இந்தியாவுக்கான ஓர் ஐந்தாண்டு காலநிலை செயல்திட்டத்தின் வடிவம் -வைபவ் சதுர்வேதி

 புதிய அரசாங்கம் இந்தியாவின் உலகளாவிய காலநிலை தலைமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும், இது 'உயரமான, பரந்த மற்றும் ஆழமான' இலட்சியத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு செயல் திட்டத்துடன் இருக்க வேண்டும்.  

புதிய அரசாங்கம் ஆட்சியமைக்கும் போது, ​​காலநிலை நடவடிக்கையை அளவிடுவதற்கான அதன் நடவடிக்கைகள் ஒவ்வொரு அமைச்சகத்தையும் பாதிக்கும். இது பெரிய மற்றும் சிறிய அனைத்து துறைகளையும் பாதிக்கும். அரசாங்கம் எடுக்கும் சில முடிவுகள் முக்கியமானதாக இருக்கும். இந்தத் முடிவுகள், இந்தியா தனது பொருளாதாரப் பாதையை எவ்வாறு நிலையான முறையில் கட்டமைக்கிறது என்பதைத் தீர்மானிக்கும். முக்கியமான விவாதங்களில் உலகளாவிய தெற்கின் குரலாக இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்கும். கூடுதலாக, இந்தத் முடிவுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் காலநிலை நிதி மற்றும் நீதிக்கான இந்தியாவின் போராட்டத்தை வடிவமைக்கும். அரசாங்கம் மாறுதல் இலக்குகளையும் நிர்ணயிக்க வேண்டும்.


இந்தியாவின் மாற்றம் 

    கடந்த பத்து ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆரம்பத்தில் தயக்கத்துடன் பங்கேற்ற இந்தியா, இப்போது உலகளாவிய காலநிலை விவாதங்களில் தைரியமாக வழிநடத்துகிறது. சர்வதேச சூரிய கூட்டணி (International Solar Alliance), பேரழிவு நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணி (Coalition for Disaster Resilient Infrastructure) மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி போன்ற முக்கிய உலகளாவிய நிறுவனங்களை இந்தியா நிறுவியுள்ளது. கடந்த ஆண்டு ஜி -20 தலைமையின் போது பசுமை மேம்பாட்டு ஒப்பந்தத்தை வடிவமைப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது.

    முதன்முறையாக, 2070 நிகர பூஜ்ஜிய இலக்கு (net-zero target) மற்றும் வலுவான தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Contributions (NDC)) உள்ளிட்ட இலட்சிய உமிழ்வு குறைப்பு இலக்குகளை இந்தியா நிர்ணயித்துள்ளது. இந்த மாற்றம் உமிழ்வு-தீவிரம் அடிப்படையிலான இலக்குகளை (emissions-intensity-based targets) விட முழுமையான உமிழ்வு குறைப்புகளை (net-zero goal) வலியுறுத்துகிறது, இது கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தனியார் துறை சம்பந்தப்பட்ட உள்நாட்டு காலநிலை விவாதங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. 

    மேலும், நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. உதாரணமாக, இந்தியா பல ஆண்டுகளாக  செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கார்பன் வர்த்தக திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னோக்கிப் பார்க்கும்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா தனது முயற்சிகளை விரைவுபடுத்துவதையும், பொருளாதார வளர்ச்சி நிலைத்தன்மையுடன் இணைந்து இருக்க முடியும் என்பதை நிரூபிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியுடன் அதன் காலநிலை தலைமையை விரிவுபடுத்துவதும் ஆழப்படுத்துவதும் இந்த இராஜதந்திரத்தில் அடங்கும். 

இந்தியாவுக்கான திட்டம்

    

    இந்தியா உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரைவில் முக்கிய காலநிலை உச்சிமாநாடுகளை இந்தியா நடத்தக்கூடும். 2028 ஆம் ஆண்டில் ஐ.நா கட்சிகளின் மாநாட்டை (United Nations Conference of Parties) நடத்துவது அதன் ஜி -20 தலைமையைப் போலவே தாக்கத்தை ஏற்படுத்தும். நான்கு ஆண்டுகளுக்குள் உலகளாவிய பேச்சுவார்த்தைகளுடன், 2030க்குள் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு முதலீடுகளை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் வளரும் நாடுகளுக்கான தழுவல் நிதியை (adaptation finance) அதிகரிப்பது போன்ற முக்கிய பிரச்சினைகளில் இந்தியா முடிவு செய்ய வேண்டும். ஒருமித்த கருத்தை உருவாக்க நேரம் எடுக்கும்,. எனவே, இந்தியா தனது முன்னுரிமைகளை மேம்படுத்துவதற்கும், கூட்டணிகளை உருவாக்குவதற்கும், உலகளாவிய காலநிலை நிதியில் சமத்துவத்தை வழிநடத்துவதற்கும் இப்போதே  முயற்சிகளை தொடங்க வேண்டும். 


 பல துறைகளுக்கான உமிழ்வு குறைப்பு இலக்குகளை இந்தியா ஏற்றுக்கொண்டு வலுவாக செயல்படுத்த வேண்டும். இந்த இலக்குகள் மின் துறைக்கு அப்பால் செல்ல வேண்டும். மின்சாரத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. சர்வதேச புதைபடிவமற்ற பங்கு தொடர்பான இலக்குகளை அடைய இது தொடர்ந்து முன்னேறும். உள்நாட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் இலக்குகளை இந்தியா தொடர்ந்து சந்திக்கும். 

 

அடுத்த கட்டமாக மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, நாம் தனியார் போக்குவரத்தில் கவனம் செலுத்தலாம் மற்றும் பூஜ்ஜிய கார்பன் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இலக்காகக் கொள்ளலாம்.  இது தூய்மையான ஆற்றல் மற்றும் நிலைத்தன்மையில் வேலைகளை துரிதப்படுத்தும் மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். கடந்த ஆண்டுகளின் நம்பகமான கொள்கை இலக்குகளை சக்திவாய்ந்த குறியீடுகள் காட்டுகின்றன.  இந்த குறியீடுகள் சம்பந்தப்பட்ட தொழில்கள் மற்றும் பங்குதாரர்களை செயல்பட கட்டாயப்படுத்தியுள்ளன. 2035க்கான தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் அடுத்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்தியாவின் ஆற்றல் மாற்ற இலக்குகளை விரிவுபடுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும்.   


மாநில அளவிலான திட்டங்கள் முக்கியம்


அரசாங்கத்தின் இந்த பதவிக்காலத்தில் மாநில அளவிலான காலநிலை நடவடிக்கை மற்றும் பின்னடைவு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.  எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (Council on Energy, Environment and Water (CEEW)) அனைத்து மாநிலங்களுடன் இணைந்து நீண்ட கால காலநிலை மற்றும் எரிசக்தி மேம்பாடு மூலம் நிகர பூஜ்ஜிய திட்டங்களை ஆதரிக்கிறது. எடுத்துக்காட்டாக, நிகர பூஜ்ஜிய எதிர்காலத்திற்கான திட்டங்களில் எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (Council on Energy, Environment and Water (CEEW)) தமிழ்நாடு மற்றும் பீகாருடன் இணைந்து செயல்பட்டது. மத்திய-மாநில ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இந்தக் குழு பதினாறாவது நிதிக்குழுவின் மூலம் மாநில அளவிலான பருவநிலை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். கொள்கை வகுப்பதில் அறிவியல் மேம்பாட்டு திறன்களின் ஒருங்கிணைப்பையும் இது ஊக்குவிக்க வேண்டும். கூடுதலாக, மாநில அளவில் ஒருங்கிணைந்த தரவு அளவீடு, அறிக்கை மற்றும் சரிபார்ப்பு (measurement, reporting and verification (MRV)) முறையை அரசாங்கம் எளிதாக்க வேண்டும்.


புதிய அரசாங்கம் அதன் ஆட்சி காலத்தில் இந்தியாவின் உலகளாவிய காலநிலை தலைமைத்துவத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த இலக்கு  இந்த ஆண்டுக்கு மட்டும் அல்ல, அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். தற்போது, ​​பெரும்பாலான சர்வதேச கூட்டமைப்புகளில் இந்தியா இடம் பிடித்துள்ளது. இப்போது அது தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும்.  


வைபவ் சதுர்வேதி எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலில் மூத்த உறுப்பினர் ஆவார். 


Share: