ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கடந்த 11 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட முறை சந்தித்துள்ளனர். ஒருவரையொருவர் "பழைய நண்பர்" (“old friend”) என்று அழைத்துள்ளனர். இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பெய்ஜிங்கில் உச்சிமாநாடு (மே 16-17, 2024), முக்கியமான சந்திப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. புவியியல் மற்றும் பொருளாதாரத்தில் இருநாடுகளின் வலுவான செல்வாக்கு காரணமாக, “வரம்புகள் இல்லாத” (“no-limit”) அவர்களின் நெருங்கிய நட்பு, இரு நாடுகளுக்கு இடையில் மட்டுமல்ல. இருவருடனும் குறிப்பிடத்தக்க மற்றும் சீரான உறவைக் கொண்டிருக்கும் இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளையும் பாதிக்கிறது.
ரஷ்யா-சீனா உறவின் கட்டங்கள்
கடந்த 200 ஆண்டுகளாக, ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு ஐந்து கட்டங்களைக் கடந்துள்ளது. 1800-களில், ரஷ்யா பசிபிக் பெருங்கடலை நோக்கி விரிவடைய சீனாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டது. மேலும், சோவியத் யூனியன் அந்த நிலங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 1949-ல் சீன மக்கள் குடியரசு (People’s Republic of China (PRC)) உருவான பிறகு, முதல் பத்து வருடங்கள் நட்பு நீடித்தது. சில கருத்து வேறுபாடு காரணமாக நட்பு முறிந்தது. குறிப்பாக 1962-ல் சீனா இந்தியாவைத் தாக்கிய பிறகு, 1969-ல் ரஷ்யாவும் சீனாவும் உசுரி நதியின் எல்லையில் கருத்து வேறுபாடு காரணமாக ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
1972-ஆம் ஆண்டில், ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து சீனாவை தனது பக்கம் இழுக்க அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் பெய்ஜிங்கிற்கு பயணம் செய்தபோது ஒரு புதிய கூட்டணி உருவானது. சீனா பின்னர் மேற்கத்திய நாடுகளுடன் அதிகமாக நட்பு பாராட்டியது. நவீனமயமாக்கலுக்கான டெங் சியாபிங்கின் (Deng Xiaoping’s) திட்டத்தை ஆதரித்தது, இது சீனாவில் அதிக சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் என்று சீனா எண்ணியது. 1989-ல் தியனன்மென் சதுக்கத்தில் நடந்த போராட்டங்களுக்கு வன்முறையான பதில் அளித்த போதிலும், மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து சீனாவில் முதலீடு செய்தன, தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொண்டன மற்றும் அவற்றின் சந்தைகளுக்கு அணுகலை வழங்கின. மேலும் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு இராஜதந்திர ஆதரவை வழங்கின. இது சீனாவை ஒரு பெரிய உற்பத்தி மையமாக மாற்ற உதவியது. அதே நேரத்தில், சோவியத் யூனியன் பிரிந்ததால் மாஸ்கோவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகள் பலவீனமடைந்தன. ரஷ்யா, அதனைத் தொடர்ந்து பெரும்பாலான மத்திய ஆசிய நாடுகளின் கட்டுப்பாட்டை இழந்தது. இது சீனாவுடன் போட்டிக்கான போர்க்களமாக பின்நாட்களில் மாறியது.
