2024-ஆம் ஆண்டு மக்களைவை தேர்தலுக்குப் பிறகு எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு, தாக்கல் செய்யப்படவிருக்கும் ஒன்றிய பட்ஜெட் தீர்வு காணுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஜூலை 23-ஆம் தேதி ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த முறை ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பட்ஜெட் என்பது வெறும் வருவாய் மற்றும் செலவு அறிக்கை அல்ல. இது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அரசியலை பிரதிபலிக்கும்.
2019-ஆம் ஆண்டு மக்களவையில் பாஜக 303 இடங்களைக் பெற்றது. ஆனால், 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களை பிடித்தது. தனிப்பெரும்பான்மை பெறவில்லை. ஆட்சியை தொடர்வதற்கு பிற மாநில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. தனிப்பெரும்பான்மை பெறாததற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது முந்தைய ஆட்சிக்காலத்தின் (2014-2019) தவறான பொருளாதார கொள்கை மற்றும் சர்ச்சைக்குரிய சட்டங்கள் ஆகும்.
தேர்தல் முடிவுகள் முந்தயை அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்ததை தெளிவாக காட்டுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு பட்ஜெட் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
ஒரு வாக்கெடுப்புக் காரணியாக வேலைப் பிரச்சினை
2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் வேலையின்மை, பணவீக்கம் மற்றும் சமூக மற்றும் பொருளாதார நீதி தொடர்பான பிரச்சனைகள் ஆகும். வேலைவாய்ப்பு முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்பட்டது. இந்தக் கவலைகளை தீர்ப்பதற்கு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள செயல் திட்டங்கள் என்ன? சிகாகோ பள்ளி மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பொருளாதார வல்லுநர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை கடுமையாக எதிர்க்கின்றனர். இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கான (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) நிதியுதவியைப் பாதிக்கலாம். இது ஏற்கனவே குறைந்த நிதி ஆதாரத்துடன் இயங்கி வருகிறது. மேலும், நகர்ப்புற வேலையில்லாதவர்களுக்கும் இதே போன்ற திட்டத்தை உருவாக்குவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் போதுமான வேலைகளை உருவாக்கவில்லை. இது அரசாங்கத்தின் பழைய பொருளாதார திட்டங்களினால் ஏற்பட்ட பிரச்சனை. இதை சரி செய்வதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) சட்டம் உருவாக்கப்பட்டது. சமீபத்திய அறிக்கைகள் (இந்திய பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையம் (centre for monitoring indian economy (pvt.ltd CMIE)) இந்தியாவில் வேலைச் சிக்கல்களைக் சுட்டிக்காட்டுகிறது:
1. பலருக்கு போதுமான வேலை இல்லை.
2. பல இளைஞர்களுக்கு (15-29 வயது) வேலை கிடைக்கவில்லை.
3. படித்த இளைஞர்களுக்கு படிப்பிற்குக்கேற்ற வேலை கிடைப்பது கடினமாக மாறிவிட்டது. மேலும், வழக்கமான வேலையில் இருப்பவர்கள் குறைவான வருமானம் பெறுகிறார்கள். பல வேலைகள் அதிகாரப்பூர்வமாகவோ அல்லது தரமானதாகவோ இல்லாததால் இந்த சூழல் உருவாகியிருக்கலாம். மறுபுறம், தற்காலிகப் பணியாளர்கள் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். இது MGNREGA மற்றும் மக்களுக்கு உதவும் பிற அரசுத் திட்டங்களின் காரணமாக இருக்கலாம்.
இப்போது அதிகமான பெண்கள் வேலை செய்கிறார்கள். பலர் தங்கள் குடும்ப தேவைகளுக்காக ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார்கள். மக்கள் வேலை செய்யும் இடங்களிலும் பெரிய மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது. அதிகமான மக்கள் விவசாயம் மற்றும் அது போன்ற வேலைகளில் வேலை செய்கிறார்கள். தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறைவான ஆட்கள் வேலை செய்கிறார்கள். இது நிபுணர்கள் எதிர்பார்த்ததில் இருந்து வேறுபட்டது. முதன்மைத் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையில், இரண்டாம் நிலை வேலை வாய்ப்புகள் சுருங்கியுள்ளது. அமைப்புசாரா துறை, குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் (micro, small and medium enterprises (MSMEs)) ஏற்ப்பட்ட வீழ்ச்சியே இதற்கு முக்கிய காரணம் இதற்குக் காரணம்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சுருக்கம்
பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) மற்றும் கோவிட்-19 ஊரடங்கு ஆகிய மூன்று முக்கிய நிகழ்வின் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துவிட்டது. தற்போதைய, பட்ஜெட்டில் இந்தத் துறைக்கு சிறப்புக் கவனம் தேவை. முந்தைய பட்ஜெட்டுகள் உள்கட்டமைப்பு செலவுகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள், தொடக்க நிதி மற்றும் வேலைகளை உருவாக்குவதற்கான நிதி பொறுப்பு ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தியது. ஏற்றுமதி சார்ந்த MSME-கள், உள்கட்டமைப்பு திட்டங்கள், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் துறைகள், அதிக மதிப்புடையது. ஆனால், குறைந்த வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றையும் அரசாங்கம் வலியுறுத்தியது. வெறும் பொருளாதார விரிவாக்கத்தைவிட வேலைவாய்ப்பு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
கவனம் எங்கே இருக்க வேண்டும்
சமூக மற்றும் பொருளாதார நீதி வெற்று வார்த்தைகளாக இருக்கக்கூடாது. நாட்டிற்குள் குறைந்த வருமானம் மற்றும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கு சேவை செய்யும் MSME-களுக்கு இந்த பட்ஜெட் முன்னுரிமை அளிக்க வேண்டும். கூடுதலாக, மனித வளர்ச்சிக் குறியீடு (Human Development Index) மற்றும் பல பரிமாண வறுமைக் குறியீடு (Multi-Dimensional Poverty Index (MDPI)) ஆகியவற்றில் இந்தியாவின் தரவரிசைகளைக் கருத்தில் கொண்டு, பின்தங்கிய பிரிவினருக்கான கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதிக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் பட்ஜெட் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தியா, 5-வது பெரிய பொருளாதாரமாக மாறி 3-வது பெரிய பொருளாதாரத்தை நோக்கி முன்னேறுகிறது என்று மக்கள் கூறி வந்தாலும், 1990-களின் நடுப்பகுதியில் இருந்து வேலையின்மை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. எனவே, தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் சரியாக வேலை செய்யாத பழைய திட்டங்களைத் தொடராமல், முக்கியமான பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும்.
ஜி. விஜய் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பள்ளியின் ஆசிரியர் உறுப்பினர்.