வரி குறைப்பு நடவடிக்கைகள் நடந்தாலும், நாட்டில் உள்ள வரிவிதிப்பு முறைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
இன்னும் சில வாரங்களில் 2024-25ஆம் ஆண்டுக்கான ஒன்றிய வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். புதிதாக பதவியேற்ற அரசாங்கத்தின் முதலாவது வரவு-செலவுத் திட்டமான இது, வீட்டு நுகர்வில் தொடர்ச்சியான சரிவு மற்றும் தனியார் துறை முதலீடுகள் குறைந்து இருக்கும் நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பொருளாதார மந்தநிலையை சமாளிக்க, குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான வரி விகிதங்களை மாற்றியமைப்பது குறித்து ஒன்றிய அரசு அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். இது வீட்டுச் செலவுகளை அதிகரிக்கும் மற்றும் நுகர்வோர் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கும். மேலும், பொருளாதாரத்தை உயர்த்தும் என்று அவர்கள் நம்புகிறார்கள். எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகளுடன் சேர்த்து, நாட்டில் உள்ள வரி முறைகளை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
தற்போதைய மூலதன ஆதாய வரி (capital gains tax) விதிகளை ஆராய்வது முக்கியமானது. தற்போது, பல்வேறு வகையான சொத்துக்களுக்கு வரி விகிதங்கள் மற்றும் வைத்திருக்கும் காலங்கள் வேறுபடுகின்றன. எனவே அவற்றை தரப்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். மற்றொரு முக்கியமான பிரச்சினை சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) விகிதங்களின் பகுத்தறிவு ஆகும். இது வருமானவரி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களைப் போல் இல்லாமல் மக்கள் தொகையில் பெரும் பகுதியை பாதிக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி ஆணையம் தனது 45-வது கூட்டத்தில், இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண அமைச்சர்கள் குழுவை அமைக்க முடிவு செய்தது. கூடுதலாக, பெட்ரோலியப் பொருட்களை சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் சேர்ப்பதில் சிக்கல் உள்ளது. ஆனால், இதற்கு மாநில அரசுகளின் ஆதரவு தேவை. ஒன்றிய அரசு மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கவலைகளைத் தீர்த்து, தேவையான மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும். ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அடுத்த சரக்கு மற்றும் சேவை வரி ஆணைய கூட்டம் ஜூன் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
பல ஆண்டுகளாக, அரசாங்கம் வரித் தளத்தை விரிவுபடுத்துவதற்கும், வரிச் சுமையை குறைப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. நேரடி வரிகளில், 2013-14 மதிப்பீட்டு ஆண்டில் 5.26 கோடியாக இருந்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை (தனிநபர்கள், நிறுவனங்கள் போன்றவை) 2022-23 மதிப்பீட்டு ஆண்டில் 9.37 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, இந்த நேரத்தில் தனிநபர் வரி செலுத்துவோர் 4.95 கோடியில் இருந்து 8.9 கோடியாக அதிகரித்துள்ளது. மறைமுக வரி (indirect tax) அடிப்படையில், ஜூன் 30, 2023 நிலவரப்படி 1.4 கோடி சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தி வருகின்றனர்.
ஜூன் 2018-ல், பதிவுகள் 1.12 கோடியாக இருந்தது. 2019-ஆம் ஆண்டில், அரசாங்கம் தனியார் வரி விகிதம் 22 சதவீதமாகக் குறைத்தது. மேலும் 2020-21 பட்ஜெட்டில், விலக்குகள் மற்றும் விலக்குகளில் இருந்து விலகும் தனிநபர்களுக்காக எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி முறையை அறிமுகப்படுத்தியது. மிக சமீபத்தில், 2024-25-ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர், "சிறிய, சரிபார்க்கப்படாத, சமரசம் செய்யப்படாத அல்லது சர்ச்சைக்குரிய நேரடி வரி கோரிக்கைகளை" குறிப்பிட்ட வரம்புகளுக்குள் ரத்து செய்ய முன்மொழிந்தார். இது ஒரு கோடி வரி செலுத்துவோருக்கு பயனாக இருக்கும். இந்த நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. புதிய அரசாங்கம் இந்த நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.