அசுரத்தனமான எதிர்ப்புகள் : உமர் காலித் வழக்கு பற்றி . . .

 உமர் காலித்தின் போராட்டம் கலவரத்தை ஏற்படுத்துகிறது என்று நினைக்க வேண்டாம்.


முன்னாள் பல்கலைக்கழக அறிஞர் உமர் காலித் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார். டெல்லி அமர்வு நீதிமன்றம் அவருக்கு மீண்டும் ஜாமீன் வழங்க மறுத்தது. 2020 வடகிழக்கு டெல்லி கலவரத்தின் பின்னணியில் அவர் ஒரு "பெரிய சதி"யின் ஒரு பகுதியாக இருந்ததாக அவர்கள் நம்புகிறார்கள். விசாரணை அதிக நேரம் எடுக்கிறது என்பதையோ அல்லது ஜூலை 2023-ல் வந்த தீர்ப்பு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (Unlawful Activities Prevention Act (UAPA)) கீழ் அவரது ஜாமீன் மனுவுக்கு உதவும் என்பதையோ நீதிமன்றம் ஏற்கவில்லை.


டெல்லி உயர்நீதிமன்றத்தின் 2022-ஆம் ஆண்டு  தீர்ப்பு உட்பட, உமர் காலித் ஜாமீனை மறுத்த கடந்தகால முடிவுகளை நீதிமன்றம் பின்பற்றியது. சாலை மறியல்களை ஏற்பாடு செய்ததற்கான ஆதாரமாக வாட்ஸ்அப் அரட்டைகள் (WhatsApp chats) இருந்தபோதிலும், கூட்டங்களில் கலவரம் திட்டமிடப்பட்டது என்ற டெல்லி காவல்துறையின் கூற்றை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. காலித்தின் ஜாமீன் மனு மீது விசாரணை நீண்டுகொண்டு செல்கிறது. பல நாட்களாக, நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுக்கிறது.  அவரது ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் பனிரெண்டுமுறை பட்டியலிடப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பிப்ரவரி 2024-ல் விண்ணப்பத்தை வாபஸ் பெறவும், கீழ்நீதிமன்றங்களில் மீண்டும் முயற்சி செய்யவும் அவர் முடிவு செய்தார். இருப்பினும், அமர்வு நீதிமன்றம் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.


2021-ஆம் ஆண்டில், டெல்லி கலவர வழக்கில் தொடர்புடைய மற்ற மூன்று செயற்பாட்டாளர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சாட்சியங்களை பரிசீலனை செய்த நீதிமன்றம், அவர்களின் நடவடிக்கைகளில் பயங்கரவாதத்திற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றது. எதிர்ப்பை ஒடுக்கும் முயற்சியில், போராட்டம் நடத்தும் உரிமையை பயங்கரவாதத்துடன் குழப்பி வருவதாக நீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை கலவரத்துடன் இணைத்து காவல்துறை UAPA-வை  தவறாக பயன்படுத்தியது.


குற்றச்சாட்டுகள் உண்மை என்று நீதிமன்றம் கருதினால் ஜாமீன் பெறுவதை UAPA-கடினமாக்குகிறது. மேலும், நீதிமன்ற விதிகள் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது ஆதாரங்களை ஆழமாக ஆய்வு செய்ய அனுமதிக்காது. இது, எதிர்ப்பாளர்களையும் பிடிக்காத நபர்களையும் சிறையில் அடைப்பதை காவல்துறைக்கு எளிதாக்குகிறது. உமர் காலித்தின் நியாயமற்ற சிறைத்தண்டனை நீதி அமைப்பில் உள்ள சிக்கலைக் காட்டுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு எதிரானது. எதிர்ப்பாளர்கள் தவறாக நடத்தப்படுகின்றனர். காரணமின்றி அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். பெரும்பாலும் ஜாமீன் மனுக்களை விசாரணை செய்ய நீதிமன்றம் மறுக்கிறது அல்லது தாமதப்படுத்துகிறது.




Original article:

Share: