விமான நிலைய மேற்க்கூரை விபத்துக்கள் விதிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் காட்டுகின்றன

 செயல்பாட்டு பொறுப்புகள் குறித்த தெளிவின்மை கவலையளிக்கிறது.

டெல்லி, ராஜ்கோட், லக்னோ மற்றும் ஜபல்பூர் ஆகிய இடங்களில் சமீபத்தில் பெய்த கனமழைக்கு மத்தியில் விமான நிலைய மேற்க்கூரைகள் விழுந்தன. இந்த விபத்துகள் இரண்டு கோணங்களை விசாரணைக்கு உட்படுத்துகின்றன. முதலாவதாக, இது இந்த மேற்க்கூரைகளின் வடிவமைப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.  கடுமையான மழை, மற்றும் புயல் இருந்தாலும், தாங்கும் திறன் ஏன் இல்லை? டெல்லி அதன் முழு பருவமழையில் மூன்றில் ஒரு பகுதியை கடந்த வெள்ளிக்கிழமை பெற்றதாக நம்பப்படுகிறது. தீவிர வானிலை நிகழ்வுகள் இனி அரிதானவை அல்ல. இன்றைய கட்டிடங்கள் இந்த காரணியை கணக்கில் கொள்ள முடியாது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.


விவரங்கள் தெரியவில்லை, ஆனால் மேற்க்கூரையில் வேகமாக சேகரமாகும் மழை நீருக்கு போதுமான  வடிகால்கள் இல்லாமல் இருக்கலாம். மழை நீரை மேற்க்கூரையின் கீழ் பகுதிக்கு கொண்டு வந்திருக்கலாம். இந்த விபத்துக்கள் தொழில்நுட்ப அலட்சியத்தையும், பராமரிப்பில் அலட்சியத்தையும் காட்டுகின்றன. உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு நாட்டிற்கு இது கவலையளிக்கிறது.


இரண்டாவதாக, பொறுப்புக்கூறலை நிறுவுவதற்கான தெளிவான விதிகள் அல்லது சட்டங்கள் இல்லை. தனியார் கூட்டமைப்பு அல்லது பிரதான ஆபரேட்டர் பொறுப்பேற்க வேண்டும். விபத்துக்குள்ளான விமான நிலையங்கள் ஒரு கூட்டமைப்பால் நடத்தப்படுகின்றன. இந்த கூட்டமைப்பு இந்திய விமான நிலைய ஆணையத்துடன் செயல்பாடு, மேலாண்மை மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தில் (Operation, Management and Development Agreement (OMDA)) கையெழுத்திட்டுள்ளது. இரு நிறுவனங்களும் 74:26 என்ற விகிதத்தில் விமான நிலையத்தின் பங்குதாரராக. உள்ளன. இருந்தாலும், இந்த நிகழ்வில் செயல்பாடு, மேலாண்மை மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தின் நோக்கம் தெரியவில்லை.  


விமான நிலையங்களின் பல்வேறு பகுதிகளை நிர்மாணிக்கும் பணிகளை இந்த கூட்டமைப்பு பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்கிறது. ஒப்பந்தச் சட்டத்தின்படி, முதன்மை ஒப்பந்தக்காரர் அல்லது கூட்டமைப்பு முதன்மை பொறுப்பாகும். இருப்பினும், கூட்டமைப்பு மற்றும் துணை ஒப்பந்தக்காரர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் தன்மை தெரியவில்லை. துணை ஒப்பந்தக்காரர்கள் பராமரிப்புக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அப்படியானால், சட்ட நிலைப்பாடு தெளிவாக இல்லை.  குறைபாடுகள் நிரூபிக்கப்பட்டால் முகவர் பொறுப்பேற்க முடியும். டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இடையேயான வழக்கில் ஜூலை 2022 இல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, கட்டணங்கள் மற்றும் வருவாய் பகிர்வு தொடர்பான மேலாண்மை மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தில் (Operation, Management and Development Agreement (OMDA)) இன் அம்சங்களைப் பற்றி விவாதிக்கிறது. 

பயணிகள் மேம்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் பயனர் மேம்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்தும் விமான நிலையப் பயனர்கள், விபத்துகளின் போது பற்றாக்குறையாக உணர்கிறார்களா? கூட்டமைப்புக்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்க்கும் இடையிலான வருவாய் பகிர்வு மாதிரி எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் ஆராய வேண்டும்.  

இந்தியாவின் உள்கட்டமைப்பு ஒழுங்குமுறை மற்றும் செயல்பாடுகள் பல தெளிவற்ற பகுதிகளைக் கொண்டுள்ளன.   இந்த பிரச்சினைகளை கொள்கை முன்னுரிமையாக மாற்றுவது முக்கியம்.  

original link:
Share: