பணவீக்கம் (Inflation) என்பது பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தின் முக்கியமான அளவீடாகும். காலப்போக்கில், இது பொதுவான விலை நிலைமட்டம் மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவில், நுகர்வோர் விலைக் குறியீடானது (Consumer Price Index (CPI)) விலைப் பணவீக்கத்தை (price inflation) அளவிடுகிறது. இது பெரும்பாலும் Laspeyre-ன் விலைக் குறியீட்டை (Laspeyre's price index) அடிப்படையாகக் கொண்டது. நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) தொகுப்பில் 299 பொருட்களைக் கொண்டுள்ளன. இதில், பொதுவாக மொத்த தொகுப்பில் உள்ள காய்கறிகள் 6.04% ஆகும்.
தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு (tomato, onion, and potato (TOP)) ஆகியவை சராசரி இந்திய குடும்பத்திற்கான ஒட்டுமொத்த நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) தொகுப்பில் 2.2% எடையைக் கொண்டுள்ளன. இந்த மூன்று காய்கறிகளும், உணவு மற்றும் பானங்களின் விலையில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) புள்ளிவிவரங்கள் இரண்டையும் கணிசமாகப் பாதிக்கின்றன. இதில், நகர்ப்புறங்களில், மக்களின் மொத்த நுகர்வுத் தொகுப்பில் தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு (tomato, onion, and potato (TOP)) தொகுப்பு 3.6% ஆகவும், அதே நேரத்தில் கிராமப்புற இந்தியாவில், இது 5% வருமானக் குழுக்களின் கீழ்மட்டத்தில் உள்ளது. மேலும், நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) தொகுப்பில் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது என்பதிலிருந்து இந்தத் தரவு வெளிப்படுகிறது.
2023-24 நிதியாண்டில், இந்தியாவில் காய்கறிகளின் விலை முந்தைய ஆண்டைவிட தோராயமாக 15% அதிகரித்துள்ளது. இந்த விலைகள் நிறைய மாறி, ஜூன் மாதத்தில் 0.7% குறைந்து, ஜூலையில் 37.4% கடுமையாக அதிகரித்தன. நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) தொகுப்பில் காய்கறிகளின் எடை 6% மட்டுமே இருந்தாலும், பணவீக்கத்தில் அவற்றின் பங்களிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் 2024-ல் சுமார் 30% ஆக இருந்தது. மேலும், இது ஜூலை 2023-ல், தக்காளி விலை 202% உயர்ந்தது. இது, மொத்த பணவீக்கத்தில் 18.1% பங்களிப்பு ஆகும். நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) தொகுப்பில் தக்காளி 0.6% எடையை மட்டுமே கொண்டிருந்த போதிலும், ஜூலை மாதம், காய்கறிகள் பணவீக்கத்தில் 31.9% பங்களித்தன. தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு (tomato, onion, and potato (TOP)) 17.2% ஆக இருந்தது.
விலை ஏற்ற இறக்கம்
தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு (tomato, onion, and potato (TOP)) ஒரு குறிப்பிடத்தக்க பண்பைக் கொண்டுள்ளது. அதன் விலைகள் விளக்கப்படத்தில் காட்டப்பட்டுள்ளபடி நிறைய மாறுபடுகின்றன. இந்த மாறுபாட்டின் குணகம் (coefficient of variation (CoV)) பணவீக்கம் எவ்வளவு மாறுபடுகிறது என்பதை அளவிடுகிறது. மேலும், ஏற்ற இறக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு இது முக்கியமானது ஆகும். ஜனவரி 2015 முதல் மார்ச் 2024 வரை, தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் (TOP) பணவீக்க ஏற்ற இறக்கம் ஜனவரி 2015 முதல் மார்ச் 2024 வரை மாறுபாட்டுக் குணகம் (coefficient of variation (CoV)) எனப்படும் முறையைப் பயன்படுத்தி அளவிடப்பட்டது. இது பெறப்பட்ட மதிப்பு 5.2 ஆகும். இந்த மதிப்பு மற்றக் குழுக்களின் ஏற்ற இறக்கத்தைவிட அதிகமாக உள்ளது: அதாவது, காய்கறிகள் (CoV=3.0), உணவு (CoV=0.6), மற்றும் விலை பணவீக்கம் (CoV=0.3) ஆகும். இந்த உயர் ஏற்ற இறக்கம் சந்தை சக்திகள், வானிலை மாற்றங்கள் மற்றும் விநியோக சங்கிலி இடையூறுகளுக்கு இந்த பொருட்கள் எவ்வளவு உணர்திறன் கொண்டவை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய மூன்று குழுக்களுக்கான பணவீக்கம் எவ்வாறு மாறுகிறது என்பதை விளக்கப்படம் காட்டுகிறது. இந்த முத்தொகுப்பு காய்கறியின் பணவீக்கப் போக்கையும் இது காட்டுகிறது. தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான (TOP) பணவீக்க விகிதம் நிலையற்றதாக உள்ளது. இது செப்டம்பர் 2021-ல் 36.6%-ல் இருந்து 2019 டிசம்பரில் 132.0% ஆக இருந்தது. இந்த எண்கள், தேசியப் புள்ளியியல் அலுவலகத்திலிருந்து (National Statistics Office (NSO)) வெளியிடப்பட்டவை.
விவசாயிகளுக்கு ஆதரவு
பணவீக்கப் போக்குகளை வடிவமைப்பதில் தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் (TOP) நிலையற்ற தன்மை மற்றும் முக்கியத்துவம், பயனுள்ள கொள்கை தலையீடுகள் மற்றும் விவசாய விநியோகச் சங்கிலிகளைப் பற்றிய சிறந்த புரிதலின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த அழுகும் காய்கறிகள் பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்கின்றன மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) இல்லை. இவை, பெரும்பாலும் தனியார் வர்த்தகர்களிடம் விற்கப்படுகின்றன. இந்தக் காய்கறிகள் ஏற்ற இறக்கம் விவசாயிகளைப் பாதிக்கிறது. அவர்கள் வழக்கமாக பெரும்பாலும் இந்தக் காய்கறிகளை நிகர விலைக்கு வாங்குபவர்களாக உள்ளனர். இந்த ஏற்ற இறக்கத்தைக் குறைப்பதற்கான தீர்வுகளில் விவசாய மதிப்புச் சங்கிலிகளை மாற்றியமைத்தல் (overhauling of agricultural value chains), குளிர் சேமிப்பு வசதிகளை மேம்படுத்துதல் (cold storage facilities), விவசாயிகளுக்கு சிறந்த விலைகளை வழங்குதல் (better prices for farmers) மற்றும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கான அதிக உள்ளீட்டு செலவுகளைக் குறைத்தல் (reducing the exorbitantly high input prices of fertilizers and pesticides) ஆகியவை அடங்கும்.
அரசாங்க நடவடிக்கைகள்
மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன்னதாக வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி தடைகளை நீக்குவதில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள், விவசாயிகள் கோரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த பயிர்களின் விலை ஏற்ற இறக்கத்தை சமாளிக்க நாம் இன்னும் குறுகிய கால நடவடிக்கைகளைப் பயன்படுத்துகிறோம் என்பதைக் காட்டுகிறது. மார்ச் 2023-ல் நாசிக்கிலிருந்து மும்பை வரை நடந்த நீண்ட விவசாயப் பேரணி (memorable Kisan Long March) போன்ற விவசாயிகளின் போராட்டங்கள், வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மீண்டும் கோரி வருகின்றன. இந்தக் கோரிக்கையை அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.