2012-க்குப் பின், இது நன்றாக வளர்ந்து வருகிறது. "ஆசிய மையம்" (“pivot Asia”) தொடங்குவதற்கு அமெரிக்காவை சீனா எச்சரிக்கை செய்தது. சீனாவின் எழுச்சி மற்றும் பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க பல்வேறு கொள்கைகளை வெளியிட்டது. மேற்கு நாடுகளுடன் வளர்ந்து வரும் உறவு சீனாவை ரஷ்யாவை நோக்கி திரும்பச் செய்தது மற்றும் பெய்ஜிங் உச்சிமாநாட்டிற்குப் பிறகு இருவரும் தங்கள் உறவுகளுக்கு "வரம்புகள் இல்லை" (“No Limits”) என்று பிப்ரவரி 2022-ல் இருநாடுகளும் அறிவித்தனர். சில வாரங்களுக்குள், புடின் உக்ரைனுக்கு எதிராக ஒரு "வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையைத்" தொடங்கினார். ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மாஸ்கோ மீது பல தடைகளை மேற்கு நாடுகள் விதித்தன. இது மாஸ்கோவை சீனாவுடன் நெருக்கமாகத் தள்ளியது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், ரஷ்யாவும் சீனாவும் தங்கள் உறவுகளை வலுப்படுத்தியுள்ளன. குறிப்பாக மேற்கு நாடுகளுக்கு எதிராக அவர்களின் வர்த்தகம். 2022-ல் இருந்து 26% எட்டியது, 2023-ல் $240 பில்லியனை வளர்ச்சி அடைந்துள்ளது. இப்போது, ரஷ்யா தனது ஆற்றல் தயாரிப்புகளை வாங்குவதற்கும், பொருளாதாரத் தடைகளை ஈடுகட்டுவதற்கும், உக்ரைன் உடனான போருக்கு தேவையான பொருட்களை சீனா வழங்கிவருகிறது. 2023-ஆம் ஆண்டில், ரஷ்யா சீனாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் விற்பனையாளர் ஆகும். இது ஒரு நாளைக்கு சுமார் 2.1 மில்லியன் பீப்பாய்களை வழங்குகிறது. சார்புநிலையைக் குறைப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், 2023-ல் சீனா இன்னும் $575 பில்லியன் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்தது. இது ரஷ்யாவுடனான அதன் வர்த்தகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இதற்கு மாறாக, 2023-24-ல் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா $118 பில்லியன் வர்த்தகம் செய்தது. ரஷ்யாவுடனான அதன் வர்த்தகம் $66 பில்லியன் ஆகும்.
உச்சிமாநாட்டிற்குப் பிறகு வெளியிடப்பட்ட 7,000 வார்த்தைகள் கொண்ட கூட்டு அறிக்கை அவர்களின் பொருளாதார, நிதி அல்லது இராணுவ உறவுகளைப் பற்றி விவாதிக்கவில்லை. இந்த அமைதி இரண்டு காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்: ஒன்று மேற்கு நாடுகளை கோபப்படுத்துவதையும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்வதையும் தவிர்க்க அல்லது அவர்களின் கருத்து வேறுபாடுகளை மறைக்க மற்றும் ஏப்ரல் மாதம் பெய்ஜிங்கிற்கு பயணம் செய்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ஜே. பிளிங்கன், ரஷ்யாவிற்கு இராணுவ ரீதியாக உதவுவதற்கு எதிராக எச்சரித்ததாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. கூட்டறிக்கையில் இந்தியா அல்லது ஐக்கிய நாடுகளின் சீர்திருத்தங்கள் தொடர்பான குறிப்பிட்ட பிரச்சினைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. உக்ரைனில் நடந்து கொண்டு இருக்கும் தொடர்பாக ஐரோப்பாவைப் பற்றி சுருக்கமாகப் பேசப்பட்டது. இதற்கு மாறாக, அந்த அறிக்கை அமெரிக்காவை கடுமையாக விமர்சித்தது. ரஷ்யா மற்றும் சீனாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் கொள்கைகளை அமெரிக்கா பின்பற்றுகிறது என்று அறிக்கை குற்றம் சாட்டியது. அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் வியூகத்தை விமர்சிக்கிறது, பிராந்தியத்தில் அமைதியை அமெரிக்கா சீர்குலைப்பதாகக் அறிக்கை கூறுகிறது. ரஷ்யாவும் சீனாவும் இப்போது அமெரிக்காவை தீவிரமாக எதிர்ப்பதை இது சுட்டி காட்டுகிறது.
பெய்ஜிங் உச்சிமாநாட்டின் தாக்கம் குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். குறுகிய காலத்தில், இது ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்த ஆனால் வெளிப்படையாகக் கூறப்படாத ஒத்துழைப்பை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதும், பதிலுக்கு, சீனா ரஷ்ய வளங்கள், சைபீரியாவில் சுரங்க உரிமைகள் மற்றும் ஏவியோனிக்ஸ், அணுசக்தி மற்றும் விண்வெளி போன்ற பகுதிகளில் ரஷ்ய தொழில்நுட்பத்தை அணுகுவதற்கான சிறந்த ஒப்பந்தங்களைக் கேட்கலாம். மத்திய ஆசியா மீதான தனது கட்டுப்பாட்டிற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் சீனா விரும்பலாம்.
பெய்ஜிங் ரஷ்யாவைச் சார்ந்து இருக்கிறது. உக்ரைன் போரில் அமெரிக்காவை திசைதிருப்பவும் சுயநலத்துடன் ஆதரவளித்து, ஆசியாவில் சீனாவுக்கு கூடுதல் கட்டுப்பாட்டைக் விதிக்கிறது. நீண்ட காலத்திற்கு, உச்சிமாநாட்டின் விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம். ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகளில் இருந்து செல்வங்களை பெற சீனா விரும்பினாலும், அவர்களுக்கு இடையேயான மோதல்கள் இறுதியில் இதை சாத்தியமற்றதாக மாற்றலாம்.
மே 17 அன்று, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சீனாவிடம் "நீங்கள் இரண்டு பக்கமும் இருக்க முடியாது" என்று வெளிப்படையாக எச்சரித்தார். மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் தொடர்ந்தால், உலக அரங்கில் ரஷ்யாவுடன் சீனா மேலும் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கும். இது, உலக சக்திக்கான சீனாவின் நம்பிக்கையுடன் சேர்ந்து, ஒரு புதிய பனிப்போருக்கு வழிவகுக்கும். பெரும்பாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய அமைப்புக்கு சவால் விடும். சீனா ஏற்கனவே பிரிக்ஸ் (Brazil, Russia, India, China, South Africa (BRICS)), ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB)) மற்றும் 147 நாடுகள் மற்றும் ஒரு டிரில்லியன் டாலர் முதலீட்டை உள்ளடக்கிய பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (Belt and Road Initiative (BRI)) போன்ற சீனாவின் தலைமையில் ஒரு புதிய உலகளாவிய கட்டமைப்பின் ஆரம்பம் ஏற்கனவே அமைக்கப்பட்டு இன்னும் வளர்ந்து வருகிறது. இது ஒரு புதிய உலகளாவிய பிளவின் தொடக்கத்தைக் குறிக்கலாம்.
இந்தியாவில் தாக்கம்
பெய்ஜிங் உச்சிமாநாடு இந்தியாவில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். சவால்கள் மற்றும் வாய்ப்புகள் இரண்டையும் கொண்டு வரலாம். ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தற்போதைய உறவின் வலிமையை இந்தியா கவனமாக மதிப்பிட வேண்டும். வலிமையான தலைவர்கள் இருந்தபோதிலும், ரஷ்யாவின் பொருளாதாரம் சீனாவை விட மிகவும் சிறியது. உக்ரைன் போர்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் மூலம், ரஷ்யா முதல் முறையாக சீனாவிற்கு சமமான போட்டியாளராக வாய்ப்புள்ளது. இந்தச் சாத்தியமான ஏற்றத்தாழ்வு இந்தியாவைக் கவலையடையச் செய்யலாம். குறிப்பாக அது பாதுகாப்புப் பொருட்களுக்கு ரஷ்யாவை பெரிதும் நம்பியுள்ளது. குறிப்பாக எல்லையில் சீனாவுடனான பதட்டங்கள் காரணமாக ரஷ்யாவின் மிகப்பெரிய பாதுகாப்பு வாங்குபவராக, இந்தியா மாஸ்கோவிற்கு முக்கியமானது. ஆனால் சீன செல்வாக்கு ரஷ்யாவின் நம்பகத்தன்மையைப் பாதிக்கலாம்.
தற்போதைய உலகளாவிய அமைப்பு குறித்து இந்தியாவிற்கு பல்வேறு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பெய்ஜிங்கின் மாற்று சிறப்பாக இருக்குமா என்பது நிச்சயமற்றது. இந்தியா அதன் அளவு மற்றும் திறனுடன் பொருந்தக்கூடிய தற்போதைய அமைப்பில் ஒரு பெரிய பங்கிற்கானஅழுத்தம் கொடுப்பது நல்லது.
திரும்பிப் பார்க்கும்போது, கடந்த பனிப்போரின் போது, இந்தியா தனது சொந்த நலன்களை விட தார்மீக கொள்கைகளில் அதிக கவனம் செலுத்தியது. வளர்ச்சி மற்றும் உண்மையான அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, அணிசேரா மற்றும் மூன்றாம் உலக ஒற்றுமையில் அது ஒட்டிக்கொண்டது. இதிலிருந்து பல்வேறு பாடங்களை கற்றுக்கொள்வது முக்கியம். ஏனென்றால், கடந்த கால தவறுகளை மீண்டும் செய்வது தீங்கு விளைவிக்கும்.
வரவிருக்கும் உலகளாவிய பிளவு வேறுபட்டதாக இருக்கும், மேலும் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. முன்பைப் போல் இல்லாமல், இந்தியா இப்போது " ராஜதந்திர சுயாட்சியுடன்" (“strategic autonomy”) ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது. இந்தியா தனது பலத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும். தெளிவான நீண்ட கால இலக்குகளைக் கொண்டிருக்க வேண்டும். உறுதியுடன் இலக்குகளை நோக்கிச் செல்லவேண்டும்.