் வழி காட்டுகின்றன.
கட்டுரையாளர் ஓர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.