தேர்தல்களை சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த உச்சநீதிமன்றம் எவ்வாறு உதவியுள்ளது ? -சஞ்சய் குமார், கார்த்திகே சிங்

 தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை (Electoral bonds scheme) 'அரசியலமைப்பிற்கு விரோதமானது' (unconstitutional) என்று ரத்து செய்ததன் மூலம்,  இந்திய உச்சநீதிமன்றம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது.


தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு சமீபத்தில் வழங்கிய தீர்ப்பானது குறிப்பிடத்தக்கது மற்றும் பாராட்டப்பட வேண்டியதாகும். ஏனெனில் இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் நோக்கத்தை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் (Association of Democratic Reforms (ADR)) vs இந்திய ஒன்றியம் (Union Of India) வழக்கில், ஒன்றிய அரசினால்  2018 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இது அரசியலமைப்பின் 19(1) (ஏ) பிரிவின் கீழ் வாக்காளர்களின் தகவலுக்கான உரிமையை மீறுவதாகக் கூறப்பட்டது. குறிப்பிடப்படாத அரசியல் நன்கொடைகளை அனுமதிக்கும் வகையில் வருமான வரிச் சட்டம் (Income Tax Act) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் (Representation of the People Act) செய்யப்பட்ட மாற்றங்களையும் நீதிமன்றம் நிராகரித்தது. 


பல காரணங்களுக்காக உச்ச நீதிமன்ற வரலாற்றில் இந்தத் தீர்ப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை முழுவதுமாக அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்த, ஒவ்வொரு அரசாங்க வாதத்தையும் நிராகரிக்கும் கடுமையான நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்த ஒரு அரிய நிகழ்வாக இதை பார்க்கிறது. அரசியலமைப்பின் உறுப்பு 19(1) (அ) இன் கீழ் தகவலுக்கான உரிமையின் நோக்கத்தை இது விரிவுபடுத்தியது என்பது மிகவும் மேம்பட்ட காரணமாகும். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "வாக்களிக்கும் தேர்வை திறம்பட செயல்படுத்துவதற்கு அரசியல் கட்சிகளின் நிதியுதவி பற்றிய தகவல் அவசியம்" என்று சரியாக வலியுறுத்தினார்.


உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, அரசியல் நிதி ஆதாரங்களை வெளிப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை மறைத்தலுக்கு எதிரான  ஒரு குறிப்பிடத்தக்க அடியாகும்.  இது ஊழலை வளர்க்கிறது மற்றும் ஆளும் கட்சியுடன் ஒரு ‘ஓர் ஆதரவிற்கு ஓர் உதவி’ (quid pro quo) எனும் கலாச்சாரத்தை வளர்க்கிறது. குறைந்த வளங்களைக் கொண்ட நன்கொடையாளர்களுக்கு மாறாக, பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களின் அரசியல் பங்களிப்புகள்,  கொள்கை உருவாக்கம் மற்றும் உரிமம் ஒதுக்கீடு ஆகியவற்றில் அரசாங்க முடிவுகளை பாதிக்க அனுமதிக்கிறது. தகவல் பெறும் உரிமை மற்றும் தகவல் தனியுரிமைக்கான நன்கொடையாளரின் உரிமை (donor’s right to informational privacy) ஆகிய இரண்டு அடிப்படை உரிமைகளுக்கு இடையிலான மோதலை நிவர்த்தி செய்வதற்கான விகிதாசாரத் தரத்தை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. முக்கியமாக, கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்ற அமர்வு, அதன் இலக்குக்கு குறைந்தபட்ச கட்டுப்பாடு நடவடிக்கையைப் பயன்படுத்தவில்லை என்றும், அடிப்படை உரிமைகளை மீறுவது நியாயமற்றது என்றும் கூறியது. கடந்த காலங்களில், இத்தகைய முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஒற்றை மற்றும் இரட்டை விகிதாச்சார தரநிலைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு நீதிமன்றங்கள் கூட்டு அல்லது பொது நலன் கோட்பாட்டைப் பயன்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் அரசியலமைப்பைப் பார்க்கும்போது, நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதில் நியாயமான அம்சங்களை வெளிப்படுத்துகிறது. 1975 ஆம் ஆண்டில் இந்திரா நேரு காந்தி vs ராஜ் நரேன் (1975) (Indira Nehru Gandhi vs Raj Narain) வழக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்திற்கு முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டியது. அப்போது, இந்தியத் தேர்தல் ஆணையமும், அதன் முகமைகளும், வேட்பாளர்களும், முறையான வாக்குப்பதிவை உறுதிசெய்வதற்குப் பொறுப்பான பிரத்யேக "பொறுப்பாளர்களாக" கருதப்பட்டனர். வாக்குப்பதிவு நாளில் நியாயமற்ற வழிமுறைகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதிலும், தேர்தல் சர்ச்சைகளுக்குப் பிறகு நியாயமான தீர்ப்பை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டது. சட்ட உத்தரவுகளின்படி ஒழுங்குமுறையின் நோக்கம் தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் சட்டப்பூர்வ சட்டத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒன்றாக கருதப்படவில்லை. பின்னர், 1990களில் மாதிரி நடத்தை விதிமுறை (Model Code of Conduct (MCC)) அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கும் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் அரசியல் கட்சிகளும் அவற்றின் உறுப்பினர்களும் ஏதேனும் தவறு செய்தால் சிக்கலில் சிக்கக்கூடும். கடந்த 20 ஆண்டுகளில், ஜனநாயக சீர்திருத்த சங்கம் (Association of Democratic Reforms (ADR)) vs இந்திய ஒன்றியம் (Union Of India (Uoi)) 2002-ல் நடந்த நீதிமன்ற தீர்ப்புகள் நியாயமான தேர்தல்களை உறுதி செய்ய நீதிமன்றங்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளன. மாதிரி நடத்தை விதிமுறையின் போது மட்டுமல்ல, அதற்கு முன்பும் கூட, தகவலறிந்த தேர்வுகளைச் செய்ய வேட்பாளர்களின் பணம் மற்றும் குற்றப் பதிவுகளைப் பற்றி வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. வேட்பாளர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பதை மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இப்போது கூறியுள்ளது. இது பணம் எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருப்பதை உறுதி செய்வது, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதாகும்.


