இந்துப் பெரும்பான்மையினருக்கு மதமாற்றத்தால் எந்த அச்சுறுத்தலும் ஏற்பட வில்லை. இந்த அடிப்படை தரவை உயர்நிதிமன்றங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய உலகில், மீண்டும் மீண்டும் சத்தமாகசொல்லப்படும் பொய்கள் உண்மையை விட அதிகமாக இருக்க முடியுமா? இதுதான் 'உண்மைக்குப் பிந்தைய' காலத்தின் சாராம்சம். இருப்பினும், பல நிறுவனங்கள் உண்மைத் துல்லியத்தை நிலைநிறுத்துவதற்குப் பணிபுரிகின்றன. இந்தியாவில், அரசியலமைப்பு நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் முக்கியமானவை.
இருப்பினும், அவர்களின் தீர்ப்புகள் தெளிவான தரவுகளுடன் முரண்படும் போது அல்லது நிறுவப்பட்ட சட்ட முன்மாதிரிகளை விட அகநிலை ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும்போது, அது கவலைக்குரியது மற்றும் ஆபத்தானது. உதாரணமாக, இந்துக்கள் சிறுபான்மையினராக மாறலாம் என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கருத்து இதற்கு ஒரு கவலைக்குரிய உதாரணம்.
மொத்த கருவுறுதல் விகிதத்தின் (Total fertility rate) உண்மைத்தன்மை
இந்தியாவின் கருவுறுதல் போக்குகள் ஒட்டுமொத்த மொத்த கருவுறுதல் விகிதம் மாற்று நிலைக்குக் கீழே குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்துக்களுடன் ஒப்பிடும்போது முஸ்லிம்கள் கருவுறுதலில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். இந்த விகிதங்கள் இந்துக்களின் பெரும்பான்மை நிலை பாதுகாப்பாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
1992-93 மற்றும் 2019-21 க்கு இடையில், முஸ்லீம் மொத்த கருவுறுதல் விகிதம் 2 புள்ளிகள் குறைந்து 2.4 ஆகவும், இந்துக்களின் கருவுறுதல் விகிதம் 1.3 புள்ளிகள் குறைந்து 2 புள்ளிகள் ஆகவும் உள்ளது. ஆழமாக பார்த்தால், கருவுறுதல் வேறுபாடுகளுக்கு முக்கிய காரணம் மதம் அல்ல என்பது தெளிவாக தெரிகிறது. மாநிலத்திற்கு மாநிலம் இடையே உள்ள வேறுபாடு இதற்கு முக்கிய காரணமாகும்.
உதாரணமாக, பீகாரில், இந்துக்களின் மொத்த கருவுறுதல் விகிதம் 2.88 ஆகும். கர்நாடகாவில் இந்துக்களின் மொத்த கருவுறுதல் விகிதம் 2.05 இல் உள்ள முஸ்லிம்களின் ஒட்டுமொத்த மொத்த கருவுறுதல் விகிதம் விட அதிகமாக உள்ளது. இந்த வேறுபாடு பெரும்பாலும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் காரணமாக அதிக கருவுறுதல் விகிதங்களுக்கு வழிவகுக்கிறது.
யதார்த்தமற்ற நீதி
நீதிபதிகள் சில நேரங்களில் முறையான நீதிமன்ற நடவடிக்கைகளை விட தனிப்பட்ட பேச்சுகளின் மூலம் தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறார்கள், அவை அரசியல் அமைப்பில் கூறப்பட்ட கருத்தை தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உதாரணமாக, ’தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்குப் பதியப்பட வேண்டும்’ அல்லது ’மனைவி என்பவள் சீதை தெய்வத்தைப் போல இருக்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்றங்கள் பரிந்துரைப்பது கீழ் நீதிமன்றங்களை எதிர்மறையாக பாதிக்கும். மோதலை ஊக்குவிக்கும் நபர்கள் ஏற்கனவே உள்ளனர்.எனவே, நமது நீதிமன்றங்கள் நடுநிலையையும் பகுத்தறிவு கொள்கைகளையயும் முன்னெடுக்க வேண்டும்.
original link:
https://timesofindia.indiatimes.com/blogs/toi-editorials/court-dont-contort/