தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுச் சேவைகளை மேம்படுத்த மற்றும் தொழில் நுட்பம் பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியைக் குறைக்க இந்தியர்கள் அனைவரும் அடிப்படை டிஜிட்டல் திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
வங்கி, சுகாதாரம் மற்றும் அரசு சேவைகள் போன்ற பல அத்தியாவசிய சேவைகள் இப்போது டிஜிட்டல் மயமாகிவிட்டதால் கணினி கல்வியறிவு இன்றய உலகில் முக்கியமானதாக மாறிவிட்டது. கணினி கல்வியறிவு என்பது கணினி மற்றும் தொழில்நுட்பத்தை திறமையாகப் பயன்படுத்தும் அறிவு மற்றும் திறனைக் குறிக்கிறது. இந்த அறிவு, மக்கள் இந்த சேவைகளை நன்கு அணுகி பயன்படுத்துவதை உறுதிசெய்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
வங்கி மற்றும் சுகாதாரம் போன்ற பணிகளுக்கு கணினி மற்றும் இணைய பயன்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா-19 தொற்றுநோய் காட்டியது. இதை அங்கீகரித்த இந்திய அரசு 2015-ஆம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்தை தொடங்கி நாட்டை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கியது.
கணினி கல்வி இப்போது முறையான கல்வியின் ஒரு பகுதியாக உள்ளது, ஆரம்ப பள்ளி ஆண்டுகளில் இருந்து கணினி கல்வி முறை தொடங்குகிறது. மேலும், பல திறன் மேம்பாட்டு திட்டங்கள், இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள், குறிப்பாக பின்தங்கிய சமூகங்களில், டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க கணினி கல்வியறிவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன.
2020-21-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பலதரப்பட்ட குறியீடு (Multiple Indicator Survey) கணக்கெடுப்பின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு 78-வது சுற்று மக்கள் கணினிகளை எவ்வளவு நன்றாகப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய விவரங்களைத் தரும் குடும்பங்களின் கணக்கெடுப்பாகும். 15-வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 24.7% பேர் கணினி கல்வியறிவு பெற்றவர்கள் என்பதைக் காட்டுகிறது.
ஒட்டுமொத்த கணினி கல்வியறிவு விகிதம் 2017-18-ல் 18.4%-ஆக இருந்து 2020-21-ல் 24.7% ஆக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் இது 11.1%லிருந்து 18.1% ஆகவும், நகர்ப்புறங்களில் 34.7%லிருந்து 39.6% ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு நாட்டின் டிஜிட்டல் சேவைகளைப் பற்றி சந்தேகங்களை எழுப்புகின்றன. அனைவருக்கும் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான தீவிர முயற்சிகள் இல்லாமல், கிராமப்புற இந்தியாவின் கிட்டத்தட்ட 70% மக்கள் குறிப்பிடத்தக்க குறைபாடுகளை சந்திக்க நேரிடும். கூடுதலாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் பொது சேவைகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால், டிஜிட்டல் பயன்பாட்டை பற்றி தெரியாத மக்கள் சேவைகளை பெறுவதில் சிரமங்களை சந்திக்கலாம்.
20-39 வயதுடைய தனிநபர்களுக்கு, பொதுவாக தங்கள் தொழில் அல்லது வேலை தேடலில், கணினி கல்வியறிவு விகிதம் 34.8% ஆகும். இந்த விகிதம் மாநிலங்களில் கணிசமாக வேறுபடுகிறது. உதாரணமாக, கேரளாவில், இந்த வயதுக்குட்பட்டவர்களில் 72.7% பேர் கணினி கல்வியறிவு பெற்றவர்கள், அசாமில் இது 17.6% மட்டுமே. அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் போன்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலங்கள் கணினி செயல்பாட்டில் 30% க்கும் குறைவான தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இந்த ஏற்றத்தாழ்வு அவர்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது.
வயதினரிடையே சமமற்ற கல்வியறிவு
இந்தியாவில் கணினி கல்வியறிவு வயதுக்கு ஏற்ப மாறுபடும். இளைஞர்கள் அதிக கணினி கல்வியறிவு விகிதங்களை பெற்றுள்ளனர். அதே சமயம் வயதானவர்கள் குறைந்த கணினி கல்வியறிவு விகிதங்களைக் பெற்றுள்ளனர். சமூகச் சூழல்களில் பொதுவான இந்தப் போக்கு, சமூக அறிவியல் "கூட்டு விளைவு" (“cohort effect”) அல்லது "தலைமுறை விளைவு" (“generation effect”) இளைய மற்றும் பழைய தலைமுறையினரிடையே உள்ள கணினிக் கல்வி ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டுகிறது. ஒட்டுமொத்த கணினி கல்வியறிவு விகிதம் 24.7% ஆகும். வெவ்வேறு வயதினரிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதை இந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
20-24 வயதுடைய இளைய பருவத்தினரிடையே கணினி கல்வியறிவு அதிகமாக உள்ளது. இது 45.9 சதவீதத்தை எட்டுகிறது. ஆனால், 65-69 வயதுடையோர் குறைந்த அளவான 4.4% கணினி கல்வியறிவு பெற்றுள்ளனர். இளைய பருவத்தினரிடையே கூட, 50%-க்கும் குறைவானவர்களே கணினி அறிவு பெற்றவர்கள். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் கணினிகள் முக்கியமான அங்கமாக மாறி வருவதால், மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் நவீன வளர்ச்சியில் இருந்து வெளியேறும் அபாயம் உள்ளது.
20-39 வயதுடைய தனிநபர்கள், பெரும்பாலும் தங்கள் தொழில் அல்லது வேலை தேடி கொண்டிருப்பவர்கள். அவர்களின் கணினி கல்வியறிவு விகிதம் 34.8% ஆக உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், இந்த வயதினருக்கு கணினி கல்வியறிவில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வு உள்ளது. கேரளா 72.7% உடன் முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் அஸ்ஸாம் 17.6%-ல் பின்தங்கியுள்ளது, இது 55.1 சதவீத புள்ளி வித்தியாசத்தை எடுத்துக்காட்டுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களான பீகார் (20.4%), மத்தியப் பிரதேசம் (21%), ஜார்கண்ட் (21.2%), உத்தரப் பிரதேசம் (22.9%), ஒடிசா (25.1%), சத்தீஸ்கர் (26%), மற்றும் ராஜஸ்தான் (27.6%) 30%-க்கும் குறைவான கணினி கல்வியறிவு விகிதங்களைக் கொண்டுள்ளன. இந்த ஏற்றத்தாழ்வு இந்த மாநிலங்களின் நவீன வளர்ச்சியிலிருந்து பயனடையும் திறனை குறைக்கிறது. இந்த இடைவெளியை குறைப்பது அனைவருக்குமான வளர்ச்சியை பெறுவது முக்கியமானது. இது போன்ற சூழலை தடுப்பதற்கு அரசு, தனியார் துறை மற்றும் குடிமை சமூக அலுவலர்களின் தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப்படுகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில் கணினி கல்வி வேலை வாய்ப்புகள், சமூக இணைப்புகள் மற்றும் நிதி தேவைகளைக் கட்டுப்படுத்துகிறது. சிக்கலான பணிகளை கையாளக்கூடிய மற்றும் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தக்கூடிய தொழிலாளர்களை முதலாளிகள் அதிகளவில் நாடுகின்றனர். கணினிகள் மற்றும் இணையத்தைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது திறன்களை வளர்த்து, தனிநபர்களை முதலாளிகளாக மாற்றும். பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் (Organisation for Economic Co-operation and Development (OECD)) வயது வந்தோர் திறன்களின் சர்வதேச மதிப்பீட்டிற்கான திட்டம் (Program for the International Assessment of Adult Competencies (PIAAC)) 2014-15 கணக்கெடுப்பின் படி, கணினித் திறன் கொண்ட பெரியவர்கள் வேலை செய்ய வாய்ப்பு அதிகம் (72.7%) இல்லாதவர்களுக்கு வாய்ப்பு குறைவாக (52.5%) உள்ளது. பொருளாதார நிபுணர் கேங் பெங்கின் (Gang Peng) 2017 ஆய்வின் படி, கணினி திறன்கள் வேலைவாய்ப்பையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. தென்னாப்பிரிக்காவில், ப்ரெஸ்டன்-லீ கோவிந்தசாமி (Preston-Lee Govindasamy), கணினியை திறமையாக பயன்படுத்துவது, வேலை தேடுவதற்கும், அதிக பணம் சம்பாதிப்பதற்கும் அதிக வாய்ப்புகளுடன் தொடர்புடையதாக இருப்பதைக் கண்டறிந்தார்.
