பொது நிதித்துறையில் பெண் தலைவர்கள் : பாலின- பொறுப்புணர்வு பட்ஜெட் (gender-responsive budgeting) மூலம் பாலின விளைவுகளை மேம்படுத்துதல் -அபுலா சிங்

சமமான பிரதிநிதித்துவம் நிலையானதாக இருக்க வேண்டும் என்றாலும், நாம் நியாயமான பிரதிநிதித்துவத்திலிருந்து தலைமைக்கு மாற வேண்டும். 
மனித வளர்ச்சி மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் உலகளவில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதும் பாலின ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன. பெண்கள் இன்னும் கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் சட்ட உரிமைகள் ஆகியவற்றை பெறுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இது போன்ற நிகழ்வுகள் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கலாச்சார தடைகளுடன், சமமற்ற வாய்ப்புகளுக்கும்  வழிவகுக்கிறது. 

பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (women’s labour force participation rate) ஆண்களின் 58% உடன் ஒப்பிடுகையில் 25% குறைவாக உள்ளது. சராசரியாக, ஆண்களை விட பெண்களுக்கு ஊதியம் 34% குறைவாக வழங்கப்படுகிறது. டிஜிட்டல் மற்றும் நிதி உள்ளடக்கம், சமூகப் பாதுகாப்பிற்கான அணுகல், நிலம் மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றை பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். கோவிட்-19க்குப் பிறகு பாலின இடைவெளி அதிகரித்துவிட்டது. உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை (World Economic Forum’s) 2023-ன் படி, தற்போதைய பாலின இடைவெளியை குறைப்பதற்கு இன்னும் 131 ஆண்டுகள் ஆகும். 

வரலாற்று ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய வள ஒதுக்கீட்டில் உறுதியான நடவடிக்கை அவசியம். வள விநியோகத்தில் பாலின சமத்துவம் ஒரு நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கிறது. அரசாங்கங்கள் தங்கள் திட்டமிடல் மற்றும் பட்ஜெட் முடிவுகள் மூலம் முக்கிய பங்கு வகிக்க முடியும். வலுவான பொது நிதி மேலாண்மை (Public Finance Management (PFM)) அமைப்புகள் அரசாங்க செலவினங்கள் பொது சேவைகளை மேம்படுத்துகிறது, வறுமையை குறைக்கிறது, சம வாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதை உறுதிப்படுத்துகிறது.
அரசாங்கங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை பொது சேவைகளுக்காக செலவிடுகிறது. இந்த செலவின முடிவுகளுக்கு பாலினக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்துவது பாலின விளைவுகளை பெரிதும் மேம்படுத்தும். 
தலைமைப் பதவிகளில் உள்ள பெண்கள் செயல்திட்டத்தை மேலும் தொடரலாம்    

நிதி நிறுவன வாரியங்களில் பெண் தலைமை மற்றும் பன்முகத்தன்மை அதிக நிதி நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று சர்வதேச நாணய நிதியம், பாலின வியூகம் 2022 -ஆம் ஆண்டு அறிக்கை (IMF’s Gender Strategy 2022) கூறுகிறது. பெண் அரசியல் தலைவர்கள் உள்கட்டமைப்பு செலவினங்களை அதிகரித்து பெண்களின் கல்வியை மேம்படுத்துகின்றனர். இந்திய பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் மீதான ஆராய்ச்சி, பெண் தலைவர்கள் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை, சுகாதாரம், கல்வி மற்றும் இளம் பெண்களின் தலைமைத்துவ தேவை அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது.  
பொது நிர்வாகத்தில் அதிகமான பெண்கள் அரசாங்கத்திற்கு அதிக பொறுப்புணர்வை உருவாக்குகிறார்கள், சேவை தரத்தை மேம்படுத்துகிறார்கள் மற்றும் குடிமக்களின் நம்பிக்கையை வளர்க்கிறார்கள். தனியார் துறையில், நிர்வாகத்தில் உள்ள பெண்கள் சிறந்த தலைவர்களாகவும், ஊழியர்களுக்கு ஆதரவாகவும், பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துகின்றனர். பெண் தலைவர்கள் பெண்களின் தேவைகளை அறிந்து நியாயமான முடிவுகளை எடுக்கிறார்கள். 

குறிப்பாக, பொது நிதித்துறையில் பெண்கள் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். 11% நாடுகளில் மட்டுமே நிதியமைச்சகங்களில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். பெண் நிதி அமைச்சரைக் கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இருப்பினும், அரசாங்கத்தின் அடுத்த அடுக்கில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது.  

மாநிலங்களில், டெல்லியில் மட்டுமே ஒரு பெண் நிதி அமைச்சர் உள்ளார். ஒன்றிய  நிதி ஆணையம் (Central Finance Commissions (CFC)), வள ஒதுக்கீட்டில் முக்கிய பங்காற்றி வருகிறது.  ஆணையத்தில்  பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது.  16-வது ஒன்றிய  நிதி ஆணையத்தில்  ஐந்து உறுப்பினர்களில் ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். கடைசி ஆறு ஒன்றிய  நிதி ஆணையங்களில்   இரண்டில் மட்டுமே பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். பெண்களின் பிரதிநித்துவம் மொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இருந்து வருகிறது.
 
இந்திய அரசின் நிதித் துறைகளில் பணிபுரியும் பெண்களில் 22% மட்டுமே பெண்கள் என்று புள்ளிவிவர அமைச்சக அறிக்கை (statistics ministry report) காட்டுகிறது. மாநில நிதித் துறைகளில், பெண்கள் 27% மட்டுமே உயர் பதவிகளை வகிக்கின்றனர். மேலும் ஒரு மாநிலத்தில் மட்டுமே பெண் நிதித் துறைத் தலைவர் உள்ளனர். 

திறமைக் குழுவில் கணிசமான பகுதியைக் கொண்டிருந்தாலும், நிதி மற்றும் பொது நிதி ஆகியவற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. உலகளவில், அவர்கள் பொருளாதார பட்டதாரிகளில் சுமார் 30% மற்றும் வணிக பட்டதாரிகளில் 50% உள்ளனர் என்று 2018-ஆம் ஆண்டு  சர்வதேச நிதி நாணயத்தின் (International Monetary Fund (IMF)) அறிக்கை  கூறியது. 
 
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் முக்கியமானது. ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் பட்ஜெட் உருவாக்கம், ஒப்புதல் மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெண் அரசியல்வாதிகள் பெரும்பாலும் பாலின-பொறுப்புணர்வு கொள்கைகள் மற்றும் வள ஒதுக்கீட்டிற்காக வாதிடுகின்றனர். 

பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம், 2023 (Women Reservation Act, 2023) மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைக் பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் இந்த இட ஒதுக்கீடு  கட்டாயமாக பின்பற்றப்படவேண்டும் என்று பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் கூறுகிறது. சில மாநிலங்கள் பஞ்சாயத்து தேர்தல்களில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குகின்றன. 

சமமான பிரதிநிதித்துவத்தை அடைவது முக்கியம். ஆனால், அரசியல் மற்றும் நிதியில் தலைமைப் பாத்திரங்களை ஏற்க பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் பெண் நிதியமைச்சர் நியமனம் பொது நிதி நிர்வாகத்தில் (Public Financial Management (PFM)) பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. அதிக தகுதி வாய்ந்த பெண்களை பொது நிதி நிர்வாகத்தில் சேர்ப்பது  மற்றும் தலைமைப் பயிற்சி வழங்குவது, சமூக மேம்பாட்டிற்கு வழிவகுக்கும். 

பாலின ஏற்றத்தாழ்வுகளை விரைவாக குறைக்க முடியாது என்றாலும், பாலினப் பொறுப்பு பட்ஜெட் (Gender Responsive Budgeting (GRB)) வேலைகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் பாலின இடைவெளிகளைக் குறைக்க உதவும். பாலின சமத்துவத்தை மேம்படுத்த பாலினப் பொறுப்பு பட்ஜெட்டை பயன்படுத்தும் 100 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஆனால், அதன் பயன்பாடு குறைவாக உள்ளது. 

அரசாங்க திட்டமிடல் செயல்முறைகளின் வடிவமைப்பு, செயல்படுத்தல் மற்றும் நிதியுதவி ஆகியவற்றின் போது பாலின சமத்துவம் முழுமையாகக் கருதப்படுவதில்லை. அனைத்து அரசாங்க திட்டங்கள் மற்றும் நிர்வாகத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள துறைசார் வரவு செலவுத் திட்டங்களில் பாலினப் பொறுப்பு பட்ஜெட்டை  சேர்ப்பதன் மூலம் பாலின இடை வெளியை குறைத்து, முக்கிய தேசிய வளர்ச்சி இலக்குகள் மற்றும் உத்திகளில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இந்த முயற்சிகளை செய்ய பெண்களை விட சிறந்தவர் யார்?  
அபுலா சிங், குடியுரிமை மற்றும் ஜனநாயகத்திற்கான ஜனக்ரஹா மையத்தின் மேலாளராக உள்ளார்.  

original link:


Share: