உழவர்களுக்கு இணக்கமான ஒரு வேளாண் ஏற்றுமதிக் கொள்கை நமக்குத் தேவை -அசோக் குலாட்டி , ரித்திகா ஜுனேஜா

 தற்போதைய அரசாங்கக் கொள்கையில் நுகர்வோர் சார்பு உள்ளது - இது விவசாயிகளின் வருமானத்திற்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது.


இந்தியாவின் விவசாய ஏற்றுமதி 2004-05-ல் $8.7 பில்லியன் 2013-14-ல் $43.3 பில்லியன் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 500 சதவீதம் அதிகமாகும். ஆனால், அதன் பிறகு வளர்ச்சி குறைந்தது. 2023-24-ல் விவசாய ஏற்றுமதி $48.9 பில்லியன் டாலர்களை எட்டியது. இது 2022-23ல் $53.2 பில்லியன் இருந்து குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக  அரசாங்கம் நிர்ணயித்த $60 பில்லியன் இலக்கை விட குறைந்துள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (United Progressive Alliance (UPA)) அரசாங்கத்தின் (2004-05 முதல் 2013-14 வரை) ஆண்டு சராசரியாக இருந்த 20 சதவீதத்திலிருந்து 2014-15 முதல் 2023-24 வரை 1.9 சதவீதமாகக் குறைந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் கீழ் வளர்ச்சி விகிதம் முந்தைய அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது.


வர்த்தக உபரியின் அடிப்படையில், 2013-14ல் $27.7 பில்லியன் இருந்த உச்சத்தில் இருந்து 2023-24ல் $16 பில்லியன் சரிந்தது. UPA காலத்தில் இருந்த வளர்ச்சி தொடர்ந்திருந்தால், விவசாய ஏற்றுமதி இன்று $200 பில்லியன் எட்டியிருக்கும். விவசாயிகளின் வருமானத்தில் விவசாய ஏற்றுமதியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க புதிய விதிகளை  உருவாக்க வேண்டும். ஏற்றுமதியின் கட்டமைப்பைப் புரிந்துகொள்வது மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் அவற்றின் மெதுவான வளர்ச்சிக்கான காரணங்களை அடையாளம் காண வேண்டும்.


இந்தியாவில், அரிசி மிக முக்கியமான விவசாய ஏற்றுமதியாகும். இது $116.3 மில்லியன் டன்களிலிருந்து $110.4 பில்லியன் டாலர்களை ஈட்டுகிறது. இது 2023-24-ஆம் ஆண்டில் மொத்த விவசாய ஏற்றுமதியில் 21% ஆகும். அரிசியைத் தொடர்ந்து கடல்சார் பொருட்கள் $7.3 பில்லியன் (15% பங்கு), மசாலாப் பொருட்கள் $4.25 பில்லியன் (9% பங்கு), மாட்டிறைச்சி $3.7 பில்லியன் (8% பங்கு), மற்றும் சர்க்கரை $2.8 பில்லியன் (6% பங்கு) ஆகியவை பங்களிக்கின்றன.


விவசாய பொருட்களின் உலகளாவிய விலைகள் மற்றும் நாட்டின் ஏற்றுமதி கொள்கைகள் ஆகிய இரண்டு முக்கிய காரணிகள் இந்திய விவசாய ஏற்றுமதியை பாதிக்கின்றன. உலகளாவிய விலைகள் உயரும்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தைப் போல இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கிறது. ஆனால் உலகளாவிய விலைகள் வீழ்ச்சியடையும் போது, இந்தியாவின் போட்டித்திறன் குறைகிறது. மோடி அரசாங்கத்தின் முதல் ஐந்தாண்டுகளைப் போலவே ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கிறது.


ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் வெங்காயம் போன்ற முக்கிய பொருட்களின் மீதான தடைகளும் விவசாய ஏற்றுமதியை பெரிதும் பாதித்துள்ளன. இந்தியா அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்திய போது, உலகம் முழுவதும் அரிசியின் விலை சுமார் 25% உயர்ந்தது. பாசுமதி மற்றும் புழுங்கல் அரிசி போன்ற சில வகை அரிசிகளை ஏற்றுமதி செய்பவர்கள் அரிசியை அதிக விலைக்கு விற்றனர். அடுத்த ஆண்டு இந்தியா அரிசி ஏற்றுமதியை குறைத்தாலும், மொத்த மதிப்பு 6% மட்டுமே குறைந்துள்ளது. குறைவான ஏற்றுமதியில் கூட அவர்கள் நல்ல வருவாய்  ஈட்டியதை இது காட்டுகிறது.


  இந்தியா அதிகளவு அரிசியை ஏற்றுமதி செய்தால், அது உலக விலையை குறைக்கும். இதைத் தடுக்க, அவர்கள் ஏற்றுமதி வரியைப் பயன்படுத்தலாம். அதிகபட்ச லாபத்திற்காக இந்தியா சுமார் 15-16 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதற்கு மேல் ஏற்றுமதி செய்வதால் கூடுதல் பணம் கிடைக்காது.


65 சதவீதம் பாசன வசதி பெறும் நெற்பயிரில், குறிப்பாக பஞ்சாப்-ஹரியானா பகுதியில் நிலத்தடி நீர் குறைவது குறித்து கவலைகள் எழுந்துள்ளது. இலவச மின்சாரம் மற்றும் அதிக மானியத்தில் உரங்கள் வழங்குவது சுற்றுசுழலுக்கு அதிக   நெருக்கடியை ஏற்படுத்துகிறது. ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய, பாசனத்திற்கு 3,000 முதல் 5,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோவிற்கு சராசரியாக 4,000 லிட்டர்கள் என்று நாம் கருதினால், அதில் பாதி தண்ணீர் நிலத்தடி நீருக்குத் திரும்புகிறது. 16.3 மில்லியன் டன்  அரிசியை ஏற்றுமதி செய்வது என்பது 32.6 பில்லியன் கன மீட்டர் தண்ணீரை ஏற்றுமதி  செய்வது ஆகும்.  மின்சாரம் மற்றும் உரங்கள் மீதான மானியங்கள் சமமற்ற போட்டிக்கு வழிவகுகிறது.

 

ஏற்றுமதியில், போட்டித்தன்மை என்பது உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் குறைவான வளங்களைப் பயன்படுத்துவதாகும். இந்த இலட்சியங்களை அடைய, விவசாயத்தில் கணிசமான முதலீடுகள் தேவை. இதில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, விதைகள், நீர்ப்பாசனம் மற்றும் உரங்கள் ஆகியவற்றுக்கான செலவுகளும் அடங்கும். துல்லியமான விவசாயம் மற்றும் உரமிடுதல் போன்ற வளங்களைச் சார்ந்த விவசாய முறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும். முதலீடுகள் ஒரு யூனிட்டுக்கான செலவைக் குறைக்கும், உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தும், விவசாய ஏற்றுமதியை அதிகரிக்கும் மற்றும் விவசாயிகளின் லாபத்தை மேம்படுத்தும்.


இந்தியாவில் தற்போது வெங்காயத்தின் நிலை வேறு. மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு முன்பு வெங்காய ஏற்றுமதிக்கு அரசு அனுமதி அளித்தது. இருப்பினும், மிக உயர்ந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை (minimum export price (MEP)) மற்றும் 40 சதவீத ஏற்றுமதி வரியை நிர்ணயம் செய்தனர். இதன் மூலம் ஒரு கிலோவுக்கு ஏற்றுமதி விலை 65 ரூபாயாக உயர்ந்தது. இதற்கிடையில், லாசல்கானில் (Lasalgaon) வெங்காயத்தை கிலோ ரூ.13 முதல் ரூ.15 வரை மட்டுமே விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இந்த விலை அவர்களின் செலவுகளை ஈடுகட்டாது. இருந்தபோதிலும், அதிக MEP மற்றும் ஏற்றுமதி வரி ஆகியவை உள்ளூர் விலைகளை உயர்த்தக்கூடிய ஏற்றுமதி வாய்ப்புகளிலிருந்து பயனடைவதைத் தடுக்கின்றன. அரசின் கொள்கைகள் நுகர்வோருக்கு சாதகமாகவும், விவசாயிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும் உள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இந்த  கொள்கைகளை அரசு  மாற்ற வேண்டும்.


அசோக் குலாட்டி இன்ஃபோசிஸ் தலைவர் பேராசிரியராகவும், ஸ்வேதா சைனி ஜுனேஜா ICRIER இல் ஃபெலோவாகவும் உள்ளனர்.




Original article:


Share: