பாரம்பரிய அறிவை அங்கீகரிப்பதுடன், தீவிர வானிலை நிகழ்வுகளை முன்னறிவிப்பதற்கு சிறந்த வழிகளில் முதலீடு செய்வது முக்கியம்.
“இந்த சூழலை ஏற்படுத்த நாம் என்ன செய்தோம்?“ - மலைகள் இடிந்து, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் வெள்ளத்தில் மூழ்கும் போது, இந்த கேள்வி எழுகிறது. இது இயற்கை நிகழ்வுகள் மட்டுமல்ல, மனிதர்களாகிய நாம் எவ்வாறு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்தோம் என்பது பற்றியது.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் அல்லது இமயமலை போன்ற உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் கனமான கட்டுமானம் மற்றும் நகரங்களில் மழைநீர் வடிகால்களை தடுப்பது ஆகியவை முக்கிய பிரச்சனையாக உள்ளது. சுரங்க நீர்மின் திட்டங்கள், சுரங்கங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் புறவழிச்சாலைகள், பொருத்தமற்ற இடங்களில் கட்டப்பட்ட நகரங்கள் போன்ற மனித நடவடிக்கைகள் பேரழிவுகளை மிகவும் மோசமாக்குகின்றன. காலநிலை மாற்றம் ஒரு காரணியாக இருந்தாலும், இது பெரும்பாலும் மனித நடவடிக்கைகளால் (anthropogenic) ஏற்படுகிறது. எதிர்காலத்தில், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளின் இழப்பு மற்றும் சேதங்களை நாம் சமாளிக்க வேண்டும். இந்த பேரழிவுகளில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள முடியும்?
சாம்பல் காண்டாமிருகம் (Gray Rhino)
இந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பிளாக் ஸ்வான்ஸ் போல் இல்லாமல் (Black Swans), இவை அரிதான மற்றும் எதிர்பாராதவை. அடிக்கடி மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பேரழிவுகளை, நாசிம் நிக்கோலஸ் தலேப் வகைப்படுத்தியுள்ளார். அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் இவை. கோவிட்-19 தொற்றுநோயை சாம்பல் காண்டாமிருகமாகக் கருதுகின்றனர். ஏனெனில், கடுமையான சுவாச நோய்க்குறி (Severe Acute Respiratory Syndrome (SARS)) மற்றும் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (Middle East Respiratory Syndrome (MERS)) போன்ற முந்தைய வெடிப்புகளிலும் இதே போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தன. இந்த பேரழிவுகள் சாதாரணமாகி வருகின்றன. இந்த தொடர்ச்சியான பேரழிவுகளின் விளைவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
பெரியவர்கள் சொல்வதைக் கேளுங்கள் (Listen to elders)
ஃபுகுஷிமாவுக்கு அருகிலுள்ள அனியோஷியில், கல்வெட்டுகள் "எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பாக இருக்க உயரமான வீடுகளை கட்டுங்கள். கடந்த கால சுனாமிகளை நினைவில் கொள்க. இந்த நிலைக்கு கீழே கட்ட வேண்டாம்" என்று சுனாமி பற்றி எச்சரிக்கின்றன. சுற்றுச்சூழல் ஞானத்தைக் காட்டும் பாரம்பரிய நடைமுறைகள் இந்திய கிராமப்புறங்களில் உள்ளன. புங்காஸ், கட்ச்சின் பாரம்பரிய வீடுகள், 2001 பூகம்பத்தில் இருந்து தப்பின. கர்வாலில் உள்ள பழைய கிராமங்கள் பல பேரழிவுகளில் இருந்து தப்பித்து வருகின்றன. இது பல வகையான பேரழிவுகளைத் தாங்கக்கூடிய வீடுகளைக் கட்டுவதில் பாரம்பரிய அறிவின் மதிப்பைக் காட்டுகிறது. இந்த பாரம்பரிய அறிவை அங்கீகரிப்பதும் பயன்படுத்துவதும் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு நன்கு பொருந்தக்கூடிய வீடுகள் மற்றும் சமூகங்களை உருவாக்க உதவுகிறது.
தாய்லாந்தில் உள்ள மோகன் பழங்குடியினர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். நிலம் நடுங்கும் போது, கடலும் நகரும். கடல் விரைவாகப் பின்வாங்கும்போது, பழங்குடியினர் உயரமான நிலத்திற்கு சென்று விடுவதாக தெரிவிக்கின்றனர். அவர்களின் பாரம்பரிய முன் எச்சரிக்கை அமைப்பு 2004 இந்தியப் பெருங்கடல் ஏற்பட்ட சுனாமியில் இருந்து தப்பிக்க அவர்களுக்கு உதவியது.
முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளின் முக்கியத்துவம்:
பேரிடர்களால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கும் அமைப்புகளும், முன்னறிவிப்புகளும் முக்கியமானவை. பல ஆண்டுகளாக சூறாவளி முன்னறிவிப்பு (cyclone forecasting) பெரிதும் மேம்பட்டுள்ளது. இது உயிர் இழப்பைக் குறைத்துள்ளது. முன்னறிவிப்பு மற்றும் சரியான நேரத்தில் தொடர்பு கொள்வதில் தொடர்ந்து முதலீடு செய்வது தீவிர வானிலை நிகழ்வுகளின் இழப்புகளைக் குறைப்பதற்கு முக்கியமான எச்சரிக்கும் அமைப்பாகும்.
பேரிடர் மேலாண்மையில் தவறுகளுக்கு இடமில்லை. சிறிய பிழைகள் பெரிய பகுதிகள் மற்றும் பல மக்களைப் பாதிக்கும் பெரிய பேரழிவுகளுக்கு வழிவகுக்கும். புதிய தொழில்நுட்பம் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும். பெரிய பகுதி கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக்கைகளை அனுப்பலாம். செயற்கைக்கோள் படங்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகள் ஆபத்தான பகுதிகளை அடையாளம் காண முடியும். இந்தக் கருவிகள் பயனுள்ள மேற்பார்வை திட்டங்களை உருவாக்க உதவும்.
இயற்கைக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வளர்ச்சி கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அனைத்தையும் சரி செய்ய பல ஆண்டுகளாகும். சமநிலையை மீட்டெடுக்க பல தலைமுறைகள் எடுக்கும். தற்போதைய மாற்றங்களை நாம் சரி செய்து வாழ வேண்டும். எதிர்காலத்தை சிறப்பாக கையாள கடந்த கால தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
எழுத்தாளர் சம்போதி ஆராய்ச்சி மற்றும் தொடர்புகளின் (Sambodhi Research & Communications) இணை நிறுவனர் மற்றும் தலைமை அறிவு அதிகாரியக உள்ளார்.