பொருளாதாரத்தின் நிலையை அளவிடுவதற்கு இது பொருத்தமான குறிகாட்டிகளில் ஒன்றாகும்.
கோவிட் -19 (Covid-19) க்கு பிந்தைய, பொருளாதார குறிகாட்டிகள் அந்த ஆண்டில் ஏற்படும் மாற்றங்களினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இது பெரும்பாலும் தவறான செய்திகளுக்கு வழிவகுக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 8% வளர்ச்சி அடைந்துள்ளது. 2023-24ல் முடிவடைந்த ஐந்தாண்டு காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 34 இலட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஐந்தாண்டு காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.42 லட்சம் கோடியாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில், பொருளாதாரத்தின் நிலையை ஒருவர் எவ்வாறு அளவிடுவது?
சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax (GST)) வசூல் தரவு பொருளாதாரத்தின் நிலையை அளவிட ஒரு நல்ல குறிகாட்டியாகும். இது உண்மையான சேகரிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த தரவு மாதந்தோறும் வெளியிடப்படுகிறது. மற்ற பெருநிலைப் பொருளியல் (Macroeconomics) தரவு குறிகாட்டிகளுக்கு சில மதிப்பீடு தேவைப்படுகிறது. இந்த தரவு சேகரிப்பு பல காரணங்களுக்காக முக்கியமானது.
முதலாவதாக, சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax (GST)) வசூல், நுகர்வு அடிப்படையிலான வரி என்பதால் நுகர்வு அதிகரித்து வருகிறதா என்பதைக் ஆராய்கிறது. 2018-19-ஆம் ஆண்டில், சரக்கு மற்றும் சேவை வரி வசூல் தனியார் நுகர்வு செலவில் 10.5% ஆக இருந்தது. 2023-24-ல் தனியார் நுகர்வு செலவு 11.3% ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டு ஆண்டு பாதிப்பிற்கு பிறகு, நுகர்வு வளர்ச்சி குறைந்து, கடுமையான சரிவை ஏற்படுத்தியது. இப்போது, சரக்கு மற்றும் சேவை வரி வசூல் சீராக வளர்ந்து வருவதால், பொருளாதாரம் சரியான பாதையில் செல்வதைக் இந்த குறியீடுகள் காட்டுகிறது.
இரண்டாவதாக, இந்தத் தரவு மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக இருப்பதால், இது பல்வேறு பிராந்தியங்களில் நுகர்வு முறைகளை வெளிப்படுத்துகிறது. நிறுவனங்களுக்கு இந்தத் தரவு மிகவும் முக்கியமானது. இந்தத் தகவலின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை உருவாக்க முடியும். ஏனெனில், அவர்கள் சந்தைகளுக்கு ஏற்றவாறு உத்திகளை வடிவமைக்க முடியும்.
மூன்றாவதாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு மறைமுக வரிகள் (indirect taxes) குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக இருப்பதால், பட்ஜெட் இலக்குகள் எவ்வளவு சிறப்பாக அடையப்படுகின்றன என்பதை சரக்கு மற்றும் சேவை வரி தரவு குறிப்பிடுகிறது. இந்த தகவல் அரசாங்கத்திற்கும் சந்தைகளுக்கும் முக்கியமானது. இது அரசாங்க வருவாய்கள், நிதிப் பற்றாக்குறைகள் மற்றும் சந்தை கடன்களை பற்றி திட்டமிட உதவுகிறது. மாதாந்திர சரக்கு மற்றும் சேவை வரி தரவு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் பற்றிய நுண்ணறிவுகளையும் வழங்குகிறது.
நான்காவதாக, பொருளாதாரத்தை முறைப்படுத்தியதன் காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் அதிகரித்துள்ளது. இதுவும் இத்துறையில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. நுகர்வுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகள் விரைவாக அதிகரிக்கவில்லை. ஆனால், சரக்கு மற்றும் சேவை வரி வசூல் அதிகமாக இருந்தால், அது முறையான மற்றும் முறைசாரா பொருளாதாரத்தின் நிலையைக் குறிக்கலாம்.
கடைசியாக, தரவுகளில் இழப்பீட்டு மேல்வரி (compensation cess) பற்றிய தகவல்கள் உள்ளன. இது மாநிலங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.
ஒரு பொருளாதார நிபுணரின் பார்வையில், சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax (GST)) தரவு, பொருளாதார செயல்திறனை அடிக்கடி மதிப்பிடுவதற்கான மிகவும் நம்பகமான குறிகாட்டிகளில் ஒன்றாகும். கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டைப் (Purchasing Managers Index) போல் இல்லாமல், உண்மையான தொழில்துறை உற்பத்தித் தரவுகளிலிருந்து வேறுபடலாம். சரக்கு மற்றும் சேவை வரி தரவு நிகழ்நேர நுண்ணறிவுகளை வழங்குகிறது. வங்கிக் கடன்கள், உண்மையான கடன் வாங்குதல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பிரதிபலிக்கின்றன, அவை பருவகால காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. எனவே, விரிவான ஜிஎஸ்டி தரவுகளை தொடர்ந்து வெளியிடுவது தொடர வேண்டும்.
எழுத்தாளர், பாங்க் ஆஃப் பரோடா-வின் தலைமைப் பொருளாதார நிபுணர், மற்றும் ’Corporate Quirks: The Darker side of the sun’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்.