மேலும், கணினி கல்வியறிவு டிஜிட்டல் பிரிவை உருவாக்குவதன் மூலம் சமூக-பொருளாதார இடைவெளியை அதிகரிக்கிறது. சிறந்த கணினி திறன் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் இந்தத் திறன்கள் இல்லாதவர்கள் அத்தியாவசிய சேவைகளை பெறுவதில் பல்வேறு தடைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த நிலைமை தொடர்ந்து பொருளாதார இடைவெளிகளை அதிகரிக்கச் செய்கிறது.
பள்ளிகள், வயதான மக்கள் கவனம் செலுத்தும் பகுதிகள்
கணினி கல்வியறிவில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், அதன் தாக்கம் குறைவாகவே உள்ளது. மாநிலங்களுக்கு இடையே கணினி திறன்களின் நிலை மற்றும் விநியோகம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. பணக்கார மற்றும் ஏழ்மையான மாநிலங்களுக்கு இடையிலான இந்த இடைவெளி, பலரின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
இதை நிவர்த்தி செய்ய, பள்ளிகள், இன்றைய பொருளாதாரத்திற்கு அவர்களை தயார்படுத்த கணினி திறன்களை கற்பிக்க வேண்டும். டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க அனைத்து பட்டதாரிகளுக்கும் இந்தத் திறன்கள் இருப்பது முக்கியம். கணினி வல்லுனர்களுக்கு பயிற்சி அளிக்கவும், போதுமான ஆசிரியர்களை உறுதி செய்யவும் அரசு முதலீடு செய்ய வேண்டும். கணினித் திறன்களைக் கற்றுக்கொள்வதற்காக உள்ளூர் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய, பள்ளியில் படிக்காத முதியவர்களையும் நிகழ்ச்சிகள் குறிவைக்க வேண்டும். அரசாங்கம் தற்போதைய கணினி கல்வியறிவு முயற்சிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் கணினி எழுத்தறிவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு திட்டமிட வேண்டும்.
இன்றைய மாணவர்கள் பொருளாதாரத்தில் வெற்றிபெற பள்ளிகள் மாணவர்களுக்கு கணினித் திறனைக் கற்பிக்க வேண்டும். டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க அனைத்து பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தத் திறன்கள் இருப்பது முக்கியம். கணினி வல்லுனர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், போதுமான ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்வதற்கும் அரசு முதலீடு செய்ய வேண்டும். பள்ளியில் படிக்காத முதியோர்களுக்கு கணினித் திறன்களைக் கற்பிக்க உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களை உள்ளடக்கிய திட்டங்கள் தேவை. கடைசியாக, அரசாங்கம் கணினி கல்வியறிவை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் கல்வியறிவை மேம்படுத்தவும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
வசஸ்பதி சுக்லா, சர்தார் படேல் பொருளாதாரம் மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தில் (Sardar Patel Institute of Economic and Social Research (SPEISR)) உதவி பேராசிரியராக உள்ளார். சந்தோஷ் குமார் தாஷ், ஆனந்த் கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தில் (Institute of Rural Management Anand (IRMA)) உதவி பேராசிரியராக உள்ளார்.