இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போது, வளர்ச்சியின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டியிய நேரம் இது -ரஜினி சிங்

 மின்னணுமயமாக்கல் (Digitalisation) மற்றும் அதிகரித்த முறைப்படுத்தல் (increased formalisation) ஆகியவை இந்தியாவின் திறனை உயர்த்தியதாகத் தெரிகிறது. ஆனால், நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நம்பிக்கை இப்போது உள்ளது.


ஆரோக்கியமான வளர்ச்சி, குறைந்த பணவீக்கம், ஏராளமான வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign institutional investors (FII)) மற்றும் ஆரோக்கியமான வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியவற்றால் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக செயல்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4% வளர்ந்ததாகவும், திட்ட மேலாண்மை நிறுவனத்தின் (Project Management Institute (PMI)) உற்பத்தி மார்ச் மாதத்தில் 16 மாத உயர்வான 59.1 ஐ எட்டியதாகவும் சமீபத்திய தரவு காட்டுகிறது. நமது கடன் விகிதம், தரமிறக்குவதற்கான மதிப்பீட்டு மேம்பாடுகளின் அளவீடு, 1.92 ஆக உள்ளது. இது 10 ஆண்டு சராசரியான 1.57 ஐ விட சிறந்தது. ஆனால் இன்னும் கவலைகள் உள்ளன. புதிய நிதியாண்டில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.


2023-24 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 8% க்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. இது முழு ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட 7.6% வளர்ச்சியை தாண்ட வாய்ப்புள்ளது. நுகர்வு வளர்ச்சி இன்னும் குறைவாக இருந்தாலும், வளர்ச்சி முக்கியமாக முதலீட்டால் இயக்கப்படுகிறது. 2018-19ல் தொற்றுநோய்க்கு முன் 7 சதவீதமாக இருந்த நுகர்வு மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 3 சதவீதமாக வளர்ந்துள்ளது. இந்தத் தரவு சிலரை ஆச்சரியப்படுத்தலாம். கார்கள், வீடுகள், நகைகள் மற்றும் பயணம் போன்றவற்றிற்காக பலர் நிறைய செலவு செய்கிறார்கள்.


அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருள்கள் (Fast-moving consumer goods (FMCG)) மற்றும் ஆடைகள் போன்ற குறைந்த விலை பிரிவுகள் நுகர்வோரிடமிருந்து எச்சரிக்கையுடன் செலவழிக்கப்படுகின்றன. இருப்பினும், அமைதியாக இருந்த கிராமப்புற தேவைகள் சிறப்பாக வரத் தொடங்கியுள்ளதால் நம்பிக்கை உள்ளது. நீல்சன் அறிக்கையின்படி (Nielsen report), கிராமப்புறங்களில் அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருள்களின் (FMCG) அளவு வளர்ச்சி முதல் பாதியில் 2.2 சதவீதத்திலிருந்து 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற தேவையை சுட்டிக்காட்டும் இருசக்கர வாகன விற்பனையும் மேம்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை இயல்பாக இருந்தால், ஒட்டுமொத்த நுகர்வு தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தொழில்நுட்பத் துறையில் சாத்தியமான பணிநீக்கங்கள் மற்றும் அவை நகர்ப்புற நுகர்வோர் உணர்வுகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை நாம் கண்காணிக்க வேண்டும்.


அரசாங்கம் இன்னும் திட்டங்களுக்கு மூலதன செலவுகளில் (capex-Capital expenditure) அதிக கவனம் செலுத்துகிறது. பொருளாதாரம் தொடர்ந்து வளர, தனியார் நிறுவனங்களும் அதிக முதலீடு செய்யத் தொடங்குவது முக்கியம். குறிப்பாக, எஃகு (steel), சிமென்ட் (cement), பெட்ரோ கெமிக்கல்ஸ் (petrochemicals), வாகனம் (automobile), அலுமினியம் (aluminium) மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable energy) போன்ற தொழில்களில் அதிக தனியார் முதலீட்டைக் கொண்டுள்ளது. இயந்திரங்கள் போன்ற விஷயங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் கடந்த ஆண்டில் நிறைய ஆர்டர்களைப் பெற்றுள்ளன. இப்போது, தொழிற்சாலைகள் அவற்றின் திறனில் சுமார் 74% பயன்படுத்துகின்றன. இது வழக்கமான தொகைக்கு அருகில் உள்ளது. இதன் பொருள் அடுத்த சில மாதங்களில் தனியார் நிறுவனங்கள் திட்டங்களுக்கு அதிக பணத்தை செலவிடுவதை நாம் காணலாம். இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையத்தின் (Centre for Monitoring Indian Economy (CMIE)) சமீபத்திய தரவுகள், தனியார் நிறுவனங்கள் திட்டங்களில் அதிக முதலீடு செய்வது குறித்து யோசித்து வருவதைக் காட்டுகிறது. 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, முக்கியமாக உற்பத்தி மற்றும் சேவைத் துறையால் வழிநடத்தப்பட்டது. ஏனெனில், விவசாயத் துறை மோசமான பருவமழையின் மோசமான தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதி (hotels), ஆட்டோ (auto), சுகாதாரம் (healthcare), ரியல் எஃகு, இரும்பு & எஃகு, மருந்துகள் மற்றும் நகை விற்பனையாளர்கள் போன்ற சில துறைகள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், இரசாயனங்கள், ஜவுளி மற்றும் வைரங்கள் வெளியில் இருந்து குறைந்த தேவை காரணமாக சிக்கல்களை எதிர்கொண்டன.


உலகளாவிய மந்தநிலை காரணமாக வணிக ஏற்றுமதி குறைவாக இருந்தாலும், சேவைகள் ஏற்றுமதி வலுவாக இருந்தது. மென்பொருள் சேவைகளைத் தவிர, வணிக ஆலோசனை மற்றும் பயண சேவைகளும் சிறப்பாக செயல்பட்டன. ஆரோக்கியமான பணப்பரிமாற்றங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதிகளால் ஆதரிக்கப்படும், இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6-0.7 சதவீதமாகவும், 2024-25ல் 1 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடுகிறோம். பொருளாதாரத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign institutional investors (FII)) முதலீடுகள் வலுவாக உள்ளன. 2022-23 ஆம் ஆண்டில் 5.5 பில்லியன் டாலர் நிகர வெளியேற்றங்களுடன் ஒப்பிடும்போது, 2023-24 ஆம் ஆண்டில் 41 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (Foreign direct investment (FDI)) 643 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. உலகளாவிய குறியீடுகளில் இந்திய அரசாங்கத்தின் பத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், வலுவான வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (FII) முதலீடுகள் 2024-25 ஆம் ஆண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த தாக்கங்கள் நிலையற்றதாக இருக்கும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.


நுகர்வோர் விலைக் குறியீட்டின் (consumer price index (CPI)) பணவீக்கம் இப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கான 6% ஐ விட குறைவாக உள்ளது. இது, சேவைத் துறையில் பணவீக்கம் குறைந்ததே கடந்த 3 மாதங்களில் 4 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இருப்பினும், அதிக உணவு பணவீக்கம் ஒரு கவலையாக உள்ளது. குறிப்பாக காய்கறிகள் (30%), பருப்பு வகைகள் (19%), மற்றும் மசாலாப் பொருட்கள் (14%) ஆகியவற்றில் அதிக பணவீக்கம் உள்ளது. இந்த ஆண்டு ஒரு சாதாரண பருவமழை என்று கருதினால், 2023-24 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 5.4% ஆக இருந்த நுகர்வோர் பணவீக்கம் 2024-25 ஆம் ஆண்டில் சுமார் 4.8% ஆக குறையும் என்று கணித்துள்ளது. இதில், பணவீக்கம் தொடர்ந்து குறைந்தால், அமெரிக்க பெடரல் வங்கியும் (US Fed) அதற்குள் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கினால், நிதியாண்டின் இரண்டாவது பாதியில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கக்கூடும்.


அதிக வட்டி விகிதங்கள் இருந்தபோதிலும் இந்தியாவில் சில்லறை கடன் வேகமாக அதிகரித்து வருகிறது. கவனமாக இருக்க, இந்திய ரிசர்வ் வங்கி பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களை ஆபத்தானகாக உயர்த்தியது. இது தனிநபர் கடன் வளர்ச்சியை குறைத்து, அது இன்னும் 18% ஆக உள்ளது. செலவு மற்றும் சேமிப்பு பழக்கங்களில் மாற்றங்கள் மற்றும் எளிதான கடன் அணுகல் காரணமாக இந்த போக்கு தொடரும்.


வங்கிகளின் சில்லறை கடன்கள் இன்னும் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் காட்டவில்லை. ஆனால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த வங்கிக் கடன் வலுவாக இருந்தாலும், வைப்புத்தொகை பெரிதாக வளரவில்லை. இது வங்கிகளுக்கு பணப்புழக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் அவர்களின் நிகர வட்டி வரம்புகளில் அழுத்தம் கொடுக்கிறது. இருப்பினும், வங்கிகளின் சொத்துத் தரம் ஆரோக்கியமாக இருப்பது ஆறுதலான காரணியாகும்.


இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி இந்த ஆண்டு 7% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்னணுமயமாக்கல் மற்றும் அதிகரித்த முறைப்படுத்தல் இந்தியாவின் சாத்தியமான வளர்ச்சியை அதிகரித்துள்ளது. அரசாங்கம் இப்போது தரமான வளர்ச்சியை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் சாத்தியமான அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். இடைக்கால பட்ஜெட்டில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, நிதி ஒருங்கிணைப்பு மற்றும் பொதுக் கடனைக் குறைப்பதில் அரசாங்கம் தொடர்ந்து பணியாற்ற இது ஒரு நல்ல நேரமாகும். ஒரு புதிய அரசாங்கம் விரைவில் அமைக்கப்படும் என்பதால், உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று நம்புகிறோம்.




Original article:

Share: