தேசிய தலைநகரான டெல்லி, உலகின் அதிவேக நகர்ப்புற விரிவாக்கங்களில் ஒன்றாகும். இந்த விரிவாக்கம் நிலத்தின் இயற்கையான நிலப்பரப்பு மற்றும் வடிகால் திறனை புறக்கணிக்கிறது. இதனால், அதிக மழையின்போது டெல்லி நகரமானது வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் பெரிய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (National Capital Region (NCR)) அடிக்கடி ஏற்படும் நகர்ப்புற வெள்ளத்திற்கு, சரிபார்க்கப்படாத மற்றும் மோசமாக திட்டமிடப்பட்ட நகர வளர்ச்சியே முக்கிய காரணமாகும்.
கடந்த வாரம் பெய்த கனமழையால் டெல்லியில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. டெல்லி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சொத்துக்களின் சேதம், மற்றும் துரதிர்ஷ்டவசமாக, 11 பேர் கட்டிடங்கள் இடிந்து விழுந்து மின்கசிவு போன்ற விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்பட்டது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) தனது சஃப்தர்ஜங் நிலையத்தில் (Safdarjung station) ஜூன் 27-28 வரை 24 மணி நேரத்தில் 228.1 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது 88 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச பதிவாக உள்ளது. இதன் விளைவாக, தற்போது டெல்லியின் மழைக்காலத்தில் வெள்ளம் மற்றும் நீர் தேங்குவது பொதுவானதாக உள்ளது. இதன் காரணமாக, குடிமைப் பணி அதிகாரிகளால் வடிகால்களை போதுமான அளவு தூர்வாராதது முக்கிய பங்களிக்கிறது. ஆனால், இதன் முக்கிய பிரச்சினையாக விரைவான வளர்ந்து வரும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் நகரம்
உலகின் அதிவேக நகர்ப்புற விரிவாக்கங்களில் ஒன்றாக டெல்லி தலைநகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, நாசாவின் எர்த் அப்சர்வேட்டரியின் (NASA’s Earth Observatory) தரவுகளின்படி, டெல்லியின் புவியியல் அளவு 1991 முதல் 2011 வரை கிட்டத்தட்ட இந்த நகரங்களின் வளர்ச்சி இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி புது தில்லியைச் சுற்றி நடந்துள்ளது. இதைச் சுற்றி இருந்துள்ள கிராமப்புறங்கள் இப்போது நகரின் பரவலான நகர்ப்புற பகுதியின் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது. டெல்லிக்கு அருகிலுள்ள நகரங்களான பஹதுர்கர், காசியாபாத், ஃபரிதாபாத், நொய்டா மற்றும் குருகிராம் போன்றவையும் வேகமாக வளர்ந்துள்ளன. இந்த பகுதிகள் தேசிய தலைநகர் பிராந்திய (National Capital Region (NCR)) பகுதியாக உள்ளனர்.
ஐ.நா.வின் 2018 தரவுகளின்படி, 2030-ம் ஆண்டில் டெல்லி நகரமானது, டோக்கியோவை முந்தி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக உள்ளது. இது, கிட்டத்தட்ட 39 மில்லியன் மக்களுடன், அதன் 2000 மக்கள்தொகையைவிட 2.5 மடங்கு அதிகம்.
நிலப்பரப்பு மற்றும் வடிகால்
இருப்பினும், இந்த நகர்ப்புற விரிவாக்கம் டெல்லியின் இயற்கை நிலப்பரப்பில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை.
"நிலப்பரப்பானது வடிகாலின் வடிவங்களைத் தீர்மானிக்கிறது" என்று INTACH-ன் இயற்கை பாரம்பரியப் பிரிவின் முதன்மை இயக்குநர் மனு பட்நாகர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். உதாரணமாக, தில்லியின் பழங்கால நகரங்களான, துக்ளகாபாத், மெஹ்ராலி மற்றும் ஷாஜஹானாபாத் முதல் குடிமை பகுதி, புது தில்லி மற்றும் இராணுவ முகாம் பகுதி வரை அனைத்தும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, உயரமான இடத்தில் கட்டப்பட்டுள்ளன. டெல்லியின் கிராமங்களிலும், கிராமத்தின் மையப்பகுதி எப்போதும் கிராமத்தின் சுற்றளவை விட ஐந்து முதல் ஆறு மீட்டர் உயரத்தில் இருக்கும்,” என்றார்.
டெல்லியில் யமுனை நதியின் பாதை மற்றும் தாழ்வான பகுதிகளைக் காட்டும் வரைபடம்.
இதனால் மழைநீர் வெளியேறியது. இருப்பினும், நகரம் விரிவடைந்து வருவதால், நிலத்தின் வடிகாலை கையாளும் பகுதியின் திறனைப் பற்றி போதுமான கவனம் செலுத்தப்படவில்லை.
எனவே, அதிக தீவிரம் கொண்ட மழையுடன் குறிப்பிடத்தக்க ஓட்டமான, தண்ணீரின் கட்டுப்பாடற்ற ஓட்டம், நிலத்தின் மேற்பரப்பில் உறிஞ்சக்கூடியதை விட அதிகமான நீர் இருக்கும்போது இது நிகழ்கிறது. மேலும், தற்போதுள்ள வடிகால் அமைப்புகள் போதுமானதாக இல்லை என்று பட்நாகர் விளக்கினார்.
எல்லா இடங்களிலும் கான்கிரீட்
கட்டிடக் கலைஞரும் நகர்ப்புற வடிவமைப்பாளருமான கே.டி. ரவீந்திரன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியது, இதன் நிலப்பரப்பு மலை முகட்டிலிருந்து ஆற்றுக்கு சுமார் 100 மீட்டர் கொண்ட நீர்வீழ்ச்சியாக இறங்குகிறது.
நகரமயமாக்கல் காரணமாக, நீர் இயற்கையாக கீழ்நோக்கிப் பாய்வதைத் தடுக்கிறது. இப்போதெல்லாம், இந்த நீர் நிறைய கான்கிரீட் வடிகால்களில் வடிவமைக்கிறது. அவை, தற்போது முக்கியமாக கழிவுநீர் கிடங்குகளாக மாறியுள்ளன என்று ரவீந்திரன் கூறுகிறார்.
தாழ்வானப் பகுதிகளில் கட்டடம் கட்டுவதால் வெள்ளம் மேலும் மோசமடைகிறது. உதாரணமாக, டெல்லியின் தெற்கிலிருந்து சாணக்யபுரி மற்றும் ஆர்.கே.புரம் வரை செல்லும் ஏராளமான நீரோடைகள் சராய் காலே கானில் (Sarai Kale Khan) சந்திக்கின்றன. இது யமுனை ஆற்றுக்கு அருகில் உள்ள தாழ்வான இடமாகும். இதனால் இந்த பரபரப்பான நகர்ப்புற கிராமத்தில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது.
புது தில்லியின் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் 1900-களில் ஆங்கிலேயர்கள் ஆற்றங்கரையில் ரயில் பாதையை அமைத்தபோது கட்டுமானம் தொடங்கியது. பின்னர், வெகுநாள் கழித்து, மீண்டும் யமுனை வெள்ளச் சமவெளியில் சுற்றுச் சாலை (Ring Road) வந்தது. காலப்போக்கில், பாலங்கள் மற்றும் கட்டமைப்புகள் கட்டுதல் உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக வெள்ளப்பெருக்கு பயன்படுத்தப்பட்டது என்று ரவீந்திரன் குறிப்பிட்டார்.
டெல்லி மெட்ரோ பராமரிப்பு பணிக்காக காஷ்மீர் கேட் (Kashmere Gate) அருகே சுமார் 65 ஹெக்டேர் நிலத்தை மீட்டது. 2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின்போது வெள்ளப்பெருக்கு பகுதியில் சுமார் 25 ஹெக்டேர் பரப்பளவில் பேருந்து பராமரிப்பு வசதியையும் அவர்கள் உருவாக்கினர். ஐடிஓ-பிரகதி மெய்தன் பகுதி (ITO-Pragati Maidan area) பல ஆண்டுகளாக வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இது முன்பொரு காலத்தில் தாழ்வான ஈரநிலமாக இருந்தது.
இந்த கான்க்ரீட் பகுதி மழைநீரை மண்ணில் ஊடுருவிச் செல்வதற்கு சிறிய இடத்தை விட்டுச்செல்கிறது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. யமுனா பல்லுயிர் பூங்காவின் (Yamuna Biodiversity Park (YBP)) சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கு தலைமை தாங்கிய சுற்றுச்சூழல் ஆர்வலர் சி.ஆர்.பாபு கூறியது போல், "புயல் வடிகால்களை சாக்கடைகளாக மாற்றி, நிலம் கான்கிரீட்டால் செய்யப்பட்டால், தண்ணீர் எங்கே போகும்?"
தண்ணீரைத் திறம்பட நிர்வகிக்க எந்த திட்டமும் இல்லை
2008 முதல் 2011 வரை டெல்லி நகர்ப்புறக் கலை ஆணையத்தின் (Delhi Urban Arts Commission (DUAC)) தலைவராக பணியாற்றிய ரவீந்திரன், நகர்ப்புற திட்டமிடுபவர்கள் விரிவான "தண்ணீரை திறம்பட நிர்வகிக்க திட்டம்" உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
"இன்று, நிலம் அதன் மனை விற்பனைத் திறனுக்காகவே மதிப்பிடப்படுகிறது. இருப்பினும், திட்டமிடல் வளமாக நீர் ஒரு நிலையான மேற்பார்வை இருந்து வருகிறது. உண்மையில், எந்த நகரத்தின் திறமையான திட்டம் தண்ணீரே முதன்மையாக இருக்க வேண்டும்," என்று அவர் விளக்கினார். கடந்த 70 ஆண்டுகளில் நகரில் சுத்தமான நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய விரிவானத் திட்டமிடல் எதுவும் செய்யப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால்தான், எடுத்துக்காட்டாக, 2022-ல் பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட புதிய பிரகதி மைதானம் சுரங்கப்பாதை (new Pragati Maidan Tunnel) ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது.
வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் நீர்நிலைகளும் முறையாக அழிக்கப்பட்டுள்ளன. “அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, டெல்லியில் சுமார் 1,000 நீர்நிலைகள் உள்ளன. ஆனால் நிலத்தடியில் 400க்கு மேல் இல்லை. நகரத்தில் வெள்ளத்தை சமாளிக்கக்கூடிய இந்த 600 'காணாமல் போன' நீர்நிலைகள் நிரப்பப்பட்டு, மதிப்புமிக்க விற்பனை மனைகளாக மாற்றப்பட்டுள்ளன" என்று பட்நாகர் கூறினார்.
கனமழையின் போது நகரின் பிற பகுதிகள் வெள்ளத்தை எதிர்கொண்டாலும், யமுனா பல்லுயிர் பூங்கா (Yamuna Biodiversity Park (YBP)) பாதிக்கப்படவில்லை என்று பாபு கூறினார். ஏனென்றால், அனைத்து மழைநீரும் பூங்காவின் மென்மையான மண் மற்றும் மழைநீர் சேகரிப்பு குழிகள் எளிதில் தக்க வைத்துள்ளன. பூங்காவைப் போலல்லாது, நகரத்தில் பல பகுதிகள் திறம்பட திட்டமிடப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பாபு கூறுகையில், வெள்ளத்தைத் தடுக்க, தாழ்வானப் பகுதிகளில் கட்டடம் கட்டுவதை தவிர்க்க வேண்டும், புல்வெளிகள் மற்றும் நடைபாதைகளில் உள்ள காரைகளை அகற்ற வேண்டும், திடக்கழிவுகளால் வடிகால் அடைக்கப்படுவதை தடுக்க வேண்டும். சரிவுகளை புரிந்துகொண்டு இயற்கை நிலப்பரப்புடன் செயல்படுவது முக்கியம், என்றார்.
ரவீந்திரன், தாழ்வானப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்குத் தண்ணீர் கொண்டுசெல்ல முறையான வடிகால் குழிகளை அமைக்க பரிந்துரைத்தார். ஒவ்வொரு முறையும் எல்லா நீரையும் வெளியேற்ற எங்களால் முடியாததால், நீர் ஓட்டத்திற்கு புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். ஆனால், அழுக்கு நீர் நீர்நிலைகளுக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், என்றார்.