பங்களாதேஷ், சீனா, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உலகின் மூன்றில் இரண்டு பங்கு ஹெபடைடிஸ் பி மற்றும் சி (hepatitis B and C) நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏப்ரல் 9 அன்று, வைரஸ் ஹெபடைடிஸ் நோயால் ஏற்படும் இறப்புகள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organisation (WHO)) எச்சரித்துள்ளது. இந்த நோய் இப்போது தொற்றுநோயால் இறப்பதற்கான உலகின் இரண்டாவது பெரிய காரணமாகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் 1.3 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை காசநோயால் ஏற்படும் இறப்புகளுக்கு சமம்.
உலக சுகாதார அமைப்பு 2024ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஹெபடைடிஸ் நோய் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டது. 187 நாடுகளில் வைரஸ் ஹெபடைடிஸ் வைரஸால் இறப்புகள் 2019 இல் 1.1 மில்லியனிலிருந்து 2022 இல் 1.3 மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த இறப்புகளில், 83% ஹெபடைடிஸ் பி காரணமாகவும், 17% ஹெபடைடிஸ் சி காரணமாகவும் ஏற்பட்டன.
உலக ஹெபடைடிஸ் உச்சி மாநாட்டில் (World Hepatitis Summit) பகிரப்பட்ட அறிக்கையில், ஒவ்வொரு நாளும், உலகம் முழுவதும் 3,500 பேர் ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோய்த்தொற்றுகளால் உயிரிழக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷ், சீனா, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உலகின் மூன்றில் இரண்டு பங்கு ஹெபடைடிஸ் பி மற்றும் சி (hepatitis B and C) நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 10 நாடுகளில் உள்ள அனைவரும் 2025 ஆம் ஆண்டிற்குள் நோய் தடுப்பு, நோயறிதல் மற்றும் சிகிச்சையைப் பெற முடியும் என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது. ஆப்பிரிக்காவில் முயற்சிகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர். நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு இது மிகவும் முக்கியம். என்று ஐக்கிய நாடுகளின் சுகாதார நிறுவனம் (United nations health agency) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெபடைடிஸ் நோய்த்தொற்றுகளைத் தடுப்பதில் உலகளாவிய முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இறப்புகள் இன்னும் அதிகரித்து வருகின்றன என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus) தனது கவலைகளை வெளிப்படுத்தினர்.
ஹெபடைடிஸ் நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த அதிகரிப்பு ஏற்படுகிறது. உலக சுகாதார அமைப்பு நாடுகளுக்கு உதவ எப்பொழுதும் தயாராக இருக்கிறது. கிடைக்கக்கூடிய அனைத்து கருவிகளையும் மலிவு விலையில் பயன்படுத்த அவர்களுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு விரும்புகிறது. உயிர்களைக் காப்பாற்றுவதும், அதிகரித்து வரும் இறப்புகளின் தற்போதைய எணிக்கையை குறைப்பதே தங்களின் குறிக்கோள் என்று டாக்டர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகள் 2022இன் படி, 254 மில்லியன் மக்கள் ஹெபடைடிஸ் B மற்றும் 50 மில்லியன் ஹெபடைடிஸ் C நோயினால் பாதிக்கபட்டு இருக்கின்றனர் என்பதை தரவுகள் காட்டுகின்றன. நாள்பட்ட ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோய்த்தொற்றுகளில் பாதி 30 முதல் 54 வயதுடையவர்கள். 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இந்த நோய்த்தொற்றுகளில் 12% பாதிக்கபட்டு உள்ளனர். ஹெபடைடிஸ் நோயாளிகளில் 58% ஆண்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய முன்னேற்றம் மற்றும் நோயறிதல் மற்றும் சிகிச்சையில் உள்ள இடைவெளிகளைப் பற்றி பேசுவதைத் தவிர, உலக சுகாதார அமைப்பு 2024 உலகளாவிய ஹெபடைடிஸ் அறிக்கையும் சிகிச்சைக்கான செலவினம் மற்றும் சேவை வழங்கலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டி, நிதி ஒரு சவாலாக உள்ளது என்று கூறியது.
வைரஸ் ஹெபடைடிஸுக்கான (viral hepatitis) சிகிச்சைக்கு பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் தொகுப்பை அறிக்கை விவரித்தது. இந்த நடவடிக்கைகள் 2030 க்குள் ஹெபடைடிஸ் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவை:
- சோதனை மற்றும் கண்டறிதலை மேலும் அணுகக்கூடியதாக ஆக்குதல்.
- அனைவருக்கும் சிகிச்சைக்கு சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்வதற்காக கொள்கை உருவாக்கத்திலிருந்து உண்மையான செயல்படுத்தலுக்கு நகர்தல்.
- ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஹெபடைடிஸ் தடுப்பதற்கான முயற்சிகளை அதிகரித்தல்.
- செயல்களை தெரிவிக்க சிறந்த தரவைப் பயன்படுத்துதல்.
- பாதிக்கப்பட்ட சமூகங்களில் சிவில் சமூகத்தை ஈடுபடுத்துதல்.