இளங்கலை பொறியியல் படிப்புகளில் மாணவிகளின் பங்கு, கடந்த பத்தாண்டுகளில் உயர்ந்துள்ளது.
அகில இந்திய உயர்கல்வி ஆய்வின்படி (All India Survey on Higher Education (AISHE)) கல்லூரிக் கல்வியைத் தொடரும் மாணவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு இருந்தபோதிலும், இந்தியாவில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 2016-ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாகக் குறைந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை கலை, அறிவியல் மற்றும் வணிகப் பிரிவுகளில் அதிகமாக இருந்தது. அதைத் தொடர்ந்து பொறியியல் படிப்புகள். 2016-ஆம் ஆண்டு மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் ஒரே துறையாக பொறியியல் இருந்தது.
2022-ஆம் ஆண்டில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர்வதில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. இதற்கு முன்பு. அகில இந்திய உயர்கல்வி ஆய்வின்படி (All India Survey on Higher Education (AISHE)) கண்காணிக்கப்படாத பல புதிய படிப்புகள் கணக்கெடுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக இருக்கலாம். இருப்பினும், இந்தப் போக்கு மாறவில்லை.
பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை பெண்களைவிட ஆண் மாணவர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. 2013-ஆம் ஆண்டில், அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் மின்னணு பொறியியல் (electronics engineering), கணினி பொறியியல் (computer engineering) மற்றும் தகவல் தொழில்நுட்பம் (information technology (IT)) துறையை தேர்ந்தெடுத்துள்ளனர். கணினி பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில், 2013-ஆம் ஆண்டில் அனைத்து மாணவர்களில் 45% க்கும் அதிகமான பெண் மாணவர்கள் இருந்தனர். கடந்த பத்தாண்டுகளில் இந்த துறைகளில் மாணவிகளின் பங்களிப்பு தலா 10% புள்ளிகள் குறைந்துள்ளது.
இருப்பினும், சமூக மனப்பான்மை மற்றும் புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், முன்பு மாணவிகள் குறைவாகவே இருந்த துறைகளில் சேரத் தொடங்கினர். உதாரணமாக, சுரங்கப் பொறியியலில் (mining engineering), 2013-ஆம் ஆண்டில் 1.2% ஆக இருந்த பெண் மாணவர்களின் பங்கு, 2022-ஆம் ஆண்டில் 8% ஆக உயர்ந்தது. அதேபோல், கடல்சார் பொறியியலில் (marine engineering), பெண் மாணவர்களின் பங்கு 1.5%லிருந்து 6.4% ஆக உயர்ந்தது. அதே காலகட்டத்தில், பெண் மாணவர்களின் பங்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (mechanical engineering) மற்றும் சிவில் இன்ஜினியரிங் (civil engineering) ஆகியவற்றில் முறையே 4.2% முதல் 7.6% மற்றும் 18.2% முதல் 23% வரை கணிசமாக அதிகரித்துள்ளது.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் ஆண் மாணவர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். அவர்களின் பங்கு 2013-ஆம் ஆண்டில் 95.8% இலிருந்து 2022-ஆம் ஆண்டில் 92.4% ஆக சற்று குறைந்துள்ளது. இருப்பினும் இந்தத் துறையில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. 2022-ஆம் ஆண்டில் 5.4 லட்சம்.
மறுபுறம், கணினி பொறியியல் படிப்புகளில் சேரும் ஆண் மாணவர்களின் எண்ணிக்கை 2013-ஆம் ஆண்டில் சுமார் 3.5 லட்சத்தில் இருந்து 2023-ஆம் ஆண்டில் 8.25 லட்சமாக அதிகரித்துள்ளது.
இந்த படிப்புகளில் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Class (OBC)) பங்கு 2013-ஆம் ஆண்டில் 33% ஆக இருந்து 2022-ஆம் ஆண்டில் 38% ஆக உயர்ந்தது. பட்டியல் பழங்குடியின (Scheduled Tribes(ST)) மாணவர்களின் பங்கு அதே காலகட்டத்தில் 2.1% இலிருந்து 3.3% ஆக சற்று அதிகரித்துள்ளது. பட்டியல் இனத்தவர் (Scheduled Castes(SC)) இடையே, அதிகரிப்பு சீரற்றதாக இருந்தது. இது சில ஆண்டுகளில் சிறிது சரிந்து, 2013-ஆம் ஆண்டில் 8.7% உடன் ஒப்பிடும்போது 2022-ஆம் ஆண்டில் 11% ஆக இருந்தது. காலப்போக்கில் பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பங்கு குறைந்தது.
மெக்கானிக்கல் மற்றும் சிவில் இன்ஜினியரிங் படிப்புகள் பல ஆண்டுகளாக ஆண்களிடையே மதிப்பை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. இது வேலைவாய்ப்பில் சரிவைச் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில் கணினி பொறியியல் போன்ற படிப்புகள் மாணவர்களை ஈர்க்கின்றன.