எதிர்கால நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் காலவரிசைப்படுத்துதல் -சந்தீப் புகான்

நாடாளுமன்றத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில மாற்றங்கள் வெளிப்படையானவை. மற்ற மாற்றங்கள் கண்ணுக்கு தெரியாதவை.

18வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பிற்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (Central Industrial Security Force (CISF)) பொறுப்பேற்ற பின்னதான முதல் அமர்வு இதுவாகும். பொதுவாக விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கிய நிறுவல்களுக்குப் பொறுப்பான மத்திய தொழில் பாதுகாப்புப் படை, நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியாளர்களுக்கு மாற்றாக நியமிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2023 இல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறலுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டது. 


பாதுகாப்பு வளையம் மட்டும் காணக்கூடிய வித்தியாசம் அல்ல. புதிய மக்களவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்திய கூட்டணி உறுப்பினர்களால் சமமாக உள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் (52%) உறுப்பினர்கள் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பத்தாண்டுகளுக்குப் பிறகு மக்களவையில் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறார். அந்த பதவியை வகிக்கும் ராகுல் காந்தி ஆளும் கட்சியுடன் தீவிர விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.  அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை வழிநடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவர் கேட்டு கொண்டுள்ளார். மணிப்பூர் நிலவரங்கள், நீட் தேர்வுத் தாள் கசிவு போன்ற பிரச்னைகளுக்காக இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முந்தைய இரண்டு மக்களவைய விட தற்போது எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்னிக்கை அதிகமாக உள்ளது.


குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதிலின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டது முன்னெப்போதும் இல்லாதது என்று பல ஆளும் கூட்டணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால், இதற்கு முன்பும் இதுபோன்ற போராட்டங்கள் நடந்துள்ளன. பாரதிய ஜனதா கட்சியும் எதிர்க்கட்சியாக இருந்தபோது கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உதாரணமாக, 2004 ஆம் ஆண்டில், பிரதமர் மன்மோகன் சிங் பாஜக தலைமையிலான எதிர்க்கட்சிகளிடமிருந்து "கறைபடிந்த அமைச்சர்கள்" என்று தொடர்ச்சியான எதிர்ப்புகளை எதிர்கொண்டார். குறிப்பாக ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீகார் மாட்டுத்தீவன ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டார் என்று ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.


மிகப்பெரிய மாற்றம் புதிய பாராளுமன்ற கட்டிடம் ஆகும். கடந்த செப்டம்பரில் இருந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் பழைய வட்ட வடிவ கட்டிடத்திலிருந்து புதிய முக்கோண வடிவ கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. பழைய கட்டிடம் இப்போது சம்விதான் சதன் (Samvidhan Sadan) என்று அழைக்கப்படுகிறது. பாராளுமன்ற நடவடிக்கைகளை செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் புதிய தளவமைப்பை சவாலாகக் காண்கிறார்கள். குறிப்பாக, பத்திரிகையாளர் மாடத்திற்க்கு செல்லும் பாதையைக் கண்டுபிடிப்பது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் பிரதான நுழைவாயிலுக்கு எதிரே இருந்த மகாத்மா காந்தியின் சிலை, இப்போது புதிதாக வடிவமைக்கப்பட்ட பிரேர்னா தளத்தில் நிறுவப்பட்டுள்ளது பி.ஆர்.அம்பேத்கர் சிலையும் மாற்றப்பட்டுள்ளது. காந்தி சிலை இருந்த இடம் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு பொதுவான இடமாக இருந்தது.


மற்றொரு நீண்ட கால பாரம்பரியம் மறைந்து வருகிறது. நாடாளுமன்ற விவகார அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் முறைசாரா விளக்கங்களை நடத்துவது வழக்கம். இந்த விளக்கங்கள் அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியே எதிர்கட்சியுடனான   பேச்சுவார்த்தைகள் பற்றி விவாதித்தன. இந்த பதிவுக்கு அப்பாற்பட்ட விளக்கங்கள் முட்டுக்கட்டைக்கு வழிவகுக்கும் பிரச்சினைகளில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தின.  

 

இறுதியாக, கோவிட்-19 லிருந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு மாறிவிட்டது. பல தொற்றுநோய் கால கட்டுப்பாடுகள் இன்னும் உள்ளன. உதாரணமாக, பாராளுமன்ற அமர்வுகளின் போது ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் பாராளுமன்றத்திற்கு இலவசமாக நுழைவதற்கான வருடாந்திர அனுமதிச்சீட்டுகளை வைத்திருந்தனர். இந்த வருடாந்திர பாஸ்கள் முந்தைய அமர்வுகளின் போது செயலிழந்துவிட்டன. இப்போது, ​​வருடாந்திர பாஸ்களைக் கொண்ட பத்திரிகையாளர்களுக்கு கூட சிறப்பு அமர்வு அனுமதிகள் தேவை. செய்தியாளர்கள் அவசியம் என்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியும் புரிந்து கொள்ள வேண்டும்.  பத்திரிக்கை நிருபர்கள் நாட்டின் முதல் வரலாற்றாசிரியர்கள் ஆவார்கள். 

OROGINAL LINK:
Share: