வீட்டுச் செலவுகள், வேலைகள் மற்றும் வரிகள் பற்றிய தரவு பொருளாதாரத்தின் பல்வேறு பகுதிகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்தத் தரவு இல்லாமல், கொள்கை வகுப்பது மிகவும் சவாலானது.
ஜூலை 1-ஆம் தேதி, சரக்கு மற்றும் சேவை வரி (goods and service tax (GST)) அமல்படுத்தப்பட்டு ஏழு ஆண்டு நிறைவு விழாவை நிதி அமைச்சகம் கொண்டாடியது. அதே நேரத்தில், முந்தைய நடைமுறைகளில் இருந்து மாற்றமாக, விரிவான சரக்கு மற்றும் சேவை வரி தரவுகளை வெளியிடுவதை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த மாதாந்திர தரவுகளில் மொத்த வரி வசூல், இழப்பீடு கூடுதல் வரி மூலம் வருவாய் மற்றும் பல்வேறு முக்கிய நோக்கங்களுக்காக மாநில வாரியான வரி புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
பல பொருளாதார குறிகாட்டிகளுக்கான தரவுகள் பெரும்பாலும் தாமதமாக வெளிவருவதால், சரக்கு மற்றும் சேவை வரி தரவு பொருளாதாரத்தின் நிலையை சரியான நேரத்தில் அளவிடும். எடுத்துக்காட்டாக, முதல் காலாண்டிற்கான (ஏப்ரல்-ஜூன்) மொத்த உள் நாட்டு உற்பத்தி தரவு இரண்டு மாத தாமதத்துடன் ஆகஸ்ட் இறுதியில் வெளியிடப்படுகிறது. இதேபோல், ஏப்ரல் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி தரவு ஜூன் 12 அன்று வெளியிடப்பட்டது. ஒன்றிய மற்றும் மாநில வசூல் அரசுகள் உட்பட அரசாங்கம் திட்டமிட்டபடி வருவாய் இலக்குகளை எட்டுகிறதா என்பதை சரக்கு மற்றும் சேவை வரி தரவு காட்டுகிறது.
அதிகாரப்பூர்வ தரவு வெளியீடுகள் பற்றிய சர்ச்சை புதிதல்ல. எடுத்துக்காட்டாக, 2017-18-ஆண்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பை "தர சிக்கல்கள்" (quality issues) காரணமாக அரசாங்கம் சரக்கு மற்றும் சேவை வரி தரவை வெளியிடவில்லை. 2017-18-ஆண்டு வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை கணக்கெடுப்பு குறித்து விவாதம் நடைபெற்றது. காலப்போக்கில், தரவுகளில் உள்ள இடைவெளிகளைப் பற்றிய கவலைகளை அரசாங்கம் நிவர்த்தி செய்து புள்ளியியல் அமைப்பை வலுப்படுத்தியுள்ளது. வழக்கமான வேலைவாய்ப்பு ஆய்வுகள் இப்போது நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்திய வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்புக்கான தரவு பொதுத் தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்டது. சமீபத்தில், 2021-22 மற்றும் 2022-23க்கான ஒருங்கிணைந்த துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பின் முடிவுகளை அரசாங்கம் வெளியிட்டது. இந்த ஆண்டுகளில் முறைசாரா துறை எவ்வாறு செயல்பட்டது என்பதைக் இந்த தரவு காட்டுகிறது.
விரிவான சரக்கு மற்றும் சேவை வரி தரவுகளை தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கூடுதலாக, நீண்டகாலமாக தாமதமாகி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும். தொற்றுநோய் காரணமாக கணக்கெடுப்பு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தாமதங்களை நியாயப்படுத்துவது கடினம். இந்த நேரத்தில் பல அதிகாரப்பூர்வ ஆய்வுகள் நடத்தப்பட்டு பல தரவு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்வதற்கு வீட்டுச் செலவுகள், வேலைவாய்ப்பு மற்றும் வரிகள் பற்றிய தரவு அவசியம். இத்தகைய தரவுகள் இல்லாமல், கொள்கைகளை வகுப்பது மிகவும் கடினம்.