புது தில்லியின் அதிக வெப்ப அனுபவத்தைக் காலநிலை மாற்றத்தில் பொருத்த முடியாது.
மே 29 அன்று, புது தில்லிக்கு வடக்கே உள்ள முங்கேஷ்பூர் தானியங்கி வானிலை மையம் (Mungeshpur automatic weather station) அதிகபட்சமாக 52.9 டிகிரி செல்சியஸை பதிவு செய்துள்ளது. இந்த நிலையத்தின் வெப்பமாறுமின்தடை (Thermistor) பழுதாக இருக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) பரிந்துரைத்துள்ளது. எனினும் நாட்டின் வடக்குப் பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இது பதிவானதை அடுத்து, புதுதில்லியின் நீர்வளத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். குழாய் மூலம் வாகனங்களை கழுவுபவர்களுக்கு ₹2,000 அபராதம் விதித்தார். மேலும் தண்ணீர்த் தொட்டிகள் நிரம்பி வழிய அனுமதித்தவர்களுக்கு அபராதம் விதித்தார். இங்கு தண்ணீர் வீணாவதை 200 குழுக்கள் கண்காணிக்கும் என்றார். மேலும், ஒர் இடத்தில் மக்கள் உணரும் வெப்பநிலை பல காரணிகளால் வருகிறது. பொதுக் காற்றோட்டம், கட்டிடங்களின் அடர்த்தி மற்றும் நிழல் கிடைப்பது ஆகியவை இதில் அடங்கும். கூடுதலாக, ஒரு நபரின் உடல் வெப்பத்திற்கேற்ப வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறது. ஆனால், அதீத வெப்பத்தின் விளைவுகளுக்கு காலநிலை மாற்றத்தைக் குற்றம் சாட்டுவது வழக்கமாகிவிட்டது. இது அரசாங்கத்தின் ஒருவழி எதிர்வினையாற்றல் என்ற வாதத்திற்கு வழிவகுக்கிறது. உண்மை என்னவென்றால், புதுதில்லி ஒரு பெரிய நகரம். ஆனால், காலநிலை மாதிரிகள் ஒழுங்கற்ற வெப்பத்தை நம்பத்தகுந்த வகையில் கணிக்கக்கூடிய அளவை விட சிறியது. முங்கேஷ்பூர் நகரின் வெப்பநிலை காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது. ஆனால், இந்த கண்டுபிடிப்பில் செயல்படுவதற்கு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு அல்லது வெப்ப மறுமொழி வழிமுறை எதுவும் இல்லை. புதுடெல்லியின் புதிய உத்தரவுகளின்படி, கண்காணிப்புக் குழுக்கள் சட்டவிரோத விநியோகப் பாதைகளை துண்டிக்க முடியும். இது முறைசாரா குடியிருப்புகளில் உள்ளவர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது. நியாயத்திற்காக, அனைத்துக் குடியிருப்பாளர்களுக்கும் போதுமான சட்ட இணைப்புகள் இருப்பதை நகரம் உறுதி செய்ய வேண்டும். இருப்பினும், இந்த அளவிலான நகரத்திற்கு 200 அணிகள் மிகக் குறைவாக உள்ளன. தனியார் சொத்துக்களில் நீர்ப்பயன்பாட்டை ஆராய்வதற்கான பயனுள்ள வழியும் இல்லை. இது அவர்களின் கண்காணிப்பை பலவீனமாக்குகிறது. மே 29 அன்று, நகரின் உச்சபட்ச மின்தேவை 8.3 ஜிகாவாட்டைத் தாண்டியது. அதிக வெப்பத்தால் மின் உற்பத்தி நிலையங்களில் நீர்ப்பயன்பாடு அதிகரிக்க வழிவகுக்கிறது. புதுதில்லி வெப்பச் செயல் திட்டத்தைக் கொண்டிருந்தாலும், அதன் தற்போதைய பதில் அண்டை நாடான ஹரியானாவிலிருந்து தண்ணீர் கிடைப்பது மற்றும் சட்டவிரோத நீர் இணைப்புகள் போன்ற வெளிப்புற காரணிகளைக் கருத்தில் கொள்ளவில்லை. வெப்பச் செயல் திட்டங்கள் சுற்றுப்புற வெப்பநிலை இருந்தபோதிலும் வாழ்க்கை தொடர்வதை உறுதி செய்வதற்கான நீண்டகால நடவடிக்கைகளை உள்ளடக்க வேண்டும். தண்ணீருக்காக, நகரங்கள் ஒரு அவசரகால நீர்த்தேக்கம், சேதத்தை எதிர்க்கும் விநியோக அமைப்பு மற்றும் ஆண்டு முழுவதும் திடீர்க் கழிவு சோதனைகளை நடத்தும் நகராட்சி குழுக்களை பராமரிக்க முடியும். அதிகபட்ச வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை மூடுவதற்குப் பதிலாக, அரசாங்கங்கள் பாரம்பரியக் கட்டிடக்கலை முறைகள் மூலம் குளிரூட்டலை எளிதாக்க வேண்டும். அவர்கள் நிழலான பாதசாரிகளுக்கு பாதையை அமைக்க வேண்டும் மற்றும் குளிரூட்டப்பட்ட பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். மக்கள் வெப்பத்தை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறார்களோ அதற்கு அவர்களே பதிலளிக்க வேண்டும்.