இரஷ்யாவும் சீனாவும் உறுப்பினர்களாக இருப்பதால், சர்வதேச விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளின் தலைமையிலான அமைப்புகளுக்கு மாற்றாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation (SCO)) பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு சமீபத்திய வருடங்களில் விரிவடைந்து வருகிறது. இந்தியாவிற்கு அதன் தகுதி என்ன?
கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் இறுதி நாளான வியாழக்கிழமை ஜூலை 4 அன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
முன்னதாக, புதன்கிழமையன்று தொடங்கிய இரண்டு நாள் உச்சிமாநாட்டின் தொடர்ச்சியாக, ஜெய்சங்கர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர்களான தஜிகிஸ்தான் மற்றும் ரஷ்யா மற்றும் புதிய உறுப்பினர் பெலாரஸ் ஆகிவற்றின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினார்.
"இன்று பெலாரஸின் வெளியுறவுத்துறை அமைச்சர் Maksim Ryzhenkov-ஐ சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு (SCO) பெலாரஸை அதன் புதிய உறுப்பினராக வரவேற்கிறோம். பொதுவாக இருதரப்பு உறவு மற்றும் அதன் எதிர்கால வளர்ச்சி சாத்தியம் பற்றி விவாதித்தோம்," என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் X வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பெலாரஸ் மற்றும் ஈரான் முன்பு இந்த குழுவில் பார்வையாளர் அந்தஸ்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஈரான் அதிகாரப்பூர்வமாக இந்த அமைப்பில் இணைந்தது. பெலாரஸ் வியாழக்கிழமை முறைப்படி இந்த அமைப்பில் அனுமதிக்கப்பட்டது.
ஷாங்காய் அமைப்பில் இந்தியாவுக்கான முக்கியத்துவம் என்ன?, அது எவ்வாறு உருவானது?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்றால் என்ன?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) 1996-ல் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்ட "ஷாங்காய் ஐந்தில்" (Shanghai Five) இருந்து உருவானது.
1991-ல், சோவியத் ஒன்றியம் 15 சுதந்திர நாடுகளாக கலைக்கப்பட்டது. இது தீவிரவாத மதக் குழுக்கள் (extremist religious groups) மற்றும் இனப் பதட்டங்கள் (ethnic tensions) குறித்து அப்பகுதியில் கவலைகளை எழுப்பியது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, பாதுகாப்பு விஷயங்களில் நாடுகளின் ஒத்துழைப்புக்காக ஒரு குழு உருவாக்கப்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) ஜூன் 15, 2001 அன்று ஷாங்காயில் ஒரு சர்வதேச அமைப்பாக நிறுவப்பட்டது. மேலும், உஸ்பெகிஸ்தான் நாடு இவ்வமைப்பில் ஆறாவது உறுப்பினராக சேர்த்தது. பெலாரஸ் இந்த அமைப்பில் சேருவதற்கு முன்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, ஈரான், கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய ஒன்பது உறுப்பினர்கள் இருந்தன. ஆப்கானிஸ்தான் மற்றும் மங்கோலியா பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
நாடுகளின் பாதுகாப்பு பிரச்சினைகளைக் கையாளும் சில சர்வதேச அமைப்புகளில் ஒன்றான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), முக்கியமாக ஆசிய உறுப்பினர்களை உள்ளடக்கியது. ரஷ்யாவும் சீனாவும் மேற்கத்திய சர்வதேச ஒழுங்கிற்கு ஒரு மாற்றீடாக தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்துகின்றன. பிரிக்ஸ் (BRICS) நாடுகளுடன் இணைந்து அமெரிக்க நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக நிலைப்பாடுகளை எடுத்துள்ளன.
ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே "வரம்பற்ற நட்புறவு" (limitless friendship) இருந்தபோதிலும், இதுபோன்ற அவைகளில் செல்வாக்கு செலுத்துவதில் சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே போட்டி நிலவுகிறது.
மத்திய ஆசிய குடியரசுகள் ரஷ்யாவின் செல்வாக்குப் பகுதியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றன. இருப்பினும், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறைந்த இந்த நாடுகளில், உள்கட்டமைப்பு திட்டங்களில் சீனா முதலீடு செய்துள்ளது. இதன் அடிப்படையில், வளர்ந்து வரும் பொருளாதார வலிமையை மேம்படுத்துகிறது. பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியும் (Belt and Road Initiative (BRI)) அத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தியாவும் பாகிஸ்தானும் 2017-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) இணைந்துள்ளன. இது நாடுகளின் செல்வாக்கிற்கான போட்டியின் ஒரு பகுதியாகக் காணப்பட்டது. இரஷ்யா, நீண்டகால கூட்டாண்மை காரணமாக இந்தியாவை ஆதரித்தது. அதே நேரத்தில் ரஷ்யாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்த சீனா பாகிஸ்தானை ஆதரித்துள்ளது.
இரஷ்யா மற்றும் சீனாவுடனான அமெரிக்காவின் உறவுகள் மோசமடைந்து வருவதன் பின்னணியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பிற்பகுதியில் பெரிய விரிவாக்கம் காணப்பட வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் தொடங்கிய 2022 ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் சீனாவுடனான வர்த்தக பதட்டங்கள் போன்ற நிகழ்வுகளால் மேலும் பல நாடுகளை தங்கள் அமைப்பில் சேர்க்க உத்வேகம் அளித்துள்ளன.
2023 ஆம் ஆண்டில், சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், ஈரான் அமைப்பில் இணைவது அதன் சர்வதேச அந்தஸ்தையும் செல்வாக்கையும் உயர்த்துவதாகக் கருதப்படுகிறது. ஈரானைப் பொறுத்தவரை, அமெரிக்க இராஜதந்திர சவால்களை முறியடிப்பதில் இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.
இருப்பினும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) பல உறுதியான முடிவுகளை எடுக்க முடியாது. பைனான்சியல் டைம்ஸில் வந்துள்ள கட்டுரை ஒன்று அதன் முன்முயற்சிகளின் தெளிவற்ற வழிகாட்டுதல்கள் நாடுகளிடையேயான போட்டிகளைத் தீர்க்காமல் அவற்றைக் கவனிக்க அனுமதிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறவுகளில் விரிசல் அடைந்திருந்தாலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது (SCO) இரு நாடுகளையும் உள்ளடக்கியது. இந்தியாவும் பல்வேறு பிரச்சினைகளில் சீனாவுடன் சில மோதல்களை எதிர்கொள்கிறது. ஆனால் இந்த சவால்கள் தீர்க்கப்படாமல் உள்ளன.
ஸ்டிம்சன் மையத்தின் (Stimson Center) சீன திட்டத்தின் (China Program) இயக்குனர் யுன் சன், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) குறியதாவது, "பல முயற்சிகளின் தெளிவற்ற வார்த்தைகள், நாடுகளுக்கு உதட்டளவில் சேவை செய்ய அனுமதித்தது" என்று கூறினார். நாடுகள் சீனாவின் கோரிக்கைகளை ஒரு கட்டத்திற்கு ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், அழுத்தம் கொடுக்கப்படும்போது தங்கள் சொந்த நலன்களைப் பின்பற்றுகின்றன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கும் (SCO) இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்?
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) 1991-ல் உருவாக்கப்பட்டதில் இருந்து இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்காத மத்திய ஆசிய நாடுகள் இந்தியாவுடன் ஒத்துழைக்க வாய்ப்பு வழங்குகிறது. பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து முக்கிய பிராந்திய தலைவர்களுடன் தொடர்பு கொள்ள இந்தியாவுக்கு இது உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (Regional Anti-Terrorist Structure (RATS)) பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகள், உளவுத்துறை பகுப்பாய்வு மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் பற்றிய தகவல்களைப் பகிர்தல் ஆகியவற்றில் உறுப்பினர்களுக்கு உதவுகிறது.
இருப்பினும், கூட்டணி நாடுகளின் உறவுகளை நிர்வகிப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொருத்தம் கேள்விக்குள்ளாகிறது. இந்தியா தற்போது சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் பதட்டமான உறவைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, சுழற்சியின் ஒரு பகுதியாக உச்சிமாநாட்டை நடத்த இந்தியாவின் முறை வந்தபோது, அதற்கு பதிலாக ஒரு மெய்நிகர் உச்சிமாநாட்டைத் (virtual summit) தேர்ந்தெடுத்தது.
புது தில்லி பிரகடனத்தில் (New Delhi Declaration) பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை (Belt and Road Initiative (BRI)) ஆதரிக்கும் நிபந்தனையில் இந்தியா கையெழுத்திடவில்லை. ஏனென்றால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்ல திட்டமிடப்பட்டுள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (China-Pakistan Economic Corridor (CPEC)) காரணமாக இந்தியா பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை எதிர்க்கிறது. அத்திட்டமானது, இந்தியாவின் இறையாண்மையை மீறுவதாகக் கருதப்படுகிறது.