தேர்தல் பத்திரங்கள் வழக்கில், உச்ச நீதிமன்றம் "சட்டத்தின் அடிப்படையான இருவேறுபாட்டை" எடுத்துக்காட்டியுள்ளது. இது ஒவ்வொரு வேட்பாளருக்கும், குறிப்பிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகள் 1961, விதி90ன் கீழ் தேர்தல் செலவினத்தின் சில வரம்புடன் தொடர்புடையது. இது, சட்டத்தில் ஒரு முக்கிய மோசடியை முன்னிலைப்படுத்தியது. ஒரு வேட்பாளர் தேர்தலில் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும் என்பதற்கு இது ஒரு வரம்பை அமைக்கிறது ஆனால் வேட்பாளர் பெற்ற நன்கொடைகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை எனக் குறிப்பிடுகிறது. அரசியல் கட்சிகளின் நிதியுதவி கட்டுப்படுத்தப்பட்டாலும், பிரச்சாரத்தின் போது அவற்றின் செலவுகள் கட்டுப்படுத்தப்படவில்லை. தேர்தல் வெற்றிகளைப் பாதுகாக்க நேர்மையற்ற முறைகள் பயன்படுத்தப்படலாம் என்பதால், அரசியல்வாதிகள் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தும் பணம் முக்கியமான தகவல். நீதிபதி கண்ணா வலியுறுத்தியபடி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்களிடமிருந்து கணிசமான நன்கொடைகள் தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படையாக கண்காணிக்கப்பட வேண்டும்.  

  

போக்குவரத்து, சமூக ஊடக மேலாண்மை, பேரணி செலவுகள், பிரச்சார மேலாளர்களை பணியமர்த்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்தல் செலவினங்களை அரசியல் கட்சிகள் வெளியிடக் கோருவது பொறுப்பான செலவினங்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், சட்டவிரோத நடைமுறைகளுக்கு எதிராகவும் செயல்படும். இதில் பணம் மற்றும் இலவசங்கள் விநியோகம், முக்கிய ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா (Cambridge Analytica) போன்ற முகமைகள் தவறான தகவல் மூலம் தேர்தல் தேர்வுகளை கையாளும் வகையில் சமூக ஊடக வழிமுறைகளை தவறாக பயன்படுத்துவதை உள்ளடக்கியது.


இந்த குறிப்பிடத்தக்க தீர்ப்பு, செல்லுபடியாகும் தேர்தல் மாற்றங்களுக்கான வழிகாட்டுதல்களை கோடிட்டுக் காட்டுவதன் மூலமும், சட்டமியற்றுபவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதன் மூலமும் உள்ளடக்கிய ஜனநாயகத்தின் அரசியலமைப்பின் கொள்கைகளை ஆதரிக்கிறது. இது வெளிப்படையான மற்றும் நியாயமான தேர்தல்களின் சட்டப்பூர்வ புரிதலுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளைச் சேர்க்கிறது, விதிவிலக்கான தெளிவைக் கொண்டுவருகிறது. ஒட்டுமொத்தமாக, இது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை புதுப்பித்துள்ளது. 


குமார் டெல்லியில் உள்ள வளரும் சமூகங்களின் ஆய்வு மையத்தில் (Centre for the Study of Developing Societies (CSDS)) பேராசிரியராக உள்ளார்.  

சிங் மற்றும் சச்தேவா பாட்டியாலாவில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் (Rajiv Gandhi National University of Law (RGNUL)) நான்காம் ஆண்டு மாணவர்களாக உள்ளனர். 




Original article:

Share: