வெப்ப அலையின் தாக்கங்களைத் தணிக்கவும், நகரங்களில் தொழிலாளர்களின் உரிமைகளை மேம்படுத்தவும் தண்ணீர், நிழல் மற்றும் ஓய்விடங்களை உறுதி செய்ய நகரங்களில் தொழிலாளர்களின் உரிமைகளை மேம்படுத்த கூடுதல் வழிகளைக் கண்டறிய வேண்டும்.
வட இந்தியா கடுமையான வெப்ப அலையின்கீழ் பாதிக்கப்படுவதால், தொழிலாளர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர். டெல்லியில் 50 டிகிரி செல்சியஸை தாண்டியதாக கூறப்படுகிறது. 40 வயதான தொழிலாளி கடுமையான வெப்பத்தால் இறந்த பின்னர், லெப்டினன்ட் கவர்னர் அலுவலகம் "முன்னெப்பொழுதும் இல்லாத வெப்ப அலை" (unprecedented heat wave) காரணமாக தண்ணீர் வழங்கல், சாலைகளில் தண்ணீர் தெளித்தல் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் நேரத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது.
இந்த வெப்பத்தில் உடல் உழைப்பு செய்யும் பலருக்கு, இது ஒரு அவசரநிலையாகும். இது அவர்களின் ஆரோக்கியத்தை உடனடியாக பாதிக்கிறது. இது அவர்களின் வேலை மற்றும் வருமானத்தையும் பாதிக்கிறது. நமது நகரங்கள் நிலைமையை மோசமாக்குகின்றன. அதிக அடர்த்தி மற்றும் கட்டமைக்கப்பட்ட சூழல்கள் "வெப்பத் தீவு விளைவை" (heat island effect) ஏற்படுத்துகின்றன.
இந்தியாவில், நகர்ப்புறத் தொழிலாளர்களில் ஐந்தில் நான்கு பேர் முறைசாராத் தொழில், குறைந்தபட்ச வேலைப் பாதுகாப்பு, ஒழுங்கற்ற வருமானம், சமூகப் பாதுகாப்பற்ற பணியிடங்கள் மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆவர். இந்த நிலையற்றத் தன்மை அவர்களை வெப்ப அலைகளுக்கு எளிதில் பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது.
வெப்ப அலை செயல் திட்டங்கள் (Heat Action Plans (HAP)) வெப்பம் மற்றும் அதன் தாக்கங்களை சமாளிக்க அரசாங்கத் துறைகளுக்கான நடவடிக்கைகளைப் பட்டியலிடுகின்றன. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (National Disaster Management Authority (NDMA)) வழிகாட்டுதல்களின்படி திறம்பட செயல்படுத்த அவை நகரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் தயாரிக்கப்பட வேண்டும். வெப்ப அலை செயல் திட்டங்கள் (HAP) வெப்ப அலை பாதிப்புகளைக் குறைக்க உதவியுள்ளன மற்றும் அவற்றின் முக்கியத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், நகரங்களில் உள்ள முறைசாராத் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு பாதிக்கப்படக்கூடியக் குழுக்கள் மீதான மாறுபட்டத் தாக்கங்களை அவர்கள் தவறவிடுகிறார்கள். இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் வெப்ப அலை செயல் திட்டங்கள் (HAP) இல்லை. தற்போதுள்ள இந்தத் திட்டங்கள் தொழிலாளர்களைக் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டத் தலையீடுகள் இல்லாமல் "வெளிப்புறத் தொழிலாளர்கள்" (outdoor workers) மீது மட்டுமே கவனம் செலுத்துகின்றன. வெப்ப அலை செயல் திட்டங்கள் (HAP), அவற்றின் "பேரழிவு-அவசரநிலை" (disaster-emergency) முன்னோக்குடன், நடுத்தர முதல் நீண்டகால நடவடிக்கைகளுக்கு சிறிய இடத்தை விட்டுவிடுகின்றன மற்றும் பெரும்பாலும் நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பை புறக்கணிக்கின்றன.
தீவிர வெப்ப நிலைகளில் வேலை செய்வது முறைசாராத் தொழிலாளர்களுக்கு உற்பத்தித்திறனையும் வருமானத்தையும் குறைக்கிறது. இது உட்புற மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைப் பாதிக்கிறது. வீட்டுப் பணியாளர்கள் தொடர்ந்து சூடான அடுப்பு மற்றும் அதிக வெப்பத்தை எதிர்கொள்கின்றனர். நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் உள்ள அவர்களது வீடுகள் சிறியதாகவும், நெரிசல் மிகுந்ததாகவும் இருக்கும். கொளுத்தும் வெயிலில் பணிபுரியும் கட்டுமானத் தொழிலாளர்கள் இடைவிடாத சவால்களை எதிர்கொள்கின்றனர். பணியிடத்திற்கு அருகிலுள்ள அவர்களின் தற்காலிகத் தங்குமிடங்கள் தாங்க முடியாத வெப்பமாக உள்ளன. தெருவோர வியாபாரிகள் அழியும் பொருட்கள் விரைவில் கெட்டுப்போவதால் வருவாய் இழப்பை சந்திக்கின்றனர். அவர்களுக்கும் குறைவான வாடிக்கையாளர்களே உள்ளனர். கூடுதலாக, அவர்கள் தண்ணீர் மற்றும் நிழலில் அதிக செலவு செய்கிறார்கள். பெண் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையிலான முறைசாரா தொழிலாளர்களாக உள்ளனர். குறிப்பாக உணவு கெட்டுப்போவதால், அவர்களின் பராமரிப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பதை அவர்கள் காண்கிறார்கள். இது அடிக்கடி சமைப்பது மற்றும் சுத்தம் செய்வதை ஏற்படுத்துகிறது. அவர்கள் குடும்பத்தில் உள்ள இளைஞர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களைக் கவனிப்பதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.
சோர்வு, நீரிழப்பு, அதிகரித்த பதட்டம் மற்றும் வெப்ப பக்கவாதம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் போன்ற வெப்பம் தொடர்பான நோய்களை தொழிலாளர்கள் பெரும்பாலும் தெரிவிக்கின்றனர். பணியிடங்களில் குடிநீர் மற்றும் சூரிய நிழல் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாதது ஆபத்தை இன்னும் மோசமாக்குகிறது. பல முறைசாராத் தொழிலாளர்களுக்கு சுகாதாரக் காப்பீடு இல்லை. அவர்கள் மருத்துவப் பராமரிப்புக்காகத் தாங்களே பணம் செலுத்துகிறார்கள், இது வெப்பமான மாதங்களில் அவர்களின் வருமானத்தைக் குறைக்கிறது. குடை, நிழல், தண்ணீர், போக்குவரத்து போன்றவற்றுக்கு அதிகப் பணம் செலவழிக்கிறார்கள். அவர்களுடைய பொருட்கள் கெட்டுப்போகும் போது பணத்தையும் இழக்கிறார்கள்.
தொழிலாளர்கள் மீது வெப்ப அலைகளின் தாக்கத்தைத் தணிக்கக் கொள்கை நடவடிக்கைகள் தேவை. முதலாவதாக, வெப்ப அலைகளை நீண்டகால பேரழிவுகளாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். வழக்கமானப் பேரழிவுகள் மட்டுமல்ல, வெப்ப அலை செயல் திட்டங்களை (HAP) நீண்டகால நகர்ப்புற திட்டமிடல் (long-term measures of urban planning) மற்றும் காலநிலை செயல் திட்டங்களுடன் (climate action plans (CAP)) இணைக்கின்றன. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (Ministry of Housing and Urban Affairs (MoHUA)) மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour and Employment (MoLE)) போன்ற பிற பங்குதாரர்களுடன் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) பணியாற்ற வேண்டும்.
இரண்டாவதாக, முறைசாரா நகர்ப்புறத் தொழிலாளர்கள் இன்னும் பரவலாக சேர்க்கப்பட வேண்டும், மேலும் மாநிலங்கள் தங்கள் சொந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் மாற்றியமைக்கவும் புதுமைப்படுத்தவும் அனுமதிக்க தேசிய வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
மூன்றாவதாக, நாம் இன்னும் இரண்டு விஷயங்களைப் பார்க்க வேண்டும்: உட்புற மற்றும் வெளிப்புற வேலைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் மற்றும் தீவிர வெப்பம் மக்களை எவ்வாறு பாதிக்கிறது. இது சிறந்த வழிகாட்டுதல்களையும் செயல்களையும் உருவாக்க உதவும், ஏனெனில் உட்புற வேலையாட்களும் அதிக வெப்பத்தை அனுபவிப்பார்கள்.
நான்காவதாக, செயல்திட்டங்களைத் தயாரிப்பதில் தொழிலாளர் சமூகங்கள் மற்றும் குரல்களைச் சேர்க்க வேண்டிய தெளிவானத் தேவை உள்ளது. தொழிலாளர் நலவாரியங்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கான நகர விற்பனைக் குழுக்கள் (Town Vending Committees (TVC)) போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் நகரங்களில் வெப்ப அலை செயல் திட்டங்களை (HAP) உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.
ஐந்தாவதாக, ஆண்களை விட பெண் தொழிலாளர்களை வெப்பம் அதிகம் பாதிக்கிறது, எனவே அதை சமாளிக்கும் திட்டங்கள் இதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
ஆறாவதாக, வெப்ப அலைகள் வருமானம், ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரம் போன்ற இழப்புகளை விளைவிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த இழப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்க நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
ஏழாவதாக, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் குறியீடுகளில் வரவிருக்கும் மாற்றங்களைக் கருத்தில் கொள்ளும்போது, முறைசாராத் தொழிலாளர்களுடன் அவற்றை மறுபரிசீலனை செய்வது முக்கியம் மற்றும் காலநிலை மாற்றம் எவ்வாறு வேலையைப் பாதிக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இறுதியாக, நமது நகரங்களும் சமூகமும் எப்போதும் தொழிலாளர்களையும் அவர்களின் பணிகளையும், குறிப்பாக முறைசாரா பொருளாதாரத்தில் உள்ளவர்களை மறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை தாக்கங்களைத் தணிக்கவும் நகரங்களில் தொழிலாளர்களின் உரிமைகளை மேம்படுத்தவும் தண்ணீர், நிழல் மற்றும் ஓய்வுக்கான இடங்களை நாம் உறுதி செய்ய வேண்டும்.