மரபணு வரிசைமுறையின் (genome sequencing) கண்டுபிடிப்புகள் பரவலாக பகிரப்பட வேண்டும்.
ஜீனோம் இந்தியா திட்டம் (Genome India Project) உயிரிதொழில்நுட்பவியல் துறையால் (Department of Biotechnology) நிர்வகிக்கப்படுகிறது. இது 10,000 இந்திய மரபணுக்களை வரிசைப்படுத்தியுள்ளது. 10,000 மரபணுக்களை வரிசைப்படுத்துவது என்பது 10,000 நபர்களின் முழுமையான டிஎன்ஏவை பகுப்பாய்வு செய்வதாகும். இதன் பொருள், 10,000 பேரின் முழு மரபணுக் குறியீட்டையும் (டிஎன்ஏ புளூபிரிண்ட்) ஆய்வு செய்து, ஒரு நிலையான இந்திய மனித மரபணுவைக் குறிப்புக்காக உருவாக்க வேண்டும் என்பதாகும். இந்தியா, முதன்முதலில் 2006 இல் மனித மரபணுவை (human genome) வரிசைப்படுத்தியது. இந்த சமீபத்திய முயற்சி இந்தியாவின் விரிவான வரைபடத்தை உருவாக்குவது போன்றது. இந்த வரைபடம் அனைத்து அரசியல் அலகுகளையும் முக்கிய அம்சங்களையும் காட்டுகிறது. இது பொதுவான உலக மரபணு வரைபடம் அல்ல. 10,000 பேர் நூறுகோடி மக்களுக்கு பிரதிநிதி ஆகி விடமாட்டார்கள். இந்த, திட்டத்தின் முக்கிய பயன்பாடு நோய்களை எதிர்த்துப் போராடுவதாகும். 2009 இல், மரபியல் வல்லுநர்கள் ஒரு தொடர்பைக் கண்டறிந்தனர். அவர்கள் மயோசின் பிணைப்பு புரதம்சி கார்டியாக்3 (Myosin binding protein C, cardiac3 MYBPC3) என்ற புரதத்தை இந்தியர்களுக்கு இதய செயலிழப்பு (heart failure) அபாயத்துடன் ஒப்பிடட்டனர். 4% இந்திய வம்சாவளியைக் கொண்ட மக்கள் இந்த மரபணு மாறுபாட்டைக் கொண்டுள்ளனர். இது எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 4,500 மக்கள்தொகைக் குழுக்கள் உள்ளன. சாதி மற்றும் திருமணத்தின் அடிப்படையில் ஒரே சாதிக்குள் ஒழுங்கமைத்த அதன் நீண்ட வரலாறு உள்ளது. இதில் சில அரிய மரபணு மாறுபாடுகள் தப்பிப்பிழைத்துள்ளன. இந்த மாறுபாடுகள் தீங்கு விளைவிக்கும் மற்றும் இந்த நடைமுறைகள் இல்லாவிட்டால் காலப்போக்கில் மறைந்திருக்கலாம். 2003 ஆம் ஆண்டில், மனித ஜீனோம் திட்டம் (Human Genome Project) கிட்டத்தட்ட $3 பில்லியன் செலவில் 'மனித மரபணுவை' (human genome) வெளியிட்டது. இது ஒரு நம்பிக்கையூட்டும் சகாப்தத்தைக் குறித்தது, மரபணுவின் மர்மங்களை நாம் அவிழ்த்துவிட்டோம், ஒவ்வொரு பிரச்சனைக்குரிய மரபணுவையும் ஒரு குறிப்பிட்ட நோயுடன் இணைத்து, வடிவமைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளின் எதிர்காலத்தை கற்பனை செய்துகொண்டோம்.
ஜீனோம் இந்தியா திட்டத்தின் (Genome India Project) விளம்பரமும் இதே போன்ற வாக்குறுதிகளை அளிக்கிறது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்ததைக் காட்டுகின்றன. ஒரு சில நோய்கள் ஒரு மரபணுவால் மட்டுமே ஏற்படுகின்றன. கடுமையான நோய்களை ஏற்படுத்தும் அரிய மரபணுக்களைப் பற்றி நாம் நிறைய கற்றுக்கொண்டாலும், இந்த நோய்களுக்கு சிகிச்சையளிப்பது ஒரு சவாலாகவே உள்ளது. சிகிச்சைகள் கிடைக்கும்போது, அவை தேவைப்படுபவர்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். எனவே, நமது மரபணுக்களைப் புரிந்துகொள்வது உண்மையில் அவை எவ்வளவு சிக்கலானவை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஜீனோம் இந்தியா திட்டம் (Genome India Project) 10,000க்கும் மேற்பட்ட மரபணுக்களை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் அது அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். அதன் கண்டுபிடிப்புகள் கல்வி வட்டங்களுக்குள் மட்டும் இருக்கக்கூடாது. இது விஞ்ஞானிகள், மாணவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், நெறிமுறையாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்த ஒத்துழைப்பு இந்தியாவிற்கு அதன் மரபணு வேறுபாடு பற்றி மேலும் அறிய உதவும்.