கணினி அடிப்படையிலான சோதனை, கூர்மையான கண்காணிப்பு: IIT-கள் JEE-ஐ எந்த பிரச்சனையும் இல்லாமல் எப்படி நடத்துகின்றன? -அமிதாப் சின்ஹா

     மருத்துவக் கல்லூரிகளுக்கான தேசிய தகுதி மற்றும் நீட் தேர்வைப் போலவே, கூட்டு நுழைவுத் தேர்வு (Joint Entrance Examination (JEE)) நாட்டின் முக்கியமான தேர்வுகளில்  ஒன்றாகும். கூட்டு நுழைவுத் தேர்வு இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது.


ஜூன் 22 அன்று, தேசிய தேர்வு முகமையால் (NTA) தேர்வுகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதை ஆராய ஒரு உயர்மட்டக் குழுவை அரசாங்கம் அமைத்தது. நீட்-இளங்கலை பட்டதாரி தேர்வின் போது முறைகேடுகள் நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.


பரிசீலிக்கப்படும் மாதிரியானது, இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் தங்கள் கூட்டு நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும் எவ்வாறு நடத்துகின்றன என்பதை ஆராய்வதை அடிப்படையாகக் கொண்டது. மருத்துவக் கல்லூரிகளுக்கான நீட் போலவே, கூட்டு நுழைவுத் தேர்வு இரண்டு நிலைகளில் நடைபெறும் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க தேர்வுகளில் ஒன்றாகும். 2021–ஆம் ஆண்டு ஹரியானாவில் நடந்த ஒரு சம்பவம், தேர்வு மையத்தில் முறைகேடு காரணமாக மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு வழிவகுத்தது. இருப்பினும், கூட்டு நுழைவுத் தேர்வில் இதுபோன்ற சர்ச்சைகள் ஒருபோதும் எழுந்ததில்லை. பயிற்சி நிறுவனங்கள் முடிவுகளைக் கையாளுவதைத் தடுப்பதில் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.


முதல் நிலை, கூட்டு நுழைவுத் தேர்வு JEE (முதன்மை தேர்வு), சில இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) உதவியுடன் தேசிய தேர்வு முகமையால் தேர்வு  நடத்தப்படுகிறது. இரண்டாம் நிலை, கூட்டு நுழைவுத் தேர்வு (மேம்பட்ட தேர்வு), முற்றிலும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தால் கையாளப்படுகிறது.


கணினி அடிப்படையிலான தேர்வின் நன்மை மற்றும் தீமைகள்


NEET மற்றும் JEE இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், JEE இப்போது முழுமையாக கணினி அடிப்படையிலானது. இரண்டு JEE நிலைகளும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services) மூலம் நிர்வகிக்கப்படும் குறிப்பிட்ட கணினி மையங்களில் நடத்தப்படுகின்றன. NEET உடன் ஒப்பிடும்போது குறைவான மாணவர்களே JEE எழுதுகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், சுமார் பத்து லட்சம் மாணவர்கள் JEE (முதன்மை தேர்வு)-வில்  பங்குபெற்றுள்ளனர். சுமார் இரண்டு லட்சம் பேர் JEE (மேம்பட்ட தேர்வு)-க்கு முன்னேறியுள்ளனர். மாறாக, நீட் தேர்வில் ஆண்டுதோறும் சுமார் 23-24 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.


 டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services) தேர்வு மையங்களில் ஒரே நேரத்தில் இரண்டு லட்சம் மாணவர்கள் வரை அமரலாம். இது ஒரே அமர்வில் JEE (மேம்பட்ட தேர்வு) நடத்த அனுமதிக்கிறது. மறுபுறம், JEE (முதன்மை தேர்வு), பல அமர்வுகளில் நடத்தப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வினாத்தாளுடன் தேர்வு நடத்தப்படுகிறது. பல்வேறு நகரங்களில் உள்ள பிற நிறுவனங்களும் கணினி அடிப்படையிலான சோதனைகளுக்கான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இணையத் தேர்வுகள் 2017-ல் தொடங்கியதிலிருந்து, 2022-ஆம் ஆண்டைத் தவிர,  டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மையங்களில் JEE தொடர்ந்து நடத்தப்படுகிறது.


இணையவழித் தேர்வுகள் போக்குவரத்து மற்றும் மையங்களுக்கு விநியோகத்தின்போது காகிதக் கசிவு போன்ற பாதிப்புகளை நீக்குகிறது. அச்சு இயந்திரங்கள் அல்லது போக்குவரத்து நிறுவனங்கள் போன்ற வெளிப்புற நிறுவனங்களின் மீதான நம்பிக்கையையும் அவை குறைக்கின்றன. நீட் முறைகேடுகள் குறித்த விசாரணை இந்த பாதிப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


இணையவழித் தேர்வுகள் தொழில்நுட்பம் சார்ந்த முறைகேடுகள் மற்றும் டிஜிட்டல் ஆள்மாறாட்டம் போன்ற புதிய அபாயங்களை உருவாக்குகிறது. உதாரணமாக, 2021-ல், ஹரியானாவின் சோனேபத்தில் உள்ள ஒரு தேர்வு மையம் நகல் செய்யப்பட்டது. 'தேர்வர்களுக்கு' தொலைநிலை அணுகல் வழங்கப்பட்டது.


இதன் விளைவாக, 2022 JEE-க்கு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தேர்வு மையங்கள் தடை செய்யப்பட்டன. அதற்குப் பதிலாக மற்ற மையங்கள் பயன்படுத்தப்பட்டன. டிசிஎஸ் சோதனை மையங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரிசெய்யப்பட்ட பிறகு 2023 முதல் மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பின்  விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது.


இந்திய தொழில்நுட்பக் கழகத்தின்  (IIT) கண்காணிப்பு


1997-ஆம் ஆண்டில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கான வினாத்தாள்கள் நுழைவுத் தேர்வுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு கசிந்தபோது இந்திய தொழில்நுட்பக் கழகம் ஒரு பெரிய சிக்கலை சந்தித்து. அப்போது, ​​பேனா, பேப்பர் மூலம் தேர்வு நடத்தப்பட்டதால், அதை ரத்து செய்து, மாற்றி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  அதன் பிறகு, JEE பல வழிகளில் மாறிவிட்டது. பின்னர் இரண்டு-நிலை செயல் முறைகள் அறிமுகப்படுத்தபட்டது. 


இன்று JEE (முதன்மை தேர்வு)-க்கு, இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் முக்கியமாக கேள்விகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. தேசிய தேர்வு முகமை மற்ற தேர்வு செயல்முறைகளைக் கையாளுகிறது. இருப்பினும், JEE (மேம்பட்ட தேர்வு), இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் முழுத் தேர்வு செயல்முறையையும் நிர்வகிக்கின்றன. இது ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பே ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு JEE தலைவர் மற்றும் துணைத் தலைவர் நியமனத்துடன் தொடங்குகிறது. இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் தேர்வை நேர்மையாக நடத்த முக்கியப் பங்காற்றுகின்றன. 


இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) வினாத்தாள்களைத் தயாரிக்கும்போது கடுமையான ரகசியத்தன்மையை உறுதி செய்கின்றன. வெவ்வேறு நகரங்களில் அமைந்துள்ள இரண்டு தனித்தனிக் குழுக்கள், மூன்று பாடங்களில் ஒவ்வொன்றிற்கும் இரண்டு அடுக்கு கேள்விகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஏழு பழைய தொழில்நுட்பக் கழகங்களில் இருந்து ஒரு ஆசிரியர் உறுப்பினராக உள்ளார். இந்தக் குழுக்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. மேலும் இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் உள்ள மற்ற ஆசிரியர் உறுப்பினர்களுக்கு தாள்களைத் தயாரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைப் பற்றி தெரிவிக்கப்படுவதில்லை. JEE தலைவர் இரண்டு அடுக்கு வினாத்தாள்களையும் பெற்று தேர்வுகளுக்கு எந்த அடுக்கு பயன்படுத்தப்படும் என்பதை முடிவு செய்வார்.


தேர்வு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் வந்து சேரும். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் இரண்டு முதல் மூன்று இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆசிரியர்கள் இந்த செயல்முறையை மேற்பார்வையிடுகின்றனர். கடந்த காலங்களில், ஜேஇஇ பேனா மற்றும் தாள் தேர்வாக இருந்தபோது, ​​இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஊழியர்களே தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களைக் கொண்டு சென்றனர். நுழைவுத் தேர்வில் இந்திய தொழில்நுட்பக் கழக செயலில் பங்கேற்பது, JEE-யை நன்கு அறிந்தவர்களின் கூற்றுப்படி, அதன் நேர்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது.

 

"இந்த செயல்முறையில் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் அதன் ஆசிரியர் உறுப்பினர்களுக்கு நிறைய ஆபத்து உள்ளது. இது நிறுவனத்தின் நற்பெயரைப் பற்றியது மட்டுமல்ல, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பற்றியது. நடைமுறை சரியாக செய்லபடுத்தப்படாவிட்டால், அது எங்கள் வாழ்க்கையைப் பாதிக்கிறது. எனவே, எங்களுக்கு நிறைய பொறுப்பு உள்ளது என்று ஒரு ஆசிரியர் கூறுகிறார்.  மற்றொரு ஓய்வுபெற்ற ஆசிரிய உறுப்பினர், தேர்வு செயல்முறையின் மீது கட்டுப்பாட்டை வைத்திருப்பது, நீட் தேர்விலிருந்து JEE-ஐ வேறுபடுத்துகிறது என்று குறிப்பிட்டார்.


AIIMS தங்கள் சொந்தத் தேர்வுகளை கேள்விக்கு இடமில்லாத நம்பகத்தன்மையுடன் நடத்தி வந்தது. ஐ.ஐ.எம்.களும் தங்கள் தேர்வுகளை சுமுகமாக நடத்துகின்றன. ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியை  குறைத்து  இணைய வழித் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமைக்கு அடிப்படைத் திறன்கள் முதன்மையானதாக இருக்க வேண்டும். நீட் ஒரு முக்கியமான தேர்வு, இது போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் ஒருவர் கூறினார்.



Share: