இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் உணவுப் பணவீக்கம் கொள்கைப் பாதையை வகுக்கும் -Editorial

 பயிர்கள் அறுவடை மற்றும் புதிய கிடங்கு (mandi) வரவு காரணமாக, விலை குறையத் தொடங்கும். உணவு மற்றும் விவசாய அமைப்பின் (Food and Agriculture Organization (FAO)) உணவு விலைக் குறியீட்டின் (food price index) மூலம் குறிப்பிட்டப்படி, உலகளாவிய உணவு விலைகள் ஏற்கனவே ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.


ஆகஸ்ட் கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (monetary policy committee(MPC)) வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கவும், அதன் இருப்பைத் திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்தும் நிலைப்பாட்டை பராமரிக்கவும் முடிவு செய்தது. நுகர்வோர் விலைக் குறியீட்டால் (consumer price index) அளவிடப்படும் மொத்த சில்லறை பணவீக்கம், மே மாதத்தில் 4.8 சதவீதமாக இருந்தது, ஜூன் மாதத்தில் 5.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, உணவுப் பொருட்களின் விலை உயர்வால் அதிகரித்துள்ளது. இதற்கு முன், ​​இரண்டாவது காலாண்டில் விலைகளில் சாதகமான நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. முழு ஆண்டுக்கான பணவீக்கத்தை 4.5 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதனை தொடர்ந்து வளர்ச்சியானது, இந்த ஆண்டு பொருளாதாரம் 7.2 சதவீதமாக வளரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் நாணயக் கொள்கைக் குழு (monetary policy committee(MPC)) கவனம் செலுத்த அனுமதிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தனது கருத்துக்களில், "பணவீக்கம் தொடர்ந்து இருக்க வேண்டும்" என்றும், "நீடித்த அடிப்படையில் பணவீக்கத்தின் இலக்கான 4 சதவீதத்திற்கு சீரமைப்பதில்" கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


ஜூன் மாதத்தில், உணவு விலைக் குறியீடு (food price index) முந்தைய மாதத்தில் 8.69% லிருந்து 9.36% ஆக அதிகரித்துள்ளது. தானியங்கள் (cereals), பருப்பு வகைகள் (pulse) மற்றும் காய்கறிகள் (vegetables) போன்ற உணவு வகைகளில் பணவீக்கம் அதிகமாக உள்ளது. அதிக உணவு பணவீக்கத்தால், வீட்டு உபயோகப் பொருட்களின் பணவீக்கத்தின் (household inflation) எதிர்பார்ப்புகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து கவலைகள் உள்ளன. சமீபத்திய மாதங்களில், அதிக உணவு விலைகள் காரணமாக பணவீக்கம் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன என்று ஆளுநர் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார். உணவு பணவீக்கம் அதிகமாக இருந்து அதன் எதிர்பார்ப்புகள் இணைக்கப்படாமல் இருந்தால், அது முக்கிய பணவீக்கமாகப் (core inflation) பரவக்கூடும். உணவு மற்றும் எரிபொருளை உள்ளடக்காத முக்கிய பணவீக்கம் (core inflation) ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. உண்மையில், சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டது போல், முக்கிய பணவீக்கம் மே மற்றும் ஜூன் மாதங்களில் 3.1 சதவிகிதம் "வரலாற்றுக் குறைவாக" (historic low) இருந்தது. இந்த நிலைமை முக்கிய பணவீக்கத்திற்கும் ஒட்டுமொத்த பணவீக்கத்திற்கும் இடையே வளர்ந்து வரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.


முக்கியப் பொருளாதாரங்களில் உள்ள மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளன. ஜூன் மாதத்தில், ஐரோப்பிய மத்திய வங்கி (European Central bank) வட்டி விகிதங்களைக் குறைத்ததுடன், சமீபத்தில், இங்கிலாந்து வங்கியும் (Bank of England) வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் (US Federal Reserve) தனது செப்டம்பர் மாத கூட்டத்தில் வட்டி விகித குறைப்புக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டியுள்ளது. சமீபத்திய, அமெரிக்க தொழிலாளர் சந்தை தரவு (US labour market data) எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாக இருந்தது. இது பெடரலால் ஆழமான விகித வெட்டுக்களை எதிர்பார்க்க வழிவகுத்தது. அடுத்த, நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டம் அக்டோபரில் நடைபெற உள்ளது. இது, பயிர் அறுவடை மற்றும் புதிய கிடங்கு வரவுகளால் விலை குறைய ஆரம்பிக்கலாம். உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) உணவு விலைக் குறியீட்டின்படி (food price index) உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் ஜூலை மாதத்தில் குறைந்தன. இது உணவுப் பணவீக்கப் போக்குகளைப் பற்றிய தெளிவான பார்வையை நாணயக் கொள்கைக் குழுவுக்கு (MPC) அளிக்கும். இதன் விளைவாக, வட்டி விகித மாற்றங்களைக் கணிப்பது எளிதாக இருக்கும்.



Original article:

Share: