திறன் மேம்பாட்டில் உள்ள சவால்கள் - தினேஷ் சூத்

 பட்ஜெட் முன்மொழிவுகள்: அமலாக்கம் முக்கியமானது


மத்திய நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திறன் குறைபாடுகளை  நிவர்த்தி செய்ய, திறனை ஊக்குவிக்க மூன்று புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுப்பிக்கப்பட்ட மாதிரி திறன் கடன் திட்டம்


உயர்நிலை திறன் படிப்புகளுக்கான அதிகபட்ச கடன் தொகை ₹1.5 லட்சம் ரூபாயிலிருந்து ₹7.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டடுள்ளது.

இதில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 1.5% ஆக இருக்கும். இது மேம்பட்ட நிலை திறன் படிப்புகளை இளைஞர்களுக்கு மிகவும் அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


கடன் அணுகல் மேம்பாடுகள்:

 

திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Skill Development and Employment (MSDE)) இப்போது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (non-banking finance companies (NBFCs)) குறு நிதி நிறுவனங்கள் (micro-finance institutions) ஆகியவற்றில் மாற்றங்களை செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் கடன் தொகையில் 75% வரை உத்தரவாதத்துடன் ₹7.5 லட்சம் ரூபாய்  வரை அடமானம் இல்லாத கடன் பெறலாம். ஆண்டுதோறும் 25,000 ஆர்வலர்களை ஆதரிப்பதே குறிக்கோளாக கொண்டுள்ளது. ஜூலை 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான கடன் உத்தரவாத நிதித் திட்டம் (Credit Guarantee Fund Scheme), ₹1.5 லட்சம் ரூபாய் சிறிய கடன் அளவு கொண்டது. மேலும், தனியார் வங்கிகள் அரசாங்க திட்டங்களுக்கு நிதியளிப்பதில் மெதுவாக உள்ளன.  கடந்த பத்தாண்டுகளில் 10,077 கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே ₹115.75 கோடி ரூபாய்  கடன்களை வழங்கியுள்ளன.


புதிய திறன் முயற்சிகள்


   நிதிநிலை அறிக்கையில், மாதிரி திறன் கடன் திட்டம் (Model Skill Loan Scheme) சுகாதாரம், அழகு-ஆரோக்கியம், தகவல் தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு, அறிவியல், மேகக் கணினி  பயன்பாடுகள், டிஜிட்டல் சந்தைப்படுத்தல்,  அனிமேஷன், கேமிங், கிராஃபிக் வடிவமைப்பு மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.


    மேலும் நிதிநிலை அறிக்கையில், ₹ 60,000 கோடி  ரூபாய்  ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்துறை சார்ந்த திறன்களை வழங்குவதன் மூலம் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக 1,000 தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை  மேம்படுத்துவதை இது உள்ளடக்குகிறது. 500 சிறந்த நிறுவனங்களில் வேலை முன் ஏற்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்கும், இது ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளது .இந்த திட்டம் இளைஞர்களின் வேலையின்மையைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும்  வேலை முன் ஏற்பாட்டிற்கான முயற்சிகள் வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு  மிகவும் பயனளிக்கும்.


எதிர்காலத்தில், நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயிற்சியாளர்களை எடுத்துக்கொள்வதற்கும், அவர்களின் பெருநிறுவன சமூக பொறுப்பு (Corporate Social Responsibility (CSR)) நிதிகள் மூலம் பயிற்சிக்கு நிதியளிப்பதற்கும் அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும். இந்த திட்டங்கள் பொருத்தமான அனுபவத்தை வழங்குவதன் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பெரிதும் மேம்படுத்தும். இருப்பினும், அவற்றின் வெற்றி சரியான செயல்படுத்தல், செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறலைப் பொறுத்தது.


கட்டுரையாளர், ஓரேன் இன்டர்நேஷனலின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர். மேலும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (என்.எஸ்.டி.சி) பயிற்சி கூட்டாளர் ஆவார்.



Original article:

Share: