இந்திய-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து முதலீட்டுப் படிப்பினைகள் -பிரபாஷ் ரஞ்சன்

 சர்வதேச வர்த்தகம் மற்றும் அந்நிய முதலீட்டு சட்டங்களை (foreign investment laws) கையாள்வதில் இந்தியாவுக்கு தெளிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்த கொள்கை (free trade agreement policy) தேவை.


ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டைன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய தனித்தியங்கும் வர்த்தக சங்கத்துடன் (European Free Trade Association (EFTA)) இந்தியா சமீபத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க  வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் வர்த்தகம் (India’s free trade agreement (FTA)) மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (Economic Partnership Agreement) என அழைக்கப்படுகிறது. இது இந்தியாவிற்கும் ஐரோப்பிய தனித்தியங்கும் வர்த்தக சங்க நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில காரணங்களுக்காக இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஒப்பந்தத்தில் சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் உரிமைகள் போன்ற தலைப்புகளைச் சேர்க்க இந்தியா ஒப்புக்கொண்டது. கடந்தகால, வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தத் தலைப்புகளை சேர்க்க இந்திய தயங்கியது என்று  பொருளாதார நிபுணர் பிஸ்வஜித் தார் (Biswajit Dhar) தெரிவித்தார். எனினும், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை மக்களவை தேர்தல் காரணமாக  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா செய்துகொள்ளும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டுக்கு நன்மை பயக்குமா?


முதலீட்டில்


ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மொரீஷியஸ் போன்ற நாடுகளுடன் இந்தியா செய்துள்ள சமீபத்திய ஒப்பந்தங்களிலிருந்து இந்த FTA வேறுபட்டது. இந்தியா-EFTA, FTA முதலீடு பற்றிய விரிவான நோக்கத்தை கொண்டுள்ளது. முதலீடுகளைப் பாதுகாப்பதை விட அவற்றை எளிதாக்குவதைக் நோக்கமாக கொண்டுள்ளது. EFTA நாடுகளிடம் இருந்து இந்தியா பல்வேறு உறுதிமொழிகளை பெற்றுள்ளது.

 

இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக EFTA நாடுகள் வாக்குறுதி அளித்துள்ளனர். சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட முதல் பத்து ஆண்டுகளுக்குள் $50 பில்லியன் அடைவது  இலக்காக வைத்துள்ளனர். இந்தியாவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் $50 பில்லியன் முதலீடு செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். கூடுதலாக, பிரிவு 7.1 (3) (பி) (Article 7.1(3)(b)) EFTA-நாடுகள் இந்தியாவில் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளனர்.

 

அந்நிய முதலீடுகளில் புதிய விதிகளைச் சேர்த்ததற்காக இந்திய பேச்சுவார்த்தையாளர்கள் பாராட்டுக்கு தகுதியானவர்கள்.  இந்த விதிகள் வர்த்தக ஒப்பந்தங்கள் அல்லது முதலீட்டு ஒப்பந்தங்களில் இல்லை. U.K., EU மற்றும் பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமையும்.


வர்த்தகம் மற்றும் முதலீடு


வர்த்தக முதலீடும், விநியோகச் சங்கிலியும்  நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை பொருளாதாரக் கோட்பாடு சுட்டி காட்டுகிறது. உற்பத்தி செயல்முறை  மற்றும் மதிப்புச் சங்கிலிகள் உலகம் முழுவதும் பரவியுள்ளது என்று இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. வர்த்தகம் மற்றும் முதலீடு ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்புடையவை.  இந்த காரணத்திற்காக, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய இரண்டிலும் விதிகளை உருவாக்கியுள்ளனர். 2000-களின் முற்பகுதியில், ஜப்பான், கொரியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அவை வர்த்தக விதிகளை அமைப்பது மட்டுமல்லாமல் முதலீடுகளைப் பாதுகாக்கும் நோக்கத்தினை கொண்டிருந்தது.

 

இருப்பினும், FTA 2.0 எனப்படும் புதிய FTA கொள்கையின்படி புதிய பாதையில் இந்தியா பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் பாதையின் கீழ், இந்தியா தனது ஒப்பந்தங்களில் உள்ள முதலீட்டு விதிகளிலிருந்து வர்த்தக விதிகளை பிரிக்க விரும்புகிறது. ஆஸ்திரேலியா, மொரிஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான அதன் சமீபத்திய FTAகளில் இந்த மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. இந்த ஒப்பந்தங்களில் வர்த்தகம் குறித்த விதிகள் உள்ளன. ஆனால், முதலீட்டில் இல்லை. வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஒரே நாட்டுடன் தனித் தனி ஒப்பந்தங்களாகக் கையாள இந்தியா விரும்புகிறது. இந்த அணுகுமுறை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான ஒப்பந்தத்தில் தெரிந்தது. 2022-ல் ஐக்கிய அரபு அமீரகத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. பின்னர், அதே ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் தனி முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வர்த்தகம் மற்றும் முதலீட்டை இரண்டு தனித்தனி ஒப்பந்தங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தும் இதே முறையை இந்தியா இங்கிலாந்துடனும்  பின்பற்றுகிறது.

 

இந்தியா EFTA, FTA ஆகிய இரண்டையும் முக்கியமானதாகப் பார்க்கிறது.  ஏனெனில், அதில் முதலீடுகள் பற்றிய பிரிவு இந்த இரண்டிலும் உள்ளது. 2000-களில் செய்ததைப் போலவே இந்தியா தனது FTAகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை எவ்வாறு கையாள்கிறது என்பதை இது மாற்றுகிறது என்று பொருளாகுமா? இந்தியா EFTA, FTA எதிர்கால FTA-க்களுக்கான போக்கை அமைக்குமா என்று விரைவில் தெரிந்து விடும்.

 

இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் நிலை என்ன?


FTA 3.0


சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் (Free Trade Agreements (FTAs)) இந்தியாவுக்குத் தெளிவானக் கொள்கை தேவை. சர்வதேச வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டுச் சட்டங்களை நிர்வகிப்பதற்கு இது முக்கியமானது. வர்த்தகம் மட்டுமின்றி, FTA-அதிக முதலீடு  பெறுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. FTA நாடுகளிடம் இருந்து அதிக முதலீட்டைப் பெற  இந்தியா தனது கொள்கையில் இரண்டு முக்கிய விதிகளைப் பின்பற்றவேண்டும்: 


முதலாவதாக, இந்தியா ஒரு பொருளாதார ஒப்பந்தத்தில் வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து ஒன்றாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். முதலீட்டிலிருந்து வர்த்தகத்தைப் பிரிப்பது நல்லதல்ல. இந்த விதிகளை இணைப்பது இந்தியாவுக்கு சிறந்த பேச்சுவார்த்தை ஆற்றலை வழங்குகிறது. இந்த வழியில், முதலீட்டு நன்மைகளுக்கு ஈடாக சிறந்த வர்த்தக சலுகைகளை இந்தியா FTA நாடுகளிடம் இருந்து கேட்கலாம்.

 

இரண்டாவதாக, இந்தியா தனது முதலீட்டுக் கொள்கைகளை விரிவுபடுத்த வேண்டும். முதலீடுகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல் அவற்றைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேசச் சட்டத்தின் கீழ் இந்தியா வலுவான விதிகளை உருவாக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நடைமுறைப்படுத்தக்கூடிய சட்டப் பாதுகாப்புகளை வழங்குவது அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு குறைந்துள்ளதால் இது மிகவும் முக்கியமானது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தெளிவான மற்றும் விரிவான FTA கொள்கை அவசியம்.


பிரபாஷ் ரஞ்சன்,  ஹம்போல்ட் ஃபெலோ, மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட், ஹைடெல்பெர்க் மற்றும் பேராசிரியர், ஜிண்டால் குளோபல் லா ஸ்கூல்.




Original article:

Share: