தொழில்நுட்ப தினத்தில் ஒரு நினைவுறுத்தல் : அறிவியல் எப்போதுமே மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகவே இருந்து வருகிறது -சேகர் மண்டே

 ஆர்வமுள்ள மாவட்ட திட்டங்கள் மூலம், போராடும் பகுதிகளில் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அறிவியலால் செயல்படுத்தப்பட்டுள்ளன. அறிவியலால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்தத் திட்டம் ஒரு  சிறந்த  எடுத்துக்காட்டு.


1939ஆம் ஆண்டில், ஜே டி பெர்னால் (J D Bernal) அறிவியல் சமூக செயல்பாடு (The Social Function of Science) என்ற புத்தகத்தை எழுதினார். விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தாமல், அது மக்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தனது புத்தகத்தில்  குறிப்பிட்டுள்ளார். வரலாறு முழுவதும், அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகை மாற்றி, நம் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளன. இன்று, பல தொழில்நுட்பங்கள் முன்பைவிட வேகமாக முன்னேறி, பல மாற்றங்களைக் கொண்டு  வந்துள்ளன. மொத்தத்தில், அறிவியல் என்பது புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது மட்டுமல்ல; உலகத்தை அனைவருக்கும் சிறந்த இடமாக மாற்ற அந்த அறிவைப் பயன்படுத்துவதும் ஆகும்.


18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் தொழில்நுட்ப புரட்சியின் பலன்களை காலனி நாடுகள் அனுபவிக்கவில்லை. ஆனால் இந்தியாவில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சுதந்திரத்திற்குப் பிறகு சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது. மே 11, 1998 அன்று, இந்தியா தனது தொழில்நுட்ப திறன்களை மூன்று குறிப்பிடத்தக்க வழிகளில் வெளிப்படுத்தியது. பொக்ரானில் (Pokhran) அணுகுண்டு சோதனை நடத்தினர். திரிசூல் ஏவுகணையை (Trishul missile) சோதனை செய்தனர். உள்நாட்டு விமானமான ஹன்சாவை (Hansa) வெற்றிகரமாக சோதனை செய்தனர். இந்த சாதனைகளை போற்றும் வகையில், அப்போதைய பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் (Shri Atal Bihari Vajpayee), மே 11ம் தேதியை தேசிய தொழில்நுட்ப தினமாக (National Technology Day) அறிவித்தார்.


தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. உதாரணமாக, சந்திரயான்-3 (Chandrayan-3) தரையிறக்கம் இந்தியாவின் மேம்பட்ட விண்வெளித் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தியது. எளிய அறிவியல் மற்றும் பொறியியலைப் பயன்படுத்தும் சூரிய திலகம் (Surya Tilak) நிகழ்வு கோடிகணக்கானவர்களைக் கவர்ந்தது. இருப்பினும், அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் படிப்படியாக நடந்துகொண்டு இருக்கிறது. 


மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை அங்கீகரித்து, இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் (National Institution for Transforming India (NITI-AAYOG)) இந்தியாவில் 108 பின்தங்கிய மாவட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. இந்த மாவட்டங்களை மேம்படுத்துவதை நிதி-ஆயோக் நோக்கமாக கொண்டுள்ளது . 2018ஆம் ஆண்டு முதல், நிதி ஆயோக்கின் ஆர்வமுள்ள மாவட்ட திட்டம் (Aspirational District program) கோடிக் கணக்கானவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.


ஒடிசாவில் உள்ள நவ்ராங்பூர் மாவட்டம். இத்திட்டம் தொடங்கும் போது மிகக் குறைந்த தரவரிசையில் இருந்த மாவட்டமாக  இருந்தது. பல ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் இந்த மாவட்டத்தை மேம்படுத்துவதற்கு ஒத்துழைத்துள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research (ICMR)), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research (CSIR)), மற்றும் உயிரி தொழில்நுட்ப துறை ( Department of Biotechnology (DBT)) ஆகிய  அமைப்புகளும்   முன்னேற்றத்திற்காக உதவியுள்ளன. அவர்கள் மாவட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தேவைகளை பயன்படுத்தினர். இதில் நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்குவித்தல் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு கல்வி கற்பித்தல் ஆகியவை அடங்கும். அத்தியாவசிய எண்ணெய்கள், நறுமணத் தாவரங்கள் மற்றும் கிழங்கு பயிர்கள் மூலம் பயிர் பல்வகைப்படுத்தலையும் ஊக்குவித்தனர். மற்ற முயற்சிகள் மழைநீர் சேகரிப்பு, உயிரி எரிபொருளைப் பயன்படுத்தி புகையற்ற சுழல்களை ஊக்குவித்தல் மற்றும் கழிவு விவசாய எச்சங்களிலிருந்து தயாரிக்கப்படும் உயிர்ப்பொருள் கட்டிகளை (biomass briquettes) நிறுவுதல். உணவுப் பதப்படுத்துதலில் உள்ளூர் தொழில்முனைவோரை வளர்ப்பதிலும் அவர்கள் கவனம் செலுத்தினர். இந்த நடவடிக்கைகள் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. அவை மாவட்ட மக்களின் வாழ்க்கையைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, ஆர்வமுள்ள மாவட்டங்களில் மாவட்டத்தின் தரவரிசை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.


அடிப்படை அறிவியல் மனித வாழ்க்கையில் உறுதியான மாற்றங்களுக்கு வழிவகுக்காது என்று ஒரு தவறான கருத்து உள்ளது. இந்த பார்வை தவறானது. 70 ஆண்டுகளுக்கு முன்பு, "சமூகத்தில் அறிவியலின் தாக்கம்" ("Impact of Science on Society") என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) ஆவணம் அறிவியலின் சமூக தாக்கங்கள் பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் அதன் பொருள் மற்றும் தொழில்நுட்ப நன்மைகளில் கவனம் செலுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்தக் கவனம் அறிவியலின் அறிவுசார் முன்னேற்றத்திற்கு தடையாக இல்லை. அடிப்படை ஆராய்ச்சி பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. ஆழ்ந்த விஞ்ஞான முயற்சிகள் சமூக முன்னேற்றத்திற்கு முக்கியமானவை என்று யுனெஸ்கோவின் ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.

 

கட்டுரையாளர் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின்  (Council of Scientific & Industrial Research (CSIR)) முன்னாள் தலைமை இயக்குநர் மற்றும் இந்திய அரசின் டி.எஸ்.ஐ.ஆர் செயலாளரும், சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தின் உயிர் தகவலியல் மையத்தின் புகழ்பெற்ற பேராசிரியரும் ஆவார்.




Original article:

